TVT 57

தலைவன் பாங்கனுக்குக் கழற்றெதிர் மறுத்தல்

2534 புலக்குண்டலப் புண்டரீகத்தபோர்க்கெண்டை * வல்லியொன்றால்
விலக்குண்டுலாகின்று வேல்விழிக்கின்றன * கண்ணன் கையால்
மலக்குண்டமுதஞ்சுரந்தமறிகடல்போன்றவற்றால்
கலக்குண்டநான்றுகண்டார் * எம்மையாரும்கழறலரே.
2534 pulak kuṇṭalap puṇṭarīkatta pork kĕṇṭai * valli ŏṉṟāl
vilakkuṇṭu ulākiṉṟu vel vizhikkiṉṟaṉa ** kaṇṇaṉ kaiyāl
malakkuṇṭu amutam curanta maṟi kaṭal poṉṟu avaṟṟāl *
kalakkuṇṭa nāṉṟu kaṇṭār * ĕmmai yārum kazhaṟalare57

Ragam

Thalam

Bhavam

Nāyaki (lovelorn lady)

Divya Desam

Simple Translation

2534. He says, “Her face is like a lotus, her eyes are like beautiful kendai fish or sharp spears, her nose is like a vine and she wears earrings in her ears. When our eyes met we felt as if we had drunk the nectar from the milky ocean churned up by the gods. No one will gossip about us—our love is true. ”

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
புல அழகாகத் தோன்றும்; குண்டல குண்டலங்களையுடைய; புண்டரீகத்த தாமரைமலர் போன்ற முகத்திலுள்ள; போர் போர் செய்யும்; கெண்டை கண்களாகிற கெண்டைமீன்கள்; வல்லி ஒன்றால் மூக்காகிய கொடி ஒன்றினால்; விலக்குண்டு குறிக்கிட்டு இடையில் விலக்கப்பட்டு; உலாகின்று வேல் உலாவிக்கொண்டு வேல் போல்; விழிக்கின்றன குரூரமாய் பார்க்கின்ற; அவற்றால் அச்செயல்களால்; கண்ணன் கையால் கண்ணனின் கைகளால்; மலக்குண்டு கடைந்து கலக்கப்பட்டு; அமுதம் சுரந்த அமுதம் வெளிப்படுத்தின; மறி அலைகளையுடைய; கடல் போன்று கடல் போல் அக்கண்களால்; கலக்குண்ட யாம் கலக்கப்பட்ட; நான்று பொழுது அக்கண்களின் நிலைமையை; கண்டார் பார்த்தவர்கள்; எம்மை யாரும் எம்மை யாரும்; கழறலரே குற்றஞ் சொல்லமாட்டார்கள்
pulam visible; kuṇdalam having ear-rings; puṇdarīgaththa on the face which is like a lotus flower; pŏr engaged in a war; keṇdai eyes which are like fish; valli onṛāl with the nose which looks like a creeper; vilakkuṇdu being separated; ulāginṛu are roaming; vĕl cruel, like the weapon spear; vizhikkinṛana are looking; avaṝāl through such activities; kaṇṇan krishṇa’s; kaiyāl with divine hands; malakkuṇdu being agitated; amudham nectar; surandha secreted; maṛi throwing up waves; kadal pŏnṛu like an ocean; kalakkuṇda agitated; nānṛu during that time; kaṇdār those who saw; yārum whosoever; ennai me; kazhaṛalar will not admonish