TCV 17

நீ எப்படியும் பல மூர்த்திகள் ஆனாய்?

768 ஏகமூர்த்திமூன்றுமூர்த்திநாலுமூர்த்தி நன்மைசேர் *
போகமூர்த்திபுண்ணியத்தின்மூர்த்தி எண்ணில்மூர்த்தியாய் *
நாகமூர்த்திசயனமாய் நலங்கடல்கிடந்து * மேல்
ஆகமூர்த்தியாயவண்ணம் என்கொல்? ஆதிதேவனே!
768 eka mūrtti mūṉṟu mūrtti * nālu mūrtti naṉmai cer *
poka mūrtti puṇṇiyattiṉ mūrtti * ĕṇ il mūrttiyāy **
nāka mūrtti cayaṉamāy * nalaṅ kaṭal kiṭantu mel *
āka mūrtti āya vaṇṇam * ĕṉ kŏl? ātitevaṉe (17)

Ragam

Aparūpa / அபரூப

Thalam

Jambai / ஜம்பை

Bhavam

Self

Reference Scriptures

BG. 9-10, 9-11

Divya Desam

Simple Translation

768. You are unique, but you, limitless, are also the three gods, Shivā, Vishnu and Nānmuhan, and the four gods. You who rest on Adishesha on the wide milky ocean are the source of good karmā, and give joy and goodness to all. No one can comprehend your form. How can you, the ancient god, come to the world in human form?

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
ஆதிதேவனே! முழுமுதற் கடவுளே!; ஏகமூர்த்தி பரமபதத்திலிருப்பவனே!; மூன்று மூர்த்தி மும் மூர்த்தியாய்!; நாலு மூர்த்தி காலத்தைச் சரீரமாகக் கொண்ட; நன்மைசேர் கிருபை செய்யும்; போகமூர்த்தி போகமூர்த்தி; புண்ணியத்தின் புண்ணியத்தின்; மூர்த்தி பலமாக இருப்பதாய்; எண் இல் எண்ணற்ற; மூர்த்தியாய் பல பல மூர்த்தியாய்; நலங் கடல் நல்ல பாற்கடலில்; நாக மூர்த்தி ஆதிசேஷனைப் படுக்கையாகக் கொண்டு; சயனமாய் கிடந்து மேல் சயனித்தருளும்; ஆக மூர்த்தி அடியார்கள் உகக்கும் விதமாக; ஆய வண்ணம் அர்ச்சாவதாரமாக அவதரித்தது; என் கொல் எத்துணை ஆச்சர்யம்!