NMT 89

பாற்கடலான் பாதமே நினைக

2470 பழுதாகாதொன்றறிந்தேன் பாற்கடலான்பாதம் *
வழுவாவகைநினைந்து வைகல் - தொழுவாரை *
கண்டிறைஞ்சிவாழ்வார் கலந்தவினைகெடுத்து *
விண்திறந்துவீற்றிருப்பார்மிக்கு.
2470 பழுது ஆகாது ஒன்று அறிந்தேன் * பாற்கடலான் பாதம் *
வழுவாவகை நினைந்து வைகல் தொழுவாரை **
கண்டு இறைஞ்சி வாழ்வார் * கலந்த வினை கெடுத்து *
விண் திறந்து வீற்றிருப்பார் மிக்கு 89
2470 pazhutu ākātu ŏṉṟu aṟinteṉ * pāṟkaṭalāṉ pātam *
vazhuvāvakai niṉaintu vaikal - tŏzhuvārai **
kaṇṭu iṟaiñci vāzhvār * kalanta viṉai kĕṭuttu *
viṇ tiṟantu vīṟṟiruppār mikku -89

Ragam

Aṭāṇa/ அடாணா

Thalam

Aḍa / அட

Bhavam

Self

Simple Translation

2470. I know for certain that to worship the divine feet of the god resting on the milky ocean is not a mistake. If devotees worship the god every day without unfailingly the results of their karmā will not come to them and they will go to Vaikuntam and stay there happily.

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simplified meaning of those verse.)
பழுது ஆகாது வீணாகாத; ஒன்று ஒரு உபாயத்தை; அறிந்தேன் தெரிந்து கொண்டேன்; பாற்கடலான் பாற்கடல் நாதனின்; பாதம் திருவடிகளை; வழுவாவகை தவறாமல்; நினைந்து பற்றி; வைகல் எப்போதும்; தொழுவாரை வணங்குபவர்களை; கண்டு இறைஞ்சி கண்டு வணங்கி; வாழ்வார் வாழ்பவர்கள் பாகவத பக்தர்கள்; கலந்த ஆத்மாவோடு சேர்ந்திருக்கும்; வினை தீவினைகளை; கெடுத்து தொலைத்து; விண் திறந்து பரமபதவாசலைத் திறந்து; மிக்கு உட்சென்று; வீற்றிருப்பார் வீற்றிருப்பார்கள்
pazhudhu āgādhu onṛu faultless (superior) means; aṛindhĕn ī knew; pāl kadalān pādham the divine feet of kshīrābdhinātha (lord of milky ocean); vazhuvā vagai ninaindhu meditating without any error; thozhuvārai those who constantly worship; kaṇdu (reaching and) having dharṣan of (seeing); iṛainji worshipping; vāzhvār those who live (devotees of emperumān’s followers); kalandha vinai keduththu getting rid of the bad deeds connected with āthmā (soul); viṇ thiṛandhu opening the entrance to paramapadham (ṣrīvaikuṇtam); mikku with greatness; vīṝiruppār will be residing