PT 1.6.3

எந்தாய்! உன் திருவடிகளே சரணம்

1000 சூதினைப்பெருக்கிக்களவினைத்துணிந்து
சுரிகுழல்மடந்தையர்த்திறத்து *
காதலேமிகுத்துக்கண்டவாதிரிந்த
தொண்டனேன், நமன்தமர்செய்யும் *
வேதனைக்குஒடுங்கிநடுங்கினேன்
வேலைவெண்திரையலமரக்கடைந்த *
நாதனே! வந்துஉன்திருவடியடைந்தேன்
நைமிசாரணியத்துள்எந்தாய்!
PT.1.6.3
1000 cūtiṉaip pĕrukki kal̤aviṉait tuṇintu * curi kuzhal maṭantaiyar tiṟattu *
kātale mikuttu kaṇṭavā tirinta tŏṇṭaṉeṉ * namaṉ-tamar cĕyyum **
vetaṉaikku ŏṭuṅki naṭuṅkiṉeṉ * velai vĕṇ tirai alamarak kaṭainta
nātaṉe * vantu uṉ tiruvaṭi aṭainteṉ * naimicāraṇiyattul̤ ĕntāy-3

Ragam

Kāmbhoji / காம்போதி

Thalam

Ādi / ஆதி

Bhavam

Self

Saranagathi

Simple Translation

1000. O my Father in Naimiśāraṇyam. You who churned the milk ocean, stirring its white waves into foam! I gambled and stole without shame, longed for women with curling hair, and wandered after every sight I saw. Now, trembling in fear of Yama’s men and the pain they bring - I have come, at last, to Your sacred feet.

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
நைமிசாரணியத்துள் நைமிசாரணியத்தில் இருக்கும்; எந்தாய்! என் தந்தையே!; வெண் வெளுத்த; திரை அலைகளையுடைய; வேலை பாற்கடலை; அலமர கலங்கும்படி; கடைந்த நாதனே! கடைந்த நாதனே!; சூதினைப் பெருக்கி அதிகமாக சூதாடியும்; களவினை களவு செய்வதில்; துணிந்து துணிந்தும்; சுரி குழல் சுருண்ட கூந்தலையுடைய; மடந்தையர் பெண்கள்; திறத்து விஷயத்திலே; காதலே மிகுத்து மிக்கக் காதல் கொண்டு; கண்டவா கண்டபடியெல்லாம்; திரிந்த தொண்டனேன் திரிந்த நான்; நமன் தமர் யமதூதர்கள்; செய்யும் செய்யப்போகிற; வேதனைக்கு வேதனைகளை; ஒடுங்கி நினைத்து; நடுங்கினேன் உடல் குன்றி நடுங்கினவனாய்; வந்து இன்று வந்து; உன் திருவடி உன் திருவடிகளை; அடைந்தேன் சரணமடைந்தேன்
vel̤ Whitish; thirai having waves; vĕlai thiruppāṛkadal (kshīrābdhi – milk ocean); alamara to agitate; kadaindha one who churned; nādhanĕ ŏh lord!; naimisāraṇiyaththul̤ endhāy! the benefactor who arrived in ṣrī naimiṣāraṇyam; sūdhinaip perukki spending a lot of time gambling; kal̤avinaith thuṇindhu having firm faith in robbing; suri curly; kuzhal having hair; madandhaiyar thiṛaththu towards the women; kādhal miguththu having increased love; kaṇda ā in the matters visible to eyes; thirindha following as desired; thoṇdanĕn ī who served them; naman thamar servitors of yama; seyyum doing; vĕdhanaikku thinking about the torture; odungi having the limbs weakened; nadunginĕn one who was shivering; un thiruvadi at your highness- divine feet; vandhu adaindhĕn came and surrendered.