PT 2.5.1

திருக்கடல் மல்லையில் திருமாலைக் கண்டேன்

1088 பாராயதுண்டுமிழ்ந்தபவளத்தூணைப்
பாடுகடலிலமுதத்தைப்பரிவாய்கீண்ட
சீரானை * எம்மானைத்தொண்டர்தங்கள்
சிந்தையுள்ளே முளைத்தெழுந்ததீங்கரும்பினை *
போரானைக்கொம்பொசித்த போரேற்றினைப்
புணர்மருதமிறநடந்தபொற்குன்றினை *
காரானையிடர்கடிந்தகற்பகத்தைக்
கண்டதுநான்கடல்மல்லைத் தலசயனத்தே. (2)
PT.2.5.1
1088 ## pār-āyatu uṇṭu umizhnta paval̤at tūṇaip * paṭu kaṭalil amutattai pari vāy kīṇṭa cīrāṉai *
ĕmmāṉai tŏṇṭar-taṅkal̤ cintaiyul̤l̤e * mul̤aittu ĕzhunta tīm karumpiṉai **
por āṉaik kŏmpu ŏcitta por eṟṟiṉai * puṇar marutam iṟa naṭanta pŏṉ kuṉṟiṉai *
kār āṉai iṭar kaṭinta kaṟpakattaik * kaṇṭatu nāṉ-kaṭalmallait talacayaṉatte-1

Ragam

Kalyāṇi / கல்யாணி

Thalam

Ādi / ஆதி

Bhavam

Self

Simple Translation

1088. In Kadalmallai Thalasayanam I saw the lord, strong as a bull, sweet as the nectar from the milky ocean, generous as the Karpaga tree, bright like a golden hill, sweet as sugarcane in the hearts of his devotees, precious as a coral pillar, who swallowed all the worlds and spit them out, split open the mouth of the Asuran that came as a horse, broke the tusks of the elephant Kuvalayābeedam and walked between the marudam trees and broke them and who saved Gajendra from the crocodile.

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
பார் ஆயது உலகத்தை பிரளய காலத்தில்; உண்டு உமிழ்ந்த உண்டு உமிழ்ந்தவனும்; பவளத் தூணை பவளத் தூண் போலே; தூணை பற்றுவதற்கு இனியவனும்; படு முத்து முதலியன உண்டாகும்; கடலில் ஆழ்ந்த கடலில்; அமுதத்தை அமுதம் போன்றவனும்; பரி குதிரையாக வந்த கேசி அசுரனின்; வாய் கீண்ட வாயைப் பிளந்த; சீரானை வீரனான; எம்மானை எம்பெருமானை; தொண்டர் தங்கள் அடியவர்களின்; சிந்தையுள்ளே மனதில்; முளைத்து எழுந்த தோன்றி வளரும்; தீம் கரும்பினை இனிய கரும்பு போன்றவனும்; போர் ஆனை குவலயாபீடமென்னும் யானையின்; கொம்பு ஒசித்த தந்தங்களை முறித்தவனும்; போர் ஏற்றினை யுத்தஸாமர்த்தியமுள்ளவனும்; புணர் மருதம் இரட்டை மருதமரங்கள்; இற நடந்த முறியும்படி தவழ்ந்தவனும்; பொன் குன்றினை பொன்மலை போல் அழகியவனும்; கார் ஆனை கஜேந்தரனின்; இடர்கடிந்த துன்பத்தை நீக்கினவனுமான; கற்பகத்தை கல்பவருக்ஷம் போன்றவனை; கண்டது நான் நான் கண்டது; கடல்மல்லை திருக்கடல் மல்லை; தலசயனத்தே தலசயனத்தில்
pārāyadhu all of earth (during deluge); uṇdu consumed; umizhndha mercifully let it out; paval̤am being desirable for all similar to coral; thūṇai being the sustainer; padu where pearls etc originate; kadalil in ocean; amudhaththai being enjoyable similar to nectar, one who is mercifully resting; pari of the horse, a form taken by the demon kĕṣi; vāy mouth; kīṇda tore; sīrān one who has the wealth of valour (due to that act); emmānai being my lord; thoṇdar thangal̤ those who surrendered unto him, their; sindhaiyul̤l̤ĕ in the hearts; mul̤aiththu having been born; ezhundha which nurtured; thīm enjoyable; karumbinai one who is sweet like sugarcane; pŏr set to battle; ānai the elephant named kuvalayāpīdam, its; kombu osiththa who broke the tusk; pŏr ĕṝinai one who is like a lion in battle; puṇar being united; marudham the two marudha trees; iṛa to snap and fall down; nadandha one who entered in between those trees; pon kunṛinai one who is beautiful like a golden mountain; kār huge; ānai ṣrī gajĕndhrāzhwān-s; idar danger; kadindha one who eliminated; kaṛpagaththai the most magnanimous emperumān who grants the desires similar to a kalpaka tree; thalasayanam sthala sayanam (where he rests on the ground); kadal mallai in thirukkadalmallai; nān kaṇdadhu ī got to see