64

Thirukkadigai

திருக்கடிகை

Thirukkadigai

ShOlinghur

ஸ்ரீ அம்ருதவல்லீ ஸமேத ஸ்ரீ யோக நரசிம்ஹாய நமஹ

Thayar: Sri Amrutha Valli
Moolavar: Yogā Nrisimhan
Utsavar: Akkārakkani
Vimaanam: Simhagra
Pushkarani: Amirth Theertham
Thirukolam: Amarndha (Sitting)
Direction: East
Mandalam: Thondai Nādu
Area: Chennai
State: TamilNadu
Aagamam: Vaikānasam
Sampradayam: Thenkalai
Search Keyword: Thirukkadigai
Tamil
Simplified
English
Verse info
Synonyms
Translation

PT 8.9.4

1731 மிக்கானை மறையாய்விரிந்தவிளக்கை * என்னுள்
புக்கானைப் புகழ்சேர்பொலிகின்றபொன்மலையை *
தக்கானைக் கடிகைத்தடங்குன்றின்மிசையிருந்த *
அக்காரக்கனியை அடைந்துய்ந்துபோனேனே. (2)
1731 ## மிக்கானை * மறை ஆய் விரிந்த விளக்கை * என்னுள்
புக்கானைப் * புகழ் சேர் பொலிகின்ற பொன்மலையை **
தக்கானைக் கடிகைத் * தடங் குன்றின்மிசை இருந்த *
அக்காரக் கனியை- * அடைந்து உய்ந்துபோனேனே-4
1731. ##
mikkāNnai * maRaiyāy virinNdha viLakkai, * eNnNnuL-
pukkāNnaip * pugazhchEr poligiNnRa poNnmalaiyai *
thakkāNnaik kadigai * thadaNGguNnRiNn michaiyirunNdha *
akkārak kaNniyai * adainNdhu uynNdhu pONnENnE. (2) 8.9.4

Ragam

மோஹன

Thalam

திரிபுடை

Bhavam

Self

Simple Translation

1731. The matchless, highest one, the bright light, sweet as a fruit, the creator of the Vedās who (lord of kannapuram) shines like a golden hill entered my heart. I came to the god of large Thirukkadigai hills, who is sweet as a fruit and I am saved.

Word by word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion. Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
மிக்கானை சிறந்தவனும் உயர்ந்தவனும்; மறையாய் வேதத்தாலே; விரிந்த விளக்கப்பட்டவனும்; விளக்கை விளக்கு போல் பிரகாசிப்பவன்; என்னுள் என்னுள்; புக்கானை புகுந்திருப்பவனும்; புகழ்சேர் புகழுடையவனும்; பொலிகின்ற ஒளிமயமாக பொலிகின்ற; பொன் பொன்; மலையை மலை போன்றவனும்; தக்கானை கிருபை உடையவனும்; கடிகை திருக்கடிகை என்னும்; தடங் குன்றின் பெரிய மலையின்; மிசை சிகரத்தின் மீது; இருந்த இருக்கும்; அக்காரக் கனியை இனிய பெருமானை; அடைந்து அடைந்து; உய்ந்து போனேனே உய்ந்து போனேனே

PT 8.9.9

1736 கண்ணார்கண்ணபுரம் கடிகைகடிகமழும் *

தண்ணார்தாமரைசூழ் தலைச்சங்கமேல்திசையுள் *

விண்ணோர்நாண்மதியை விரிகின்றவெஞ்சுடரை *

கண்ணாரக்கண்டுகொண்டு களிக்கின்றதுஇங்குஎன்றுகொலோ. (2)
1736 கண் ஆர் கண்ணபுரம் * கடிகை கடி கமழும் *
தண் ஆர் தாமரை சூழ் * தலைச்சங்கம் மேல்திசையுள் **
விண்ணோர் நாண்மதியை * விரிகின்ற வெம் சுடரை- *
கண் ஆரக் கண்டுகொண்டு * களிக்கின்றது இங்கு என்றுகொலோ?-9
1736
kaNNār kaNNapuram * kadigai kadikamazhum *
thaNNār thāmaraichoozh * thalaichchaNGga mElthichaiyuL *
viNNOr nNāNmadhiyai * virigiNnRa venchudarai *
kaNNārak kaNdukondu * kaLikkiNnRathu iNGku eNnRukolO? 8.9.9

Ragam

மோஹன

Thalam

திரிபுடை

Bhavam

Self

Simple Translation

1736. He is the lord of beautiful Thirukkannapuram and Thirukkadigai surrounded with fragrant cool lotus flowers. When will the time come that I can rejoice seeing with my eyes the god of Thalaichangam who is the bright moon for the gods and the sun that spreads light?

Word by word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion. Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
கண் ஆர் கண் கவரும்; கண்ணபுரம் திருக்கண்ணபுரத்திலும்; கடிகை திருக்கடிகாசலத்திலும்; கடி கமழும் மணம் கமழும்; தண் ஆர் குளிர்ந்த பூர்ண; தாமரை சூழ் தாமரைகளால் சூழ்ந்த; தலைச்சங்கம் தலைச்சங்காட்டில்; மேல் திசையுள் மேற்கு திசையில்; விண்ணோர் நித்யசூரிகளுக்கு; மதியை குளிர்ந்த சந்திரன்போல்; நாண் இனியவனாய்; விரிகின்ற உதயகாலத்தில்; வெம் வெப்பமுடைய; சுடரை ஸூரியன்போன்ற பிரகாசமான எம்பெருமானை; இங்கு கண்ணார இங்கு கண்குளிர; கண்டுகொண்டு கண்டு வணங்கி; களிக்கின்றது களிப்பது; என்றுகொலோ? எக்காலமோ?

MUT 61

2342 பண்டெல்லாம்வேங்கடம் பாற்கடல்வைகுந்தம் *
கொண்டங்குறைவார்க்குக்கோயில்போல் * - வண்டு
வளங்கிளரும்நீள்சோலை வண்பூங்கடிகை *
இளங்குமரன்தன்விண்ணகர். (2)
2342 ## பண்டு எல்லாம் வேங்கடம் * பாற்கடல் வைகுந்தம் *
கொண்டு அங்கு உறைவார்க்கு கோயில் போல் ** - வண்டு
வளம் கிளரும் நீள் சோலை * வண் பூங் கடிகை *
இளங் குமரன் தன் விண்ணகர் 61
2342. ##
paNdellām vEngadam * pāRkadal vaiguntham, *
kondaNG kuRaivārkkuk kOyilpOl, * - vaNdu
vaLangiLarum neeLsOlai * vaNpooNG kadikai, *
iLangumaran than viNNakar. (2) 61

Ragam

மோஹன

Thalam

திரிபுடை

Bhavam

Self

Simple Translation

2342. Just as Thiruvenkatam, the milky ocean and Vaikuntam are ancient temples where the lord stays, now Thirukkadigai surrounded with flourishing groves and Thirumālirunjolai swarming with bees is the divine heavenly place of the young lord of Thiruvinnagar.

Word by word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion. Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
வைகுந்தம் பரமபதத்தை; கொண்டு இருப்பிடமாகக் கொண்டு; அங்கு அங்கே; உறைவார்க்கு இருக்கும் எம்பெருமானுக்கு; பாற்கடல் பாற்கடலும்; வேங்கடம் திருவேங்கடமலையும்; வண்டு வளம் வண்டு கூட்டம்; கிளரும் மிகுந்திருக்கும்; நீள் சோலை சோலைகளையுடைய; வண் பூ அழகிய இனிய; கடிகை திருக்கடிகைக் குன்றும்; இளங் குமரன் இளமையோடு கூடினவன்; தன் தன்னதென்று நினைக்கும்; விண்ணகர் திருவிண்ணகரமும்; பண்டு எல்லாம் முன்பெல்லாம்; கோயில் போல் கோயில்களாக இருந்தன போலும்
vaikundham paramapadham; koNdu keeping it as his residence; angu in that place; uRaivARku for emperumAn who resides there permanently; pARkadal thiruppARkadal, the milky ocean; vEngadam thirumalai; vaNdu vaLam kiLarum neeL sOlai having expansive gardens where swarms of beetles gather; vaN beautiful; pU sweet; kadigai the divine hills of kadigai (also known as chOLashimhapuram or shOLingapuram); iLam kumaran than viNNagar thiruviNNagar which the youthful emperumAn considers as his own; paNdu before emperumAn subjected AzhwAr as his servitor; kOyil pOl looks like these were his temples (the implied meaning here is that nowadays, emperumAn considers AzhwAr’s heart as his temple)

STM 34

2706 ## காரார்திருமேனி காணுமளவும்போய் *
சீரார் திருவேங்கடமே திருக்கோவ (2)
லூரே * - மதிட்கச்சியூரகமே பேரகமே *
பேராமருதிறுத்தான் வெள்ளறையேவெஃகாவே *
பேராலிதண்கால் நறையூர்திருப்புலியூர் *
ஆராமம்சூழ்ந்த அரங்கம் * - கணமங்கை (2)
2706 ## கார் ஆர் திருமேனி காணும் அளவும் போய் *
சீர் ஆர் திருவேங்கடமே திருக்கோவலூரே * மதிள் கச்சி
ஊரகமே பேரகமே *
பேரா மருது இறுத்தான் வெள்றையே வெஃகாவே *
பேர் ஆலி தண்கால் நறையூர் திருப்புலியூர் *
ஆராமம் சூழ்ந்த அரங்கம் * கணமங்கை-34
## kārār thirumEni kāNum aLavumpOy *
cheerār thiruvENGkadamE thirukkOva-

lUrE * --mathitkacchi ooragamE pEragamE *
pErā maruthiRuththān veLLaRaiyE veqkāvE *

pErāli thaNgāl naraiyoor thiruppuliyuur *
ārāmam choozhntha araNGkam * (37)--kaNamaNGkai

Simple Translation

2706. “I have decided to go to temples to see the dark one. I will go to beautiful Thiruvenkatam, Thirukkovalur, strong-walled Kachi, Thiruvuragam, Thirupperagam (Koiladi), Vellarai, temple of the god who walked through the large marudam trees and destroyed the Asurans, Thiruvekka, Thiruvāli, Thiruthangāl, Thirunaraiyur surrounded with water, Thirupuliyur, Srirangam surrounded with groves, Thirukkannamangai, beautiful jewel-like Thirukkannanur, Thiruvinnagaram, famous Thirukkannapuram, Thiruthancherai, Thiruvazhundur, Thirukkudandai, Thirukkadigai, Thirukkadalmallai, Thiruvidaventhai, Thiruneermalai, the famous Thirumālirunjolai, Thirumogur, Thiruvadari (Badrinath) praised by all, northern Madhura and all other places of the god without missing any. I prattle on saying the thousand names of the famous, lotus-eyed god adorned with thulasi garlands dripping with honey who broke the tusk of the elephant and saved Gajendra from the crocodile, Even if the villagers say nasty things about me I will surely continue to write letters, made of palm leaves. 34 - 40

Word by word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion. Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
கார் ஆர் திருமேனி காளமேகத் திருவுருவை; காணும் அளவும் கண்டு களிக்கும் வரையில்; போய் ஊர் ஊராகப் போய்; சீர் ஆர் சீர்மைமிக்க; திருவேங்கடமே திருவேங்கடமலை; திருக்கோவல் ஊரே திருக்கோவலூர் என்ற நகரமே; மதிள் கச்சி மதிள் சூழ்ந்த காஞ்சியிலுள்ள; ஊரகமே பேரகமே ஊரகம் மற்றும் திருப்பேரகம்; பேரா சலியாமற் கிடந்த; மருது மருத மரங்களை; இறுத்தான் முறித்த பெருமாள்; வெள்ளறையே இருக்கும் திருவெள்ளறை; வெஃகாவே திருவெஃகா; பேர் ஆலி பெயர் பெற்ற திருவாலி; தண் கால் திருத்தண்கால்; நறையூர் திருநரையூர்; திருப்புலியூர் குட்டநாட்டுத் திருப்புலியூர்; ஆராமம் சூழ்ந்த அழகிய தோட்டங்கள் சூழ்ந்த; அரங்கம் திருவரங்கம்; கணமங்கை திருக்கண்ணமங்கை
nAn avanai I will, his [emperumAn’s]; kAr Ar thirumEni kANum aLavum pOy going from place to place [one divine abode to another] until I see his divine form which is like a dark cloud; sIr Ar thiruvEngadamE thirukkOvalUrE the eminent thiruvEngadam and thirukkOvalUr; madhiL kachchi UragamE Uragam, which is within the fortified kAnchi; pEragamE the sannidhi in appakkudaththAn, thiruppEr; pErA maRudhu iRuththAn veLLaRaiyE thiruveLLaRai where kaNNa, who broke through the two marudha trees which were erect, has taken residence; vehkAvE thiruvehkA; pErAli thaNkAl naRaiyUr thiruppuliyUr The famous divine abode of thiruvAli nagar, thiruththaNkAl, thirunaRaiyUr, kutta nAttu thiruppuliyUr; ArAmam sUzhndha arangam kaNamangai thiruvarangam, which is surrounded by beautiful gardens, thirukkaNNamangai