PT 3.2.7

புண்ணிய தீர்த்தங்கள் சூழ்ந்தது திருச்சித்திரகூடம்

1164 மௌவல்குழலாய்ச்சிமென்தோள்நயந்து
மகரம்சுழலச்சுழல்நீர்பயந்த *
தெய்வத்திருமாமலர்மங்கைதங்கு
திருமார்பனைச்சிந்தையுள்வைத்துமென்பீர்! *
கௌவைக்களிற்றின்மருப்பும் பொருப்பில்
கமழ்சந்தும்உந்திநிவாவலங்கொள் *
தெய்வப்புனல்சூழ்ந்து அழகாய தில்லைத்
திருச்சித்ரகூடம்சென்றுசேர்மின்களே.
PT.3.2.7
1164 mauval kuzhal āycci mĕṉ tol̤ nayantu *
makaram cuzhalac cuzhal nīr payanta *
tĕyvat tiru mā malar maṅkai taṅku *
tirumārpaṉaic cintaiyul̤ vaittum ĕṉpīr **
kauvaik kal̤iṟṟiṉ maruppum pŏruppil *
kamazh cantum unti nivā valam kŏl̤ *
tĕyvap puṉal cūzhntu azhaku āya * tillait
tiruccitrakūṭam cĕṉṟu cermiṉkal̤e-7 **

Ragam

Shankarābharaṇa / சங்கராபரண

Thalam

Aḍa / அட

Bhavam

Self

Simple Translation

1164. If you want to keep in your heart the lord who loved the soft arms of Nappinnai, the cowherd girl adorned with jasmine flowers on her hair, and the divine Lakshmi, born from the milky ocean rolling with waves, whom he keeps on his divine chest, just go to sacred Thillai Chitrakudam surrounded by the divine river Vellāru that carries elephants’ tusks and sandalwood from the hills while the moon circles around that lovely place.

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
மௌவல் முல்லைப்பூவை; குழல் ஆய்ச்சி அணிந்துள்ள நப்பின்னையின்; மென் தோள் மென்மையான தோள்களை; நயந்து அணைத்தவனும்; மகரம் சுழல மீன்கள் சுழலும்; சுழல் நீர் பயந்த சுழல் நீர் தோன்றிய கடலில்; தெய்வத் திரு மா பிறந்த திருமகள்; மலர் மங்கை தங்கி இருக்குமிடமான; திருமார்பனைச் சிந்தையுள் எம்பெருமானைப் பற்ற; வைத்தும் என்பீர்! விரும்பும் அன்பர்களே!; கௌவைக் களிற்றின் பிளிறுகிற யானையின்; மருப்பும் கொம்புகளையும்; பொருப்பில் கமழ் மலையிலுள்ள மணங்கமழும்; சந்தும் உந்தி சந்தன மரங்களையும் தள்ளிக்கொண்டு; நிவா வலம் கொள் ’நிவா’ என்கிற வெள்ளாற்றின்; தெய்வப் புனல் சூழ்ந்து அழகு ஆய புனித ஜலம் சூழ்ந்த; தில்லைத் திருச்சித்ரகூடம் தில்லைத் திருச்சித்ரகூடம்; சென்று சேர்மின்களே சென்று சேருங்கள்
mauval jasmine flower; kuzhal having in divine hair; āychchi nappinnaip pirātti-s; mel tender; thŏl̤ with divine shoulder; nayandhu embraced; magaram fish etc; suzhala to rorate; suzhal comes swirling; nīr payandha given birth by the ocean; dheyvam beautiful; thirumā mālar mangai periya pirāttiyār; thangu residing; thirumārvanai having divine chest; sindhaiyul̤ in the heart; vaiththum enbīr oh you who are desiring to place! (due to fighting with the lion); kauvai screaming; kal̤iṝin elephant-s; maruppum tusks; poruppil in the mountain; kamazh spreading good fragrance; sandhum sandalwood; undhi pushing and coming; nivā vel̤l̤āṛu, the river; valam kol̤ going around in circle; dheyvam beautiful; punal sūzhndhu surrounded by water; azhagāya attractive; thillaith thiruchchiththirakūdam thillaith thiruchchiththirakūdam; senṛu sĕrmingal̤ go and reach.