Vinnulagam Nādu·Temple 107 of 108

Thiruppārkadal

திருப்பாற்கடல்

Sheerasāgaram

ஸ்ரீ ஸ்ரீகடல்மகள் நாச்சியார் ஸமேத ஸ்ரீ ஷீராப்திநாதாய நமஹ
Image 1
107
Presiding Deities
MoolavarPārkadal Vannan, Sri Ksheerāpthi Nāthan,
ThāyārSri Kadal Magal Nāchiyār (Sri Boo Devi)
Sayana (Reclining)Faces Vyuham Directions
VimānamAshtānga
PushkaraniAmrudha Theertham, Thirupparkadal
ThirukolamSayana (Reclining)
DirectionVyuham
Location
MandalamVinnulagam
AreaVinnulagam
StateOuterworld
Tradition
Āgamam-
SampradāyamThenkalai
Festivals & Timings
Brahmotsavam-
Days-
Timings-
Recitation
Translation

TP 1.2

475 வையத்துவாழ்வீர்காள்! நாமும்நம்பாவைக்கு *

செய்யும்கிரிசைகள் கேளீரோ * பாற்கடலுள்

பையத்துயின்ற பரமனடிபாடி *

நெய்யுண்ணோம்பாலுண்ணோம் நாட்காலேநீராடி *

மையிட்டெழுதோம் மலரிட்டுநாம்முடியோம் *

செய்யாதனசெய்யோம் தீக்குறளைசென்றோதோம் *

ஐயமும்பிச்சையும் ஆந்தனையும்கைகாட்டி *

உய்யுமாறெண்ணி உகந்தேலோரெம்பாவாய்.

PT 3.9.1

1228 சலங்கொண்டஇரணியனது அகல்மார்வம் கீண்டு

தடங்கடலைக்கடைந்த அமுதம்கொண்டுகந்தகாளை *

நலங்கொண்டகருமுகில்போல் திருமேனி அம்மான்

நாள்தோறும்மகிழ்ந்து இனிதுமருவியுறை கோயில் *

சலங்கொண்டுமலர்சொரியும் மல்லிகைஒண்செருந்தி

சண்பகங்கள்மணநாறும் வண்பொழிலினூடே *

வலங்கொண்டு கயலோடிவிளையாடு நாங்கூர்

வைகுந்தவிண்ணகரம் வணங்குமடநெஞ்சே! (2)

PT 3.10.2

1239 வென்றிமிகுநரகனுரமது அழியவிசிறும்

விறலாழித்தடக்கையன், விண்ணவர்கட்கு * அன்று

குன்றுகொடுகுரைகடலைக்கடைந்துஅமுதமளிக்கும்

குருமணிஎன்னாரமுதம்குலவியுறைகோயில் *

என்றுமிகுபெருஞ்செல்வத்து எழில்விளங்கு மறையோர்

ஏழிசையும்கேள்விகளும்இயன்றபெருங் குணத்தோர் *

அன்றுஉலகம்படைத்தவனையனையவர்கள்நாங்கூர்

அரிமேயவிண்ணகரம்வணங்குமடநெஞ்சே!

TNT 2.15

2066 கல்லுயர்ந்தநெடுமதிள்சூழ்கச்சிமேய

களிறு! என்றும் கடல்கிடந்தகனியே! என்றும் *

அல்லியம்பூமலர்ப்பொய்கைப்பழனவேலி

அணியழுந்தூர்நின்றுகந்தஅம்மான்! என்றும் *

சொல்லுயர்ந்தநெடுவீணைமுலைமேல்தாங்கித்

தூமுறுவல்நகைஇறையேதோன்றநக்கு *

மெல்விரல்கள்சிவப்பெய்தத்தடவிஆங்கே

மென்கிளிபோல்மிகமிழற்றும்என்பேதையே. (2)

STM 13

2685 - ஆழிநீர்

ஆரால்கடைந்திடப்பட்டது? * - அவன்காண்மின்

ஊராநிரைமேய்த்து உலகெல்லாமுண்டுமிழ்ந்தும் *

ஆராததன்மையனாய் ஆங்கொருநாளாய்ப்பாடி *

சீரார்கலயல்குல் சீரடிசெந்துவர்வாய் *

வாரார்வனமுலையாள் மத்தாரப்பற்றிக்கொண்டு *

ஏராரிடைநோவ எத்தனையோர்போதுமாய் *

சீரார்தயிர்கடைந்து வெண்ணெய்திரண்டதனை *

வேரார்நுதல்மடவாள் வேறோர்கலத்திட்டு *

நாராருறியேற்றி நன்கமையவைத்ததனை *

போரார்வேற்கண்மடவாள் போந்தனையும்பொய்யுறக்கம் *

ஓராதவன்போல் உறங்கியறிவுற்று *

தாரார்தடந்தோள்கள் உள்ளளவும்கைநீட்டி *

ஆராதவெண்ணெய்விழுங்கி *