PT 1.6.9

தவஞ்செய்து நின் திருவடி சேர்ந்தேன்

1006 ஊனிடைச்சுவர்வைத்துஎன்புதூண்நாட்டி
உரோமம்வேய்ந்துஒன்பதுவாசல் *
தானுடைக்குரம்பைப்பிரியும்போது உன்தன்
சரணமேசரணமென்றிருந்தேன் *
தேனுடைக்கமலத்திருவினுக்கரசே!
திரைகொள்மாநெடுங்கடல்கிடந்தாய்! *
நானுடைத்தவத்தால்திருவடியடைந்தேன்
நைமிசாரணியத்துள்எந்தாய்!
PT.1.6.9
1006 ūṉ iṭaic cuvar vaittu ĕṉpu tūṇ nāṭṭi * uromam veyntu ŏṉpatu vācal *
tāṉ uṭaik kurampai piriyumpotu * uṉ-taṉ caraṇame caraṇam ĕṉṟu irunteṉ **
teṉ uṭaik kamalat tiruviṉukku arace * tirai kŏl̤ mā nĕṭuṅ kaṭal kiṭantāy *
nāṉ uṭait tavattāl tiruvaṭi aṭainteṉ * naimicāraṇiyattul̤ ĕntāy-9

Ragam

Kāmbhoji / காம்போதி

Thalam

Ādi / ஆதி

Bhavam

Self

Saranagathi

Simple Translation

1006. O my Father in Naimiśāraṇyam, Lord of Lakshmi who rose from the honey-filled lotus, You rest in the deep, waveless milk ocean. This fragile hut of flesh, with bones as pillars, skin as walls, and nine doors leading nowhere, was all I knew. But when it came time to part from this body, I held firm: “Your divine feet—only they are my refuge.” By the strength of that resolve and your grace, I have reached your sacred feet and surrendered.

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
நைமிசாரணியத்துள் நைமிசாரணியத்தில் இருக்கும்; எந்தாய்! என் தந்தையே!; தேன் உடைக் தேன் நிறைந்த; கமல தாமரைப்பூவில் பிறந்த; திருவினுக்கு அரசே! மஹாலக்ஷ்மிக்கு அரசே!; திரை கொள் அலைகள் நிறைந்த; நெடுங்கடல்! பெரிய ஆழ்ந்த பாற்கடலில்; கிடந்தாய் சயனித்திருப்பவனே!; ஊன் இடை சதயையே நடுநடