TNT 2.15

திருமால் புகழையே பாடுகிறாள் என் மகள்

2066 கல்லுயர்ந்தநெடுமதிள்சூழ்கச்சிமேய
களிறு! என்றும் கடல்கிடந்தகனியே! என்றும் *
அல்லியம்பூமலர்ப்பொய்கைப்பழனவேலி
அணியழுந்தூர்நின்றுகந்தஅம்மான்! என்றும் *
சொல்லுயர்ந்தநெடுவீணைமுலைமேல்தாங்கித்
தூமுறுவல்நகைஇறையேதோன்றநக்கு *
மெல்விரல்கள்சிவப்பெய்தத்தடவிஆங்கே
மென்கிளிபோல்மிகமிழற்றும்என்பேதையே. (2)
2066 ## kal uyarnta nĕṭu matil̤ cūzh kacci meya
kal̤iṟu ĕṉṟum * kaṭal kiṭanta kaṉiye! ĕṉṟum *
alliyam pū malarp pŏykaip pazhaṉa veli *
aṇi azhuntūr niṉṟu ukanta ammāṉ! ĕṉṟum *
cŏl uyarnta nĕṭu vīṇai mulai mel tāṅkit *
tū muṟuval nakai iṟaiye toṉṟa nakku *
mĕl viralkal̤ civappu ĕytat taṭavi āṅke *
mĕṉ kil̤ipol mika mizhaṟṟum ĕṉ petaiye-15

Ragam

Sāveri / ஸாவேரி

Thalam

Jambai / ஜம்பை

Bhavam

Nāyaki (lovelorn lady)

Simple Translation

2066. “My daughter says, ‘He, mighty as an elephant, stays in Thirukkachi surrounded by strong stone walls. He is a sweet fruit and he rests on Adisesha on the milky ocean. Our father happily stays in beautiful Thiruvazhundur surrounded with fields, ponds and blooming alli flowers. ’ My innocent daughter carries a veena that touches her breasts, smiles beautifully and plucks it with her fingers, making them red as she sings like a prattling parrot. ”

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
கல் உயர்ந்த கற்களால் கட்டப்பட்ட உயர்ந்த; நெடு மதிள் சூழ் பெரிய மதிள்களால் சூழ்ந்த; கச்சி மேய காஞ்சீபுரத்திலே பொருந்தியிருக்கும்; களிறு! என்றும் யானை போன்றவனே என்றும்; கடல் கிடந்த திருப்பாற்கடலில் கிடந்த; கனியே! என்றும் கனிபோன்றவனே! என்றும்; அல்லியம் தாதுக்கள் மிக்க; பூ மலர் மலர்களையுடைய; பொய்கை பொய்கைகளையும்; பழன வேலி நீர் நிலைகளையும் வேலியாக உடைய; அணி அழுந்தூர் அழகிய திருவழுந்தூரிலே; நின்று உகந்த நின்று உகந்திருக்கின்ற; அம்மான்! என்றும் பெருமானே! என்று சொல்லி; சொல் உயர்ந்த நாதம் மிக இருக்கும்; நெடு வீணை பெரிய வீணையை; முலை மேல் மார்பின் மேல்; தாங்கி தாங்கிக் கொண்டு; தூ முறுவல் நகை தூய புன் முறுவலுடன் பல்வரிசை; இறையே தோன்ற நக்கு தோன்ற சிறிதே சிரித்து; மெல் விரல்கள் தனது மெல்லியவிரல்கள்; சிவப்பு எய்த சிவக்கும்படியாக; தடவி ஆங்கே வீணையை மீட்டி; என் பேதையே என்பெண்; மென் கிளி போல் கிளிப்பிள்ளைபோல்; மிக மிழற்றும் பாடுகிறாள்
kal uyarndha nedu madhil̤ sūzh Constructed using rocks, and surrounded by big towering walls,; kachchi mĕya being present in such kāncheepuram’s thiruppādagam; kal̤iṛu enṛum ŏ emperumān who is like a must elephant, and,; kadal kidandha kaniyĕ enṛum who is like a fruit sleeping in the divine ocean of milk, and,; ammān enṛum who is the lord; ninṛu ugandha who is happy standing in; aṇi azhundhūr the beautiful dhivya dhĕṣam thiruvazhundhūr; alli am pū malar poygai that is having ponds with beautiful and fragrant flowers pregnant with pollen, and; pazhanam agricultural fields,; vĕli as the surrounding fences, (saying these),; thāngi propping; mulai mĕl upon her breast; veeṇai the veeṇā instrument that is; sol uyarndha high in tone; nedu long in harmonic range,; thū muṛuval she with pure smile,; nagai and with her well set teeth; iṛaiyĕ thŏnṛa being visible a little,; nakku is laughing, and; thadavi caressing the veeṇā,; mel viralgal̤ (that her) thin fingers,; sivappu eydha become reddish,; āngĕ and after that,; en pĕdhai my daughter,; men kil̤i pŏl like a small parrot,; miga mizhaṝum makes melodies in many ways.

Detailed WBW explanation

Kal uyarndha, etc. - The Divine Name indeed serves as a sanctuary in peril, rejuvenates the spirit, and offers immense joy. In pāsuram 13, the efficacy of the Divine Name during times of distress is extolled; pāsuram 14 elaborates on its rejuvenating power. In this pāsuram, the focus shifts to its aspect of delight.

Kal … – The attributes of the surrounding wall

+ Read more