83

Thiru Tholaivillimangalam

திருத்தொலைவில்லி மங்கலம் (நவதிருப்பதி)

Thiru Tholaivillimangalam

Rettai Thirupati, Navathiruppathi

ஸ்ரீ கருந்தடங்கண்ணி ஸமேத ஸ்ரீ தேவப்பிரான் ஸ்வாமிநே ஸ்ரீஆரவிந்தலோசநாயச நமஹ

Thayar: Sri KarumthaDankanni Nāchiyār
Moolavar: Sri AravinDa Lochanan, Srinivāsan, Devappirān
Utsavar: Srinivāsan
Vimaanam: Kumudha
Pushkarani: Varuna Theertham, Thāmbraparani
Thirukolam: Amarndha (Sitting)
Direction: East
Mandalam: Pandiya Nādu
Area: Tirunelveli
State: TamilNadu
Sampradayam: Thenkalai
Timings: 8:00 a.m. to 12:00 a.m. 4:00 p.m. to 6:00 p.m.
Search Keyword: Tholaivillimangalam
Mangalāsāsanam: Namm Āzhvār
Tamil
Simplified
English
Verse info
Synonyms
Translation

TVM 6.5.1

3387 துவளில்மாமணிமாடமோங்கு
தொலைவில்லிமங்கலம்தொழு
மிவளை * நீரினியன்னைமீர்
உமக்காசையில்லைவிடுமினோ *
தவளவொண்சங்குசக்கரமென்றும்
தாமரைத்தடங்கணென்றும் *
குவளையொண்மலர்க்கண்கள்நீர்மல்க
நின்றுநின்றுகுமுறுமே. (2)
3387 ## துவள் இல் மா மணி மாடம் ஓங்கு *
தொலைவில்லிமங்கலம் தொழும்
இவளை * நீர் இனி அன்னைமீர் * உமக்கு
ஆசை இல்லை விடுமினோ **
தவள ஒண் சங்கு சக்கரம் என்றும் *
தாமரைத் தடம் கண் என்றும் *
குவளை ஒண் மலர்க் கண்கள் நீர் மல்க *
நின்று நின்று குமுறுமே (1)
3387. ##
thuvaLil māmaNi mādamOngu * tholaivilli mangalam thozhum
ivaLai, * neer ini annai meer! * umakku āsai illai vituminO, *
thavaLa oNsangu sakkaramenRum * thāmaraith thadaNGkaNenRum, *
kuvaLai oNmalarkkaNgaL neermalga * ninRu ninRu kumuRumE. 6.5.1

Ragam

சங்கராபரண

Thalam

அட

Bhavam

Thozhi (Friend)

Simple Translation

Ye, mothers, this lady is unto you lost henceforth, Better give up all hopes of her, who the Lord does adore In Tolaivillimaṅkalam where stand tall castles paved with gems flawless, With a mind that whirls and tears welling in her flowery eyes; Utter she can’t the words she feels the urge to express, “The Lord’s lotus eyes broad and His lovely white conch and discus”.

Explanatory Notes

King Janaka showed the horoscope of baby Sītā to the court astrologers. While predicting her great good fortune of getting married to the Supreme Lord and all that, they also foretold her exile into the forests. So also, when Caṭakōpaṉ was born, his parents elicited from the astrologers that he would be endowed with supreme knowledge and become world famous and yet, there + Read more

Word by word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion. Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
துவள் இல் குற்றமில்லாத; மா மணி பெரிய மாணிக்கங்கள் பதித்த; மாடம் ஓங்கு ஓங்கி உயர்ந்த மாடங்களை உடைய; தொலைவில்லிமங்கலம் தொலைவில்லிமங்கலம்; தொழும் இவளை தொழும் இவளிடத்தில்; அன்னைமீர்! தாய்மார்களே!; நீர் இனி இனி நீங்கள்; உமக்கு ஆசை இல்லை ஆசை வைக்காதீர்கள்; விடுமினோ ஆசையை விட்டுவிடுங்கள்; தவள ஒண் சங்கு வெண்மையான ஒளியுள்ள சங்கு; சக்கரம் என்றும் சக்கரம் என்றும்; தாமரைத் தடம் பெரிய தாமரை போன்ற; கண் என்றும் கண்களென்றும்; குவளை ஒண் மலர் அழகிய குவளைமலர் போன்ற; கண்கள் நீர் மல்க கண்களிலே நீர் தேங்க; நின்று நின்று நின்று; குமுறுமே குமுறுகிறாள்
maNi built with ruby; mAdam mansions; Ongu highrise; tholaivillimangalam thiruththolaivillimangalam; thozhum worshipping; ivaLai parAnguSa nAyaki; nIr you who brought her over and showed her; ini after she having become greatly attached; annaimIr who remain -we who have given birth to her can order her-; umakku for you; Asai desire to control her; illai should not have;; vidumin give up the thought that she is obedient;; thavaLam [dhavaLa] having white colour; oN attractive; sangu divine conch; chakkaram divine disc; enRum saying; thAmarai like a lotus; thadam very expansive; kaN divine eyes; enRum saying; kuvaLai neydhal plant-s; oN beautiful; malar flower like; kaNgaL eyes; nIr tears; malga to overflow; ninRu ninRu sustaining (the self, moment after moment); kumuRum weep internally being unable to cry out loudly to express her sorrow.; kumiRum profound; Osai having many different sounds

