PTA 77

பரமனே! நின்னைப் பற்றியே யான் பேசுவேன்

2661 உரைக்கிலோர்சுற்றத்தார் உற்றாரென்றுஆரே? *
இரைக்குங்கடற்கிடந்தவெந்தாய்! * - உரைப்பெல்லாம் *
நின்னன்றி மற்றிலேன்கண்டாய் * எனதுயிர்க்குஓர்
சொல்நன்றியாகும்துணை.
2661 உரைக்கில் ஓர் சுற்றத்தார் * உற்றார் என்று ஆரே? *
இரைக்கும் கடல் கிடந்த எந்தாய் ** உரைப்பு எல்லாம்
நின் அன்றி * மற்று இலேன் கண்டாய் * எனது உயிர்க்கு ஓர்
சொல் நன்றி ஆகும் துணை 77
2661 uraikkil or cuṟṟattār * uṟṟār ĕṉṟu āre? *
iraikkum kaṭal kiṭanta ĕntāy ** uraippu ĕllām
niṉ aṉṟi * maṟṟu ileṉ kaṇṭāy * ĕṉatu uyirkku or
cŏl naṉṟi ākum tuṇai -77

Ragam

Senjurutti / செஞ்சுருட்டி

Thalam

Jambai / ஜம்பை

Bhavam

Self

Divya Desam

Simple Translation

2661. O father resting on the roaring milky ocean, my relatives say they are very close to me, but see, there is no one for me but you. You are my only help in life and the companion for whom I am thankful.

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simplified meaning of those verse.)
இரைக்கும் இரைச்சலையுடைய; கடல் பாற்கடலில்; கிடந்த எந்தாய் சயனித்திருக்கும் பெருமானே!; உரைக்கில் ஆராய்ந்து பார்த்தால்; ஓர் சுற்றத்தார் உன்னைத் தவிர ஒரு சுற்றத்தார்; உற்றார் என்றாரே உறவினர் என்று யாரும் இல்லை; எனது உயிர்க்கு என் ஆத்மாவுக்கு; ஓர் சொல் ‘மா மேகம் சரணம்’ என்ற ஒரு சொல்லே; நன்றி ஆகும் துணை உதவிசெய்யும் துணையாகவும்; நின் அன்றி உன்னைத் தவிர; உரைப்பு எல்லாம் மற்ற எவரையும்; மற்று இலேன் கண்டாய் துணையாக உடையேன் அல்லேன்
uraikkil if one were to mention; ŏr suṝaththār agnates [people who are males and who are related from father’s side]; uṝār other relatives; enṛu who are spoken of; ārĕ who else is there (for me) apart from you?; iraikkum being uproarious; kadal kidandha reclining on thiruppāṛkadal (milky ocean); endhāy my swāmy (lord)!; enadhu uyirkku for my āthmā (soul); nanṛiyāgum being beneficial; ŏr sol as a unique word; thuṇai as companion; uraippu ellām as all types of relationships; nin anṛi other than you; maṝu ilĕn kaṇdāy ī am without anyone, please consider