TCV 81

திருவேங்கடவன் திருவடிகளை அடையுங்கள்

832 கடைந்துபாற்கடல்கிடந்து காலநேமியைக்கடிந்து *
உடைந்தவாலிதன்தனக்கு உதவவந்திராமனாய் *
மிடைந்தவேழ்மரங்களும் அடங்கவெய்து * வேங்கடம்
அடைந்தமாலபாதமே அடைந்துநாளுமுய்ம்மினோ.
832 ## kaṭainta pāṟkaṭal kiṭantu * kālanemiyaik kaṭintu *
uṭainta vāli taṉ taṉakku * utava vantu irāmaṉāy **
miṭainta ezh maraṅkal̤um * aṭaṅka ĕytu veṅkaṭam *
aṭainta māla pātame * aṭaintu nāl̤um uymmiṉo (81)

Ragam

Surutti / சுருட்டி

Thalam

Tiripuṭai / திரிபுடை

Bhavam

Self

Simple Translation

832. The lord stays in the Thiruvenkatam hills who churned the milky ocean and rests on the ocean forever. He gave his grace to Vāli after killing him, and destroyed the seven trees with one arrow If you worship the feet of Thirumāl you will be saved.

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
கடைந்த அம்ருதத்திற்காக கடையப்பட்ட; பாற்கடல் பாற்கடலிலே; கிடந்து சயனித்திருக்கும்; காலநேமியைக் காலநேமியென்னுமசுரனை; கடிந்து வென்று; உடைந்த வாலி மனமுடைந்த வாலியின்; தன் தனக்கு தம்பியான சுக்ரீவனுக்கு; உதவ வந்து உதவி செய்ய வந்து; இராமனாய் ராமனாய் அவதரித்து; மிடைந்த ஏழ் நெருங்கி நின்ற ஏழு; மரங்களும் மரா மரங்களையும்; அடங்க எய்து பாணங்களாலே துளைத்து; வேங்கடம் அடைந்த திருவேங்கடமலையிலே இருக்கும்; மால பாதமே எம்பெருமானுடைய திருவடிகளை; அடைந்து நாளும் உய்ம்மினோ அடைந்து உய்வடையுங்கள்