TVM 6.5.2

3388 குமுறுமோசைவிழவொலித்
தொலைவில்லிமங்கலம்கொண்டுபுக்கு *
அமுதமென்மொழியாளை
நீருமக்குஆசையின்றியகற்றினீர் *
திமிர்கொண்டாலொத்துநிற்கும் மற்றிவள்
தேவதேவபிரானென்றே *
நிமியும்வாயொடுகண்கள்நீர்மல்க
நெக்கொசிந்துகரையுமே.
3388 குமுறும் ஓசை விழவு ஒலித் *
தொலைவில்லிமங்கலம் கொண்டுபுக்கு *
அமுத மென் மொழியாளை * நீர் உமக்கு
ஆசை இன்றி அகற்றினீர் **
திமிர் கொண்டால் ஒத்து நிற்கும் * மற்று இவள்
தேவ தேவபிரான் என்றே *
நிமியும் வாயொடு கண்கள் நீர் மல்க *
நெக்கு ஒசிந்து கரையுமே (2)
3388
kumuRum Osai vizhavolith * tholai villi mangalam kondupukku, *
amutha menmozhiyāLai * neer umakku āsai inRi agaRRineer, *
thimir koNtāloththu niRkum * maRRivaL thEva thEva pirānenRE, *
nimiyum vāyotu kaNgaL neermalga * nekkosindhu karaiyumE. 6.5.2

Ragam

சங்கராபரண

Thalam

அட

Bhavam

Thozhi (Friend)

Simple Translation

Ye, elders, brought you have to a point of no return, This lady with a tongue, sweet and soft, having taken Her to Toḷaiviḻlimaṅkaḻam with its fan-fare of festivals; Dazed she remains and mention of the name of the Lord universal Twists her mouth and brings forth tears in abundance From her eyes and keeps she withering down..

Explanatory Notes

(i) Even the normal environment of Tolaivillimaṅkalam is enticing enough and what to talk of the festivities, with their rich and varied fares! The elders having brought the God-bent Nāyakī during the festival going on there, they stand no chance whatever of weaning her away from the Lord and the allied attractions. Incidentally, we get at the Śāstraik meaning that we + Read more

Word by word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion. Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
குமுறும் ஓசை கம்பீரமான ஓசை; விழவு ஒலி விழா ஒலி பொருந்திய; தொலைவில்லிமங்கலம் தொலைவில்லிமங்கலம்; கொண்டு புக்கு கொண்டு சென்று; அமுத மென் அமுதம் போன்று மென்மையாக; மொழியாளை பேசும் இவளை; நீர் கொண்டு புக்கு நீங்கள் கொண்டு சென்று; உமக்கு உங்களுடன் உறவுமுறையற்று; ஆசை இனறி ஆசையில்லாமல் உங்களைவிட்டு; அகற்றினீர் அகலும்படி செய்தீர்கள்; திமிர் கொண்டால் அது இவள் திமிர் கொண்டவள்; ஒத்து நிற்கும் போல் நிற்பதிலிருந்து தெரிகிறது; மற்று இவள் மேலும் இவள்; தேவ தேவ பிரான் தேவ பிரான்; என்றே என்று சொன்னமாத்திரத்திலே; நிமியும் வாயொடு நெளிகின்ற வாயோடு; கண்கள் நீர் மல்க கண்களில் நீ ததும்ப; நெக்கு ஒசிந்து கட்டுக் குலைந்து; கரையுமே கரைந்து உருகுகிறாள்
vizhavoli having grand festivities; tholaivillimangalam in thiruththolaivillimangalam; koNdu brought; pukku entered; amudham nectar-like relishable; men tender; mozhiyALai parANguSa nAyaki who is having [such tender] speech; nIr you (who know the sweetness of her speech); umakku for you; Asai desire (for that sweet speech); inRi due to not having; agaRRinIr made her lose your relationship;; ivaL she; thimir koNdAl oththu like being proud; niRkum remained silent;; maRRu (if she speaks) otherwise; dhEvar nithyasUris who are divine beings; dhEvar vishvaksEna et al who are leaders; pirAn the benefactor who lets them enjoy; enRE only utters those words reflecting; nimiyum curved; vAyodu having mouth; kaNgaL eyes; nIr tears; malga to overflow; nekku being broken; osindhu weakened; karaiyum melted.; karai the divine porunal [another name of thAmirabharaNi river] bank; koL to consume [overshadow]

TVM 6.5.3

3389 கரைகொள்பைம்பொழில்தண்பணைத் தொலை
வில்லிமங்கலம்கொண்டுபுக்கு *
உரைகொளின்மொழியாளை
நீருமக்காசை யின்றியகற்றினீர் *
திரைகொள்பௌவத்துச்சேர்ந்ததும்
திசைஞாலம்தாவியளந்ததும் *
நிரைகள்மேய்த்ததுமேபிதற்றி
நெடுங்கண்நீர்மல்கநிற்குமே.
3389 கரை கொள் பைம் பொழில் தண் பணைத் *
தொலைவில்லிமங்கலம் கொண்டுபுக்கு *
உரை கொள் இன் மொழியாளை * நீர் உமக்கு
ஆசை இன்றி அகற்றினீர் **
திரை கொள் பௌவத்துச் சேர்ந்ததும் *
திசை ஞாலம் தாவி அளந்ததும் *
நிரைகள் மேய்த்ததுமே பிதற்றி *
நெடும் கண் நீர் மல்க நிற்குமே (3)
3389
karaikoL paimpozhil thaNpaNaith * tholai villi mangalam kondupukku, *
uraikoLin mozhiyāLai * neer umakku āsaiyinRi agaRRineer, *
thiraikoL peLavaththu sErnthathum * thisai NYālam thāvi aLandhathum, *
niraigaL mEyththathumE pithaRRi * nedungaNNeermalga niRkumE. 6.5.3

Ragam

சங்கராபரண

Thalam

அட

Bhavam

Thozhi (Friend)

Simple Translation

Ye, mothers, your hold on this sweet-tongued lady is gone, For you brought her to Tolaivillimaṅkalam with fertile fields and orchards fine, On the river bank; utter she does how unto the Milky-ocean The Lord came, how He spanned the sprawling Earth and grazed The cattle herds and as tears well up her longish eyes, she stands dazed.

Explanatory Notes

(i) Sweet tongued: The Āzhvār’s hymns are very sweet to hear and when one delves into their meanings, the commentaries, however numerous and copious they might be, one cannot plumb their depth fully.

(ii) The elders cannot coax the Nāyakī and get her dislodged from this pilgrim centre, even as it would not be possible to induce the fertile fields and the orchards fed + Read more

Word by word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion. Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
கரை தாமிரபரணி ஆற்றின் கரையை; கொள் விழுங்கும்படி தோன்றும்; பைம் பொழில் பசுமையான சோலைகள் சூழ்ந்த; தண் பணை குளிர்ந்த நிலங்களையுடைய; தொலைவில்லிமங்கலம் தொலைவில்லிமங்கலம்; கொண்டு புக்கு அழைத்துச் சென்று; உரை கொள் உலகமெல்லாம் கொண்டாடும்படியான; இன் மொழியாளை இனிய சொற்களை உடைய இவளை; நீர் உமக்கு நீங்கள் உங்களுக்கு; ஆசை இன்றி ஆசையில்லாமல்; அகற்றினீர் அகற்றினீர்கள்; திரை கொள் அலைகளையுடைய; பெளவத்து பாற்கடலிலே; சேர்ந்ததும் சயனித்திருப்பதையும்; திசை ஞாலம் திசைகளோடு கூடின உலகை; தாவி அளந்ததும் தாவி அளந்ததையும்; நிரைகள் மேய்த்ததுமே பசுக்களை மேய்த்ததையும்; பிதற்றி நினைத்து பிதற்றி கொண்டு; நெடுங் கண் பெரிய கண்களில்; நீர் மல்க நிற்குமே நீர் பெருக நிற்கிறாள்
pai expansive; pozhil garden; thaN cool; paNai fertile field, water body; tholaivillimangalam in thiruththolaivillimangalam; koNdu bringing; pukku entering; urai koL praised by the world; in sweet; mozhiyALai one who is having speech; nIr you (who know the greatness of her speech); umakku for you; Asai desire in that; inRi without; agaRRinIr you made her go far away;; thirai the waves which kept rising due to coming in contact with him; koL having; pauvaththu in the ocean; sErndhadhum how he rested there (for the protection of his devotees); thisai having directions; gyAlam earth; thAvi extending his leg; aLandhadhum how he measured and made it exist for himself; niraigaL herds of cow; mEyththadhumE the simplicity of tending them; pidhaRRi blabbering it (being emotionally overwhelmed); nedu expansive; kaN eyes; nIr tears; malga to overflow; niRkum remained stunned.; niRkum being eternal; nAl classified into four

TVM 6.5.4

3390 நிற்கும்நான்மறைவாணர்வாழ்
தொலைவில்லிமங்கலங்கண்டபின் *
அற்கமொன்றுமறவுறாள்
மலிந்தாள்கண்டீரிவளன்னைமீர் *
கற்குங்கல்வியெல்லாம் கருங்கடல்
வண்ணன்கண்ணபிரானென்றே *
ஒற்கமொன்றுமிலள் உகந்துகந்து
உள்மகிழ்ந்துகுழையுமே.
3390 நிற்கும் நால்மறைவாணர் வாழ் *
தொலைவில்லிமங்கலம் கண்டபின் *
அற்கம் ஒன்றும் அற உறாள் * மலிந்தாள்
கண்டீர் இவள் அன்னைமீர் **
கற்கும் கல்வி எல்லாம் * கருங் கடல்
வண்ணன் கண்ண பிரான் என்றே *
ஒற்கம் ஒன்றும் இலள் உகந்து * உகந்து
உள் மகிழ்ந்து குழையுமே (4)
3390
niRkum nānmaRai vāNar vāzh * tholai villi mangalam kandapin, *
aRga monRum aRavuRāL * malinNthāL kaNteer ivaL annaimeer, *
kaRkum kalviyellām * karungadal vaNNan kaNNa pirānenRE, *
oRgamonRumilaL ugandhukandhu * uLmagizhndhu kuzhaiyumE. 6.5.4

Ragam

சங்கராபரண

Thalam

அட

Bhavam

Thozhi (Friend)

Simple Translation

Ye, elders, this lady has ceased to be modest in the least After beholding Tolaivillimaṅkalam, the Vedic scholars’ seat; All her talks centre round Kaṇṇapirāṉ, the sea-hued Lord And with no reserve, she thaws down, overjoyed.

Explanatory Notes

The Nāyakī was overwhelmed by the sweet chanting of the Vedas in Tolaivillimaṅkalam and she started musing over the Lord Who disseminated the Vedas, at the commencement of the epoch, to the four-headed Brahmā. Her innate modesty is no longer there, in her present rapturous state, and she openly rejoices, speaking solely about the Lord, the ultimate goal of all learning and knowledge.

Word by word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion. Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
நிற்கும் நித்யமான; நான்மறை நான்கு வேதங்களிலும்; வாணர் வாழ் வல்லவர்களான வைதிகர்கள் வாழும்; தொலைவில்லிமங்கலம் தொலைவில்லிமங்கலத்தை; கண்டபின் பார்த்த பின்; அற்கம் ஒன்றும் அடக்க குணத்தை; அற உறாள் அடியோடு விட்டாள்; மலிந்தாள் நாம் நல்லதைச் சொன்னாலும்; கண்டீர் இவள் கேட்க மாட்டாள் இவள்; அன்னைமீர்! தாய்மார்களே!; கற்கும் கல்வி எல்லாம் கற்கும் கல்வி எல்லாம்; கருங்கடல் கருங்கடல் போன்ற; வண்ணன் வடிவழகையுடைய; கண்ண பிரான் என்றே கண்ண பிரான் என்றே; ஒற்கம் ஒன்றும் இலள் தளர்ச்சி சிறிதும் இல்லாமல்; உகந்து உகந்து உகந்து உகந்து; உள் மகிழ்ந்து அகம் மகிழ்ந்து உள்ளம் கனிந்து; குழையுமே குழைகிறாள்
maRai in vEdhams; vANar experts; vAzh living well (due to bhagavath anubhavam); tholaivillimangalam thiruththolaivillimangalam; kaNda pin after seeing; aRa good; aRkam control; onRum any; uRAL not having;; ivaL she; malindhAL became uncontrollable;; annaimIr you who gave birth to her and raised her; kaNdIr have seen!; kaRkum reciting; kalvi words; ellAm everything; karu blackish; kadal like an ocean; vaNNan having the form; kaNNan krishNa who is humble towards his devotees; pirAn great benefactor; enRE as; onRum in any manner; oRkam control; ilaL not having; ugandhu ugandhu becoming more joyful due to meditating upon such aspects; uL in heart; magizhndhu with great joy; kuzhaiyum weakened.; kuzhaiyum having natural tenderness; vAL shining

TVM 6.5.5

3391 குழையும்வாள்முகத்தேழையைத்
தொலைவில்லிமங்கலம் கொண்டுபுக்கு *
இழைகொள்சோதிச்செந்தாமரைக்கண்ணபிரான்
இருந்தமைகாட்டினீர் *
மழைபெய்தாலொக்குங்கண்ணநீரினொடு
அன்றுதொட்டும்மையாந்து * இவள்
நுழையுஞ்சிந்தையளன்னைமீர்! தொழும்
அத்திசையுற்றுநோக்கியே.
3391 குழையும் வாள் முகத்து * ஏழையைத்
தொலைவில்லிமங்கலம் கொண்டுபுக்கு *
இழை கொள் சோதிச் செந்தாமரைக் கண்
பிரான் * இருந்தமை காட்டினீர் **
மழை பெய்தால் ஒக்கும் கண்ண நீரினொடு *
அன்று தொட்டும் மையாந்து * இவள்
நுழையும் சிந்தையள் அன்னைமீர் * தொழும்
அத் திசை உற்று நோக்கியே (5)
3391
kuzhaiyum vāLmugaththEzhaiyaith * tholai villi mangalam kondupukku, *
izhaikoL sOthich chenNthāmaraik kaNpirān * irundhamaikāttineer, *
mazhai peythālokkum kaNNa neerinodu * anRu thottummaiyāndhu, * ivaL
nuzhaiyum sindhaiyaL annaimeer! * thozhum aththisaiyuRRu nOkkiyE. 6.5.5

Ragam

சங்கராபரண

Thalam

அட

Bhavam

Thozhi (Friend)

Simple Translation

Ye, mothers, this lady with forehead bright, deeply absorbed In the Lord’s auspicious traits, unto Tolaivillimaṅkalam you brought And showed her the lotus-eyed Lord of bejewelled radiance; Rapturous she is since, with tears torrential in her eyes And with a heart in His beauty rooted, in that very direction she gazes.

Explanatory Notes

(i) The effulgence of the God-love within is reflected on the Nāyakī’s forehead. By her very nature, she would thaw down in ecstasy, in deep contemplation of the Lord and now that she has been brought by the elders, face to face, with the radiant Lord, bedecked with jewels, at Tolaivillimaṅkalam, her God-intoxication has gone to a very high pitch. The Lord, even when unadorned, + Read more

Word by word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion. Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
அன்னைமீர்! தாய்மார்களே!; குழையும் வாள் உருக்கமுடைய ஒளி பொருந்திய; முகத்து முகத்தை உடைய; ஏழையை ஏழையான இவளை; தொலைவில்லிமங்கலம் தொலைவில்லிமங்கலம்; கொண்டு புக்கு கொண்டு சென்று; இழை கொள் ஆபரணங்கள் அணிந்த; சோதி ஒளிமயமான; செந்தாமரை செந்தாமரைப் போன்ற; கண் கண்களை உடைய; பிரான் இருந்தமை பிரான் வீற்றிருந்ததை; காட்டினீர் காட்டினீர்கள் அதன் பின்; மழை பெய்தால் ஒக்கும் மழை பெய்வது பொல்; கண்ண நீரினொடு கண்களில் நீரோடு; அன்று தொட்டும் அன்று முதல்; மையாந்து நுழையும் அவன் அழகிலே மயங்கி; இவள் இவள்; சிந்தையள் அவன் குணங்களிலே ஈடுபட்டவளாகி; அத் திசை அவனிருக்கும் திசையையே; உற்று நோக்கியே உற்று நோக்கி; தொழும் வணங்குகிறாள்
mugaththu having face; Ezhaiyai her (who is having desire to deeply enjoy emperumAn); tholaivillimangalam in thiruththolaivillimangalam; koNdu pukku brought her; izhai koL with the decorations of divine ornaments; sOdhi having radiance; sem reddish; thAmarai like lotus; kaN one who is having eyes; pirAn the benefactor who manifested such eyes to his devotees for their enjoyment; irundhamai how we was present there; kAttinIr you showed;; annaimIr Oh mothers!; anRu thottu from that day onwards; ivaL parAnguSa nAyaki; mazhai peydhAl okkum like rain; kaNNa nIrinodu with tears from her eyes; maiyAndhu being bewildered; nuzhaiyum immersing in his beauty; sindhaiyaL having the heart; a where he resides; thisai the direction; uRRu well; nOkki looking into; thozhum perform anjali [joined palms].; nOkkum pakkam ellAm wherever seen; karumbodu with sugarcane

TVM 6.5.6

3392 நோக்கும்பக்கமெல்லாம் கரும்பொடு
செந்நெலோங்கு செந்தாமரை *
வாய்க்கும்தண்பொருநல் வடகரை
வண்தொலைவில்லிமங்கலம் *
நோக்குமேல்அத்திசையல்லால்
மறுநோக்கிலள்வைகல்நாடொறும் *
வாய்க்கொள்வாசகமும் மணிவண்ணன்
நாமமேயிவளன்னைமீர்.
3392 நோக்கும் பக்கம் எல்லாம் * கரும்பொடு
செந்நெல் ஓங்கு செந்தாமரை *
வாய்க்கும் தண் பொருநல் * வடகரை
வண் தொலைவில்லிமங்கலம் **
நோக்குமேல் அத் திசை அல்லால் * மறு
நோக்கு இலள் வைகல் நாள்தொறும் *
வாய்க்கொள் வாசகமும் * மணிவண்ணன்
நாமமே இவள் அன்னைமீர்! (6)
3392
nOkkum pakkamellām * karumpotu sen^_nelOngu senNthāmarai, *
vāykkum thaNporu_nal * vatagarai vandholai villi mangalam, *
nOkkumEl _aththisaiyallāl * maRu nOkkilaL vaigal nāLdhoRum, *
vāykkoL vāsagamum * maNivaNNan nāmamE ivaL annaimeer! 6.5.6

Ragam

சங்கராபரண

Thalam

அட

Bhavam

Thozhi (Friend)

Simple Translation

Ye, elders, off Tolaivillimaṅkalam. the lovely city on the north bank Of the cool Porunal, full of red lotus flowers in the tanks. Where stand Sugar-canes and paddy crops tall, where’er one turns, This young lady, her eyes can’t lift and utters she the words, At all times, spelling out only the names of the gem-hued Lord.

Explanatory Notes

(i) Mostly, the Nāyakī is in a trance state and she seldom opens her eyes; if ever she did open the eyes and saw anything, it was only this pilgrim centre with its romantic setting on the north bank of Tāmraparṇi (also known as Porunal), the cool river. If she opened her mouth, she would only spell out the Lord's glorious names. Well, these are the observations of the + Read more

Word by word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion. Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
அன்னைமீர்! தாய்மார்களே!; நோக்கும் இவள் பார்க்கும்; பக்கம் எல்லாம் இடங்களிலெல்லாம்; கரும்பொடு கரும்புகளும்; செந்நெல் ஓங்கு ஓங்கி வளர்ந்துள்ள நெற்பயிரும்; செந்தாமரை சிவந்த தாமரைகளும்; வாய்க்கும் நிறைந்திருக்கின்றன; தண் பொரு நல் குளிர்ந்த தாமிரபரணியின்; வடகரை வண் வட கரையிலுள்ள செல்வம் நிறைந்த; தொலைவில்லிமங்கலம் தொலைவில்லிமங்கலத்தை; நோக்குமேல் பார்த்தால்; அத்திசை அல்லால் அந்த திசையைத் தவிர; மறு நோக்கு இலள் வேறு திசையைப் பார்ப்பதில்லை; வைகல் நாள் தொறும் கழிகின்ற நாளெல்லாம்; இவள் வாய்க் கொள் இவள் வாக்கிலே; வாசகமும் வரும் வரும் வார்த்தைகள் அனைத்தும்; மணி நீலமணி போன்ற; வண்ணன் வடிவழகை உடைய; நாமமே எம்பெருமானின் நாமங்களே ஆகும்
sennel paddy crop; Ongu tall (enough to give shade to the crops); sem thAmarai reddish lotus flower; vAykkum to be abundant; thaN cool; porunal vadakarai in the northern banks of the divine porunal (thAmirabharaNi) river; vaN not having any shortcoming in urban wealth; tholaivillimangalam thiruththolaivillimangalam; nOkkumEl if parAnguSa nAyaki sees; a that; thisai direction; allAl other than; maRu nOkkilaL will not see anything else;; vaigal always; nAL thoRum everyday; ivaL she; vAy in her speech; koL having; vAsagamum words; annaimIr Oh mothers (who made her like this)!; maNi like a blue gem which is handy and can be enjoyed as desired; vaNNan having physical beauty; nAmamE divine names which reveal his simplicity, beauty etc.; annaimIr Oh mothers who gave birth to her and raised her!; aNi beautiful

TVM 6.5.7

3393 அன்னைமீர்! அணிமாமயில் சிறுமானிவள்
நம்மைக்கைவலிந்து *
என்னவார்த்தையுங்கேட்குறாள்
தொலைவில்லிமங்கலமென்றல்லால் *
முன்னம்நோற்றவிதிகொலோ? முகில்
வண்ணன்மாயங்கொலோ? * அவன்
சின்னமும்திருநாமமும் இவள்
வாயனகள்திருந்தவே.
3393 அன்னைமீர் அணி மா மயில் * சிறுமான்
இவள் நம்மைக் கைவலிந்து *
என்ன வார்த்தையும் கேட்குறாள் *
தொலைவில்லிமங்கலம் என்று அல்லால் **
முன்னம் நோற்ற விதிகொலோ? * முகில்
வண்ணன் மாயம் கொலோ? * அவன்
சின்னமும் திருநாமமும் * இவள்
வாயனகள் திருந்தவே (7)
3393
annaimeer! aNimāmayil * siRu mānivaL nNammaik kaivalindhu, *
enna vārththaiyum kEtkuRāL * tholai villi mangalam enRallāl, *
munnam nORRa vithikolO * mugil vaNNan māyangolO, * avan
chinnamum thiru nāmamum * ivaL vāyaNnakaL thirundhavE. 6.5.7

Ragam

சங்கராபரண

Thalam

அட

Bhavam

Thozhi (Friend)

Simple Translation

Ye, mothers, this lady sweet, like the lovely peacock and the doe young, Has out of our hands gone and she wouldn’t hear about anything But Tolaivillimaṇkalam; could this felicity on her devolve By dint of accumulated merit or the cloud-hued Lord’s sweet resolve? How distinct does she spell out His names and attributes!

Explanatory Notes

(i) The Nāyakī’s lovely locks of hair are compared to the colourful plumes of the peacock and her bewitching eyes to those of the young doe.

(ii) The Lord’s names and attributes gain colour, when they are spelt out by His devotees with inimitable fervour, as when Śrī Parāśara Bhaṭṭar sweetly ejaculated the holy name, “Aḻakiya maṇavāḻapperumāḷ!” (Lovely Spouse), Śrī Śomāśi + Read more

Word by word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion. Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
அன்னைமீர்! தாய்மார்களே!; அணி மா மயில் அழகிய மயில் போன்றும்; சிறுமான் இளம் மான் போலும்; இவள் இருக்கும் இவள்; நம்மைக் நமக்கு; கைவலிந்து எட்டாதவள் ஆகிவிட்டாள்; தொலைவில்லிமங்கலம் தொலைவில்லிமங்கலம்; என்று அல்லால் என்பதைத் தவிர; என்ன வார்த்தையும் வேறு எந்த வார்த்தையையும்; கேட்குறாள் கேட்பதில்லை; முன்னம் நோற்ற முற்பிறவியில் செய்த; விதி கொலோ? புண்ணியமோ? அல்லது; முகில் வண்ணன் முகில் வண்ணனின்; மாயம் கொலோ மாயம் தானோ?; அவன் சின்னமும் அவன் சின்னமும்; திருநாமமும் அவன் நாமங்களுமே; இவள் வாயனகள் இவளுடைய வாயில் வரும்; திருந்தவே திருத்தமான வார்த்தைகளாகின்றன
mA having dark complexion; mayil very beautiful like peacock; siRu young; mAn like a deer; ivaL your little girl; nammai us; kaivalindhu overruling; tholaivillimangalam thiruththolaivillimangalam; enRu as; allAl other than; ena any; vArththaiyum word; kEtka to hear; uRAL does not;; munnam previously; nORRa done; vidhikolO fortune?; mugil like a cloud which is magnanimous; vaNNan done by one who is having the form; mAyangolO amazing act?; avan his; chinnamum symbols (such as his ornaments); thirunAmamum divine names (which reveal his magnanimity); thirundha to become more glorious; ivaL vAyanagaL being spoken by her; thirundhu having clarity (in revealing bhagavath svarUpa (true nature) rUpa (form) guNa (qualties) vibhUthi (wealth)); vEdhamum vEdham

TVM 6.5.8

3394 திருந்துவேதமும்வேள்வியும்
திருமாமகளிரும்தாம் * மலிந்
திருந்துவாழ்பொருநல்
வடகரைவண்தொலைவில்லிமங்கலம் *
கருந்தடங்கண்ணிகைதொழுத
அந்நாள்தொடங்கிஇந்நாள்தொறும் *
இருந்திருந்துதரவிந்தலோசன!
என்றேன்றே நைந்திரங்குமே. (2)
3394 திருந்து வேதமும் வேள்வியும் *
திரு மா மகளிரும் தாம் * மலிந்து
இருந்து வாழ் பொருநல் * வடகரை
வண் தொலைவில்லிமங்கலம் **
கருந் தடம் கண்ணி கைதொழுத * அந் நாள்
தொடங்கி இந் நாள்தொறும் *
இருந்து இருந்து அரவிந்தலோசன! *
என்று என்றே நைந்து இரங்குமே (8)
3394
thirundhu vEdhamum vELviyum * thirumā makaLirum thām, * malinthirundhu
vāzhporu_nal * vatakarai vaNdholaivilli mangalam, *
karundhatangaNNikai thozhutha * _anNnāL thotangi innāL dhoRum, *
irundhirundhu 'aravindha lOsana!' * enREnRE nNaindhirangumE. 6.5.8

Ragam

சங்கராபரண

Thalam

அட

Bhavam

Thozhi (Friend)

Simple Translation

Ye. elders, ever since this lady, with dark eyes large, Started adoring Tolaivillimaṅkalam, the affluent city On the north bank of river Porumal, full of felicity, With scrupulous vedic chantings and rituals well done, She calls out now and then, ‘My lotus-eyed Lord’, and dwindles down.

Explanatory Notes

The Nāyakī’s eyes became dark through their absorption of. and deep penetration into the dark-hued Lord. From the moment, she worshipped the Lord, enshrined in this pilgrim centre, she got entranced by His lotus eyes and thawed down, when she addressed Him, as her lotus-eyed Lord. She couldn’t go on repeating it, much as she would like to, as she dwindled down in a state of ecstasy.

Word by word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion. Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
திருந்து வேதமும் திருத்தமான வேதமும்; வேள்வியும் வேள்வியும்; திரு மா மகளிரும் லக்ஷ்மியுமான; தாம் மலிந்து செல்வம் நிறைந்த; இருந்து வாழ் வைதிகர்கள் வாழும்; பொருநல் தாமிரபரணியின்; வடகரை வடகரையில் இருக்கும்; வண் வளம் பொருந்திய; தொலைவில்லிமங்கலம் தொலைவில்லிமங்கலத்தை; கருந் தடம் கருத்த பெரிய; கண்ணி கண்களை உடைய இவள்; கைதொழுத கைகூப்பி வணங்க; தொடங்கி தொடங்கிய; அந் நாள் அந்த நாள் முதல்; இந் நாள் தொறும் இந்த நாள் வரை; இருந்து இருந்து இருந்து இருந்து; அரவிந்தலோசன! அரவிந்தலோசனனே!; என்று என்றே என்று என்றே அழைத்தே; நைந்து இரங்குமே உருக்குலைந்து கரைகிறாள்
vELviyum yagya and other rituals (which are revealed in such vEdham as ways to worshipping emperumAn); mA the one who nurtures the wealth which is apt (for such yagya etc); thirumagaLirum lakshmi; thAm they; malindhu being abundant (due to togetherness with bhagavAn); irundhu being well established; vAzh living; porunal vada karai on the northern banks of the divine porunal (thAmirabharaNi) river; vaN tholaivillimangalam thiruththolaivillimangalam; karu blackish; thadam expansive; kaNNi having eyes; kai thozhudha annAL thodangi from the day she started worshipping; i now; nALthoRum until this day; irundhu irundhu (being unable to sustain in grief due to the distress) remaining; aravindhalOchana Oh aravindhalOchana!; enRenRE calling out repeatedly; naindhu becoming weak; irangum had her heart melted.; ivaL parAnguSa nAyaki; nALthoRum everyday

TVM 6.5.9

3395 இரங்கிநாள்தொறும்வாய்வெரீஇ
இவள்கண்ணநீர்களலமர *
மரங்களுமிரங்குவகை
மணிவண்ணவோ! என்று கூவுமால் *
துரங்கம்வாய்பிளந்தானுறை
தொலைவில்லிமங்கலமென்று * தன்
கரங்கள் கூப்பித்தொழும் அவ்வூர்த்
திருநாமங்கற்றதற்பின்னையே.
3395 இரங்கி நாள்தொறும் * வாய்வெரீஇ இவள்
கண்ண நீர்கள் அலமர *
மரங்களும் இரங்கும் வகை *
மணிவண்ணவோ! என்று கூவுமால் **
துரங்கம் வாய் பிளந்தான் உறை *
தொலைவில்லிமங்கலம் என்று * தன்
கரங்கள் கூப்பித் தொழும் * அவ் ஊர்த்
திருநாமம் கற்றதன் பின்னையே (9)
3395
irangi nāLdhoRum * vāyvereei _ivaL kaNNa neergaL alamara, *
marangaLum iraNGgum vagai * `maNivaNNavO!' enRu koovumāl, *
thurangam vāypiLanNthān uRai * tholai villi mangala menRu, * than
karangaL kooppith thozhum * avvoorth thiru_nāmaNG kaRRadhaR pinnaiyE. 6.5.9

Ragam

சங்கராபரண

Thalam

அட

Bhavam

Thozhi (Friend)

Simple Translation

Ye, mothers, this young lady calls out, “oh, gem-hued Lord!” Day in and day out, with her mind deeply absorbed, And tears splashing down her eyes, moving trees besides; Ever since she learnt the name of that city, Tolaivillimaṅkalam, where resides The Lord who tore open the mouth of the demoniac horse, In that direction she turns and with joined palms adores.

Explanatory Notes

Having been initiated into this pilgrim centre, the Nāyakī keeps on reciting the Lord’s name, in such a manner that even the inanimate beings, like trees, are moved. If these hymns can move even the stony hearts of the uninitiated men of the present day, what doubt could there be about their impact on the contemporary men and things, when the songs flowed from the Āzhvār’s + Read more

Word by word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion. Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
இரங்கி நாள் தொறும் தினமும் நெஞ்சழிந்து; வாய்வெரீஇ இவள் பரவசமடைந்து வாய்வெருவி; கண்ண நீர்கள் அலமர கண்களில் நீர் ததும்ப; மரங்களும் மரங்கள் கூட; இரங்கும் வகை இரங்கும்படி; மணிவண்ணவோ! மணிவண்ணவோ!; என்று கூவுமால் என்று கூவுகிறாள்; துரங்கம் கேசி என்னும் அசுரனின்; வாய் பிளந்தான் வாயைப் பிளந்த; உறை கண்ணன் இருக்கும்; தொலைவில்லிமங்கலம் தொலைவில்லிமங்கலம்; என்று அவ்வூர் திருநாமம் என்று அந்த ஊர் திருநாமம்; கற்றதன் பின்னையே கற்றதன் பின்னே தான்; தன் கரங்கள் கூப்பி தன் கைகளைக் கூப்பி; தொழும் வணங்குகிறாள்
irangi with melted heart; vAyvereei (emotionally) blabbering; kaNNa nIrgaL tears; alamara flow and make her tired; marangaLum even the trees (which are insentient); irangum vagai to pity; maNi beautiful like a blue gem; vaNNavO saying -Oh one who is having form!-; kUvum calls out;; thurangam kESi who came in the form of a horse; vAy mouth; piLandhAn krishNa who tore; uRai residing; tholaivillimangalam thiruththolaivillimangalam; enRu as; avvUrth thirunAmam the divine name of that abode; kaRRadhan pinnai after learning; than karangaL her hands; kUppi joins palms; thozhum worships; pinnaikol is she nappinnaip pirAtti who is infinitely enjoyable?; nilam being the controller of earth

TVM 6.5.10

3396 பின்னைகொல்? நிலமாமகள்கொல்?
திருமகள்கொல்? பிறந்திட்டாள் *
என்னமாயங்கொலோ? இவள்நெடுமா
லென்றேநின்றுகூவுமால் *
முன்னிவந்தவன் நின்றிருந்துறையும்
தொலைவில்லிமங்கலம்
சென்னியால்வணங்கும் * அவ்வூர்த்திருநாமம்
கேட்பதுசிந்தையே.
3396 பின்னைகொல் நில மா மகள்கொல் *
திருமகள்கொல்? பிறந்திட்டாள் *
என்ன மாயம்கொலோ? * இவள் நெடுமால்
என்றே நின்று கூவுமால் **
முன்னி வந்து அவன் நின்று இருந்து
உறையும் * தொலைவில்லிமங்கலம்
சென்னியால் வணங்கும் * அவ் ஊர்த்
திருநாமம் * கேட்பது சிந்தையே. (10)
3396
pinnai kol nNilamāmagaLkol? * thirumagaLkol? piRandhittāL, *
ennamāyangolO_? * ivaL nNedumālenRE nNinRu koovumāl, *
munni vandhavan ninRirundhuRaiyum * tholaivilli mangalam senniyāl vaNaNGgum *
avvoorth thiru_nāmam * kEtpathu sindhaiyE. 6.5.10

Ragam

சங்கராபரண

Thalam

அட

Bhavam

Thozhi (Friend)

Simple Translation

Perhaps this lady is Piṇṇai or Nilamakaḻ (Mother Earth), full of grace Or Tirumakaḻ (Mahālakṣmī) herself, what a wonder it is, she keeps calling out Neṭumāl (the all-pervading Lord) and bows before Tolaivillimaṅkalam where He stays, And longs to hear the holy name of that place, by others spelt out!

Explanatory Notes

(i) Looking at the Nāyakī’s intense longing for Lord Kṛṣṇa, the mates guess that she might be Nappiṉṉā, reborn; and then, her rapturous meditation on the Lord’s advent as Varāha, the Great Boar, makes them inclined to think that she might be an incarnation of Mother Earth. But still, the mates could not make up their minds, as the Nāyakī’s devout contemplation of Lord + Read more

Word by word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion. Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
பின்னை கொல் நப்பின்னை பிராட்டியோ?; நில மா மகள் கொல் பூமிப்பிராட்டியோ?; திருமகள் கொல் திருமகளோ?; பிறந்திட்டாள்? இப்படி பிறந்திருக்கிறாளோ?; என்ன மாயம் கொலோ! என்ன ஆச்சர்யமோ?; இவள் நெடுமால் எம்பெருமானே! இவள் நெடுமால்; என்றே நின்று கூவுமால் என்றே கூவுவாள்; முன்னி வந்து ஏற்கனவே முன்பே; அவன் நின்று இருந்து அவன் நின்று இருந்து; உறையும் உறையும்; தொலைவில்லிமங்கலம் தொலைவில்லிமங்கலத்தை; சென்னியால் தன் தலையால்; வணங்கும் வணங்குகிறாள்; அவ்வூர் திருநாமம் அவ்வூர் திருநாமம் பிறர் சொல்ல; கேட்பது கேட்பதையே; சிந்தையே நினைத்து மகிழ்கிறாள்
mA laudable; magaLkol is she bhUmip pirAtti?; thirumagaLkol Is she lakshmi who is the infinite wealth for emperumAn?; piRandhittAL one who is born in this manner.; enna how; mAyangolO amazing!; ivaL she; nedumAl enRE speaking about his great love; ninRu remaining; kUvum she is calling out [for him];; avan he; munni before/first; vandhu arriving; ninRirundhu standing and sitting; uRaiyum eternally residing; tholaivillimangalam thiruththolaivillimangalam; senniyAl with the head; vaNangum bows;; avvUrth thirunAmam the divine name of that town; kEtpadhE hearing from others; sindhai focussed on.; dhEvapirAnaiyE Only dhEvapirAn; thandhai father

TVM 6.5.11

3397 சிந்தையாலும்சொல்லாலும்
செய்கையினாலும் தேவபிரானையே *
தந்தைதாயென்றடைந்த
வண்குருகூரவர்சடகோபன் *
முந்தையாயிரத்துள்இவை
தொலைவில்லிமங்கலத்தைச்சொன்ன *
செந்தமிழ்பத்தும்வல்லார்
அடிமைசெய்வார்திருமாலுக்கே. (2)
3397 ## சிந்தையாலும் சொல்லாலும்
செய்கையினாலும் * தேவ பிரானையே *
தந்தை தாய் என்று அடைந்த *
வண் குருகூரவர் சடகோபன் சொல் **
முந்தை ஆயிரத்துள் இவை * தொலை
வில்லிமங்கலத்தைச் சொன்ன *
செந்தமிழ்ப் பத்தும் வல்லார் *
அடிமைசெய்வார் திருமாலுக்கே (11)
3397. ##
sindhaiyālum sollālum seygaiyinālum * thEva pirānaiyE, *
thandhai thāyenRadaindha * vaNkurukooravar sadagOpan_sol, *
mundhai āyiraththuL ivai * tholai villi mangalaththaich chonna, *
sendhamizhpaththum vallār * adimai seyvār_ thirumālukkE. 6.5.11

Ragam

சங்கராபரண

Thalam

அட

Bhavam

Thozhi (Friend)

Simple Translation

Those that can recite these songs ten, Which unto holy Tolaivillimaṅkalam pertain, Out of the hoary thousand composed by Caṭakōpaṉ, Of Kurukūr, who, by word, deed and thought, adored The Lord Supreme as Father, Mother and all, rolled In one, will service unto Him render for ever.

Explanatory Notes

The hoary thousand: It might be asked how this work is claimed to be antiquated while there is the distinct reference to Āzhvār as its author. The element of antiquity comes in automatically if one considers the parity, which this Dramiḍa Veda enjoys with its Sanskrit counterpart. These thousand hymns were ordained by the Lord, just like the Sanskrit Vedas, as revealed + Read more

Word by word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion. Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
தேவ பிரானையே தேவ பிரானையே; தந்தை தாய் தந்தை தாய்; என்று என்று அறுதியிட்டு; சிந்தையாலும் மனத்தாலும்; சொல்லாலும் வாக்காலும்; செய்கையினாலும் செய்கையினாலும்; அடைந்த வண் அடைந்த வளம் பொருந்திய; குருகூரவர் திருக்குருகூரில் அவதரித்த; சடகோபன் நம்மாழ்வார்; முந்தை பழையதான வேதார்த்தத்துக்குச் சமமான; ஆயிரத்துள் இவை ஆயிரம் பாசுரங்களுள் இவை; தொலைவில்லிமங்கலத்தை தொலைவில்லிமங்கலத்தை; சொன்ன குறித்து அருளிச்செய்த; செந் தமிழ் செந் தமிழிலிருக்கும்; பத்தும் இந்தப் பத்துப் பாசுரங்களையும்; வல்லார் ஓத வல்லார்; திருமாலுக்கே திருமாலுக்கே; அடிமை கைங்கர்யம் செய்யும்; செய்வார் பாக்யம் பெறுவார்கள்
thAy and mother; enRu determined; sindhaiyAlum sollAlum seygaiyinAlum with the three faculties [mind, speech and actions]; adaindha having attained; vaN those who are surrendered to self [AzhwAr] like SrI madhurakavigaL who said in kaNNinuN chiRuth thAmbu 4 -annaiyAy aththanAy-; kurugUravar the leader of the residents of AzhwArthirunagari; chatakOpan nammAzhwAr; mundhai revealing the meanings of the ancient vEdham; AyiraththuL among the thousand pAsurams; tholaivillimangalaththai thiruththolaivillimangalam; sonna mercifully spoke; sem being honest in revealing the meanings; thamizh thamizh pAsurams; ivai paththum this decad; vallAr those who can practice; thirumAlukku for Sriya:pathi who is sarvESvara; adimai seyvAr will become servitors.; mAlukku one who is identified by his love for his devotees; vaiyam earth