PT 2.7.1

பிரானே! என் மகள் நின்னையே விரும்புகிறாள்

1108 திவளும்வெண்மதிபோல் திருமுகத்தரிவை
செழுங்கடலமுதினிற்பிறந்த
அவளும் * நின்னாகத் திருப்பதும்அறிந்தும்
ஆகிலும்ஆசைவிடாளால் *
குவளையங்கண்ணிகொல்லியம்பாவை
சொல்லுநின்தாள்நயந்திருந்த
இவளை * உன்மனத்தால்என்நினைந்திருந்தாய்?
இடவெந்தைஎந்தைபிரானே! (2)
PT.2.7.1
1108 ## tival̤um vĕṇ matipol tiru mukattu arivai * cĕzhuṅ kaṭal amutiṉil piṟanta
aval̤um * niṉ ākattu iruppatum aṟintum * ākilum ācai viṭāl̤āl **
kuval̤ai am kaṇṇi kŏlli am pāvai * cŏllu niṉ tāl̤ nayantirunta
ival̤ai * uṉ maṉattāl ĕṉ niṉaintu iruntāy? * iṭavĕntai ĕntai pirāṉe-1

Ragam

Sāveri / ஸாவேரி

Thalam

Ādi / ஆதி

Bhavam

Mother

Simple Translation

1108. Her mother says, “Even though my daughter with a lovely face as beautiful as the white shining moon knows that Lakshmi born in the milky ocean with its nectar stays on your chest, she does not stop loving you. She is as beautiful as the doll in the கொல்லி hills and her lovely eyes are like fragrant water-lily blossoms. She loves to worship your feet. What do you think of her in your heart, O father, lord of Thiruvidaventhai?”

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
திவளும் வெண் ஒளிவிடும் வெளுத்த; மதிபோல் சந்திரனை ஒத்த; திரு முகத்து அழகிய முகத்தையுடையவளாய்; அரிவை யௌவனமுடையவளாய்; செழும் கடல் பெரிய கடலில்; அமுதினில் அமுதத்தோடு கூடப்; பிறந்த பிறந்தவளான; அவளும் அந்த மஹாலக்ஷ்மி; நின் ஆகத்து உனது திருமார்பிலே; இருப்பதும் இருப்பதை; அறிந்தும் அறிந்திருக்கச்செய்தேயும்; ஆகிலும் பெருமானிடத்தில்; ஆசை விடாளால் ஆசையை விடமுடியவில்லை; குவளை கருநெய்தலுக்கு ஒத்த; அம் கண்ணி அழகிய கண்ணையுடையவளும்; கொல்லி கொல்லி மலையிலுள்ள; அம் பாவை அழகிய பதுமை போன்றவளும்; நின் தாள் உனது திருவடிகளையே; நயந்திருந்த ஆசைபட்டுக் கொண்டிருப்பவளுமான; இவளை இப்பெண் விஷயத்திலே; உன் மனத்தால் என்ன செய்வதாக; என் நினைந்து இருந்தாய் நீ நினைத்திருக்கிறாய்!; இடவெந்தை திருவிடவெந்தையிலிருக்கும்; எந்தை பிரானே! எம்பெருமானே!; சொல்லு கூறி அருள வேண்டும்
thival̤um shining; vel̤ whitish; madhipŏl like moon; thiru beautiful; mugaththu having divine face; arivai one who is in her youth (age group of 19 to 24); sezhu vast; kadal born in the ocean; amudhinil in the nectar; piṛandha one who is born in; aval̤um that periya pirāttiyār; nin your highness-; āgaththu in the divine chest; iruppadhum being mercifully present; aṛindhum even after knowing; āgilum still; āsai desire towards your highness (my daughter); vidāl̤ not giving up;; am beautiful; kuval̤ai like kuval̤ai flower; kaṇṇi having beautiful eyes; kolli made in kolli mountain; am beautiful; pāvai having beauty like that of a doll; nin your highness-; thāl̤ divine feet; nayandhu irundha one who is desiring for; ival̤ai in her matter; un manaththāl in your divine heart; en ninaindhirundhāy what are you thinking?; idavendhai having arrived in thiruvidavendhai; endhai pirānĕ ŏh lord of my clan!; sollu ẏou should mercifully speak a word.