NAT 5.7

அழகிய குயிலே! சங்குசக்ரபாணியை வரக் கூவாய்

551 பொங்கியபாற்கடல்பள்ளிகொள்வானைப்
புணர்வதோராசயினால் * என்
கொங்கைகிளர்ந்துகுமைத்துக்குதுகலித்
தாவியையாகுலஞ்செய்யும் *
அங்குயிலே! உனக்கென்னமறைந்துறைவு ?
ஆழியும்சங்குமொண்தண்டும் *
தங்கியகையவனைவரக்கூவில் நீ
சாலத்தருமம்பெறுதி.
551 பொங்கிய பாற்கடல் பள்ளிகொள்வானைப் *
புணர்வது ஓர் ஆசையினால் * என்
கொங்கை கிளர்ந்து குமைத்துக் குதுகலித்து *
ஆவியை ஆகுலம் செய்யும்
அம் குயிலே ** உனக்கு என்ன மறைந்து உறைவு? *
ஆழியும் சங்கும் ஒண் தண்டும் *
தங்கிய கையவனை வரக் கூவில் * நீ
சாலத் தருமம் பெறுதி (7)
551 pŏṅkiya pāṟkaṭal pal̤l̤ikŏl̤vāṉaip *
puṇarvatu or ācaiyiṉāl * ĕṉ
kŏṅkai kil̤arntu kumaittuk kutukalittu *
āviyai ākulam cĕyyum
am kuyile ** uṉakku ĕṉṉa maṟaintu uṟaivu? *
āḻiyum caṅkum ŏṇ taṇṭum *
taṅkiya kaiyavaṉai varak kūvil * nī
cālat tarumam pĕṟuti (7)

Ragam

Ānandabhairavi / ஆனந்தபைரவி

Thalam

Ādi / ஆதி

Bhavam

Nāyaki (lovelorn lady)

Divya Desam

Simple Translation

551. With the desire of uniting with Him, my bosom rejoices, giving me immense distress. O beautiful cuckoo bird, why do you hide? Coo and call Him Make the One with the discus, the conch and the strong club to come to me, You will have the good karmā of doing many generous acts.

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simplified meaning of those verse.)
அம் குயிலே! அழகிய குயிலே!; பொங்கிய அலை பொங்கும்; பாற்கடல் பாற்கடலில்; பள்ளி பள்ளி; கொள்வானை கொண்டுள்ள பெருமானுடன்; புணர்வது சேர வேண்டும் என்ற; ஓர் ஆசையினால் ஓர் ஆசையினால்; என் கொங்கை என் மார்பு; கிளர்ந்து களித்து; குமைத்துக் உற்சாகம் கொண்டு; குதுகலித்து குதூகலித்து; ஆவியை உயிரை உருக்கி; ஆகுலம் செய்யும் துன்புறுத்துகின்றன; மறைந்து கண்ணுக்குப் படாமல் நீ மறைந்து; உறைவு இருப்பதனால்; உனக்கு என்ன உனக்கு என்ன பயன்; ஆழியும் சங்கும் சங்கு சக்கரம்; ஒண் தண்டும் கதை ஆகியவற்றை; தங்கிய கையிலேந்திய; கையவனை பெருமானை; வரக் கூவில் நீ வரும்படி நீ கூவுவாயாகில்; சாலத் தருமம் பெறுதி தர்மம் செய்தவளாவாய்

Detailed WBW explanation

O resplendent cuckoo! Yearning to unite with Emperumān, who reposes on Thiruppārkadal—the ocean of milk stirred by tumultuous waves—my fervent heart swells with rapture, as my robust bosom melts away my life in blissful perplexity. What benefit lies for you in concealment? Should you sing in such a manner that Emperumān, whose divine hands gracefully wield the celestial disc, conch, and mace, is compelled to grace this vicinity, then verily, you would have accomplished a most exalted act.