PT 6.1.2

திருமகள் கணவனே! திருவருள் தா

1449 அண்ணல்செய்துஅலைகடல்கடைந்து அதனுள்
கண்ணுதல்நஞ்சுண்ணக்கண்டவனே! *
விண்ணவரமுதுண அமுதில்வரும்
பெண்ணமுதுண்டஎம்பெருமானே! *
ஆண்டாய்! உனைக்காண்பதோர் அருளெனக்கருளுதியேல் *
வேண்டேன்மனைவாழ்க்கையை விண்ணகர்மேயவனே!
PT.6.1.2
1449 aṇṇal cĕytu alai kaṭal kaṭaintu * ataṉul̤
kaṇṇutal nañcu uṇṇakkaṇṭavaṉe *
viṇṇavar amutu uṇa amutil varum *
pĕṇ amutu uṇṭa ĕm pĕrumāṉe **
āṇṭāy uṉaik kāṇpatu or * arul̤ ĕṉakku arul̤utiyel *
veṇṭeṉ maṉaivāzhkkaiyai * -viṇṇakar meyavaṉe-2

Ragam

Punnāgavaraḷi / புன்னாகவராளி

Thalam

Aḍa / அட

Bhavam

Self

Simple Translation

1449. You are the highest lord. When the milky ocean was churned, you saw Shivā with a forehead eye when he drank the poison that came from the ocean, and you gave the nectar that came out of the milky ocean to the gods and you loved Lakshmi who came from the milky ocean. If you give me your grace so I may see you, I will not want this family life, O god of Thiruvinnagar.

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
அண்ணல் தானே ஸர்வஸ்வாமி; செய்து என்பதைக் காட்டிக் கொண்டு; அலை கடல் அலை கடலை; கடைந்து கடைந்து; அதனுள் அக்கடலில்; நஞ்சு தோன்றின விஷத்தை; நுதல் கண் நெற்றிக் கண்ணனான ருத்ரன்; உண்ண உண்ணும்படி; கண்டவனே! பார்த்தவனே!; விண்ணவர் தேவர்கள்; அமுது உண அம்ருதம் உண்ண; அமுதில் வரும் அந்த அம்ருதத்திலிருந்து வந்த; பெண் பெண்ணான திருமகளை; அமுது உண்ட அம்ருதத்தை அனுபவித்த; எம் பெருமானே! எம் பெருமானே!; ஆண்டாய்! அடியேனை ஆண்டுகொண்ட பெருமானே!; உனைக் காண்பது உன்னைக் காண; ஓர் அருள் ஓர் அருள்; எனக்கு அருளுதியேல் எனக்கு அருளுவாயாகில்; மனை வாழ்க்கையை ஸம்ஸார வாழ்க்கையை; வேண்டேன் விரும்பமாட்டேன்; விண்ணகர் திரு விண்ணகரில்; மேயவனே இருப்பவனே!