PTM 15.55

தசாவதாரம் எடுத்தவனே என்னை மயக்கியவன்

2767 மன்னும்வடமலையை மத்தாகமாசுணத்தால் *
மின்னுமிருசுடரும் விண்ணும்பிறங்கொளியும் *
தன்னினுடனே சுழலமலைதிரித்து * ஆங்கு
இன்னமுதம் வானவரையூட்டி *
அவருடைய மன்னும்துயர்கடிந்த வள்ளலை *
2767 maṉṉum vaṭa malaiyai mattāka, mācuṇattāl *
miṉṉum iru cuṭarum viṇṇum, piṟaṅku ŏl̤iyum *
taṉṉiṉuṭaṉe cuzhala, malai tirittu *
āṅku iṉ amutam vāṉavarai ūṭṭi *
avaruṭaiya maṉṉum tuyar kaṭinta val̤l̤alai * 57

Ragam

Nādhanāmakriya / நாதநாமக்ரியை

Thalam

Ādi / ஆதி

Bhavam

Nāyaki (lovelorn lady)

Divya Desam

Simple Translation

2767. “Using Mandara mountain as a churning stick and the snake Vāsuki as the rope, he churned the milky ocean and the bright sun, moon and all shining things in the sky swirled around as he churned. The generous god took the sweet nectar from the ocean, gave it to the gods in the sky and removed their affliction. (57)

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
மன்னும் வட வட திசையில் உள்ள; மலையை மந்திர மலையை; மத்தாக மத்தாக நாட்டி வாசுகி என்னும்; மாசுணத்தால் பாம்பை கயிறாகச் சுற்றி; மின்னும் ஒளியுடன் கூடிய; இரு சுடரும் சூரிய சந்திரர்களும்; விண்ணும் ஆகாசமும்; பிறங்கு மற்றும்; ஒளியும் மற்றும் பல பிரகாசிப்பவைகளும்; தன்னுடனே சுழல தன்னோடு சுழல; மலை ஆங்கு அந்த மந்தரமலையைச் சுழற்றி; திரித்து கடல் கடைந்து; இன் அமுதம் இனிய அமுதத்தை; வானவரை ஊட்டி தேவர்களுக்கு அளித்து; அவருடைய அந்த தேவர்களுடைய; மன்னும் துயர் நெடுநாளைய துக்கத்தை; கடிந்த போக்கடித்த; வள்ளலை எம்பெருமானை
mannum vada malaiyai the manthara (a celestial) mountain which was ancholred firmly; maththu āga as a churning shaft; māsuṇaththāl with a snake (vāsuki, encircling); minnum iru sudarum piṛangu ol̤iyum thanninudanĕ suzhala malai thiruththu churning that manthara mountain (churning the ocean) such that the radiant moon, sun, sky and other lustrous entities spun around with him; vānavarai in amudham ūtti offering sweet nectar to celestial entities; mannum thuyar kadindha one who drove away their long standing fear of death; val̤l̤alai the greatly generous entity