PT 5.3.6

தேவர்கட்கு அமுதளித்தவனே! என்னை ஆட்கொள்

1373 பொங்குநீள்முடிஅமரர்கள்தொழுதெழ அமுதினைக் கொடுத்தளிப்பான் *
அங்குஓராமையதாகிய ஆதி! நின்னடிமையை அருள் எனக்கு *
தங்குபேடையோடூடியமதுகரம் தையலார்குழலணைவான் *
திங்கள்தோய்சென்னிமாடம்சென்றணை திருவெள்ளறை நின்றானே!
PT.5.3.6
1373 pŏṅku nīl̤ muṭi amararkal̤ tŏzhutu ĕzha *
amutiṉaik kŏṭuttal̤ippāṉ *
aṅku or āmai-atu ākiya āti! * -niṉ
aṭimaiyai arul̤ ĕṉakku ** -
taṅku peṭaiyoṭu ūṭiya matukaram *
taiyalār kuzhal aṇaivāṉ *
tiṅkal̤ toy cĕṉṉi māṭam cĕṉṟu aṇai * tiru
vĕl̤l̤aṟai niṉṟāṉe-6

Ragam

Shankarābharaṇa / சங்கராபரண

Thalam

Ādi / ஆதி

Bhavam

Self

Simple Translation

1373. You, the ancient lord took the form of a turtle and helped the gods and the Asurans churn the milky ocean to get the nectar that you gave only to the gods who, adorned with beautiful crowns, worshiped you. You stay in Thiruvellarai where bees that have lovers’ quarrels with their mates fly to the hair of beautiful women and the tops of the palaces touch the moon. I am your slave. Give me your grace.

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
தங்கு பூவிலே தங்கியிருந்த; பேடையோடு பெண் வண்டோடு; ஊடிய மதுகரம் ஆண் வண்டு சேர்ந்து; தையலார் பெண்களின்; குழல் கூந்தல்களில்; அணைவான் மறைந்திருக்க நினைத்து; திங்கள் தோய் சந்திரமண்டலத்தளவு; சென்னி உயர்ந்த சிகரமுடைய; மாடம் மாளிகைகளை; சென்று அணை அடைந்து நின்ற; திருவெள்ளறை திருவெள்ளறையில்; நின்றானே! நின்ற பெருமானே!; பொங்கு நீள் முடி நீண்ட கிரீடத்தை யுடைய; அமரர்கள் தேவர்கள்; தொழுது எழ தன்னை வணங்கி எழ அவர்களுக்கு; அமுதினை அமிருதத்தைத்; கொடுத்தளிப்பான் தந்தருள்வதற்காக; அங்கு ஓர் அங்கு ஓர்; ஆமை அது ஆமையாக அவதரித்த; ஆகிய ஆதி! எம்பெருமானே!; நின் அடிமையை உனக்கு நான் அடியனாயிருக்க; எனக்கு அருள் எனக்கு அருளபுரியவேணும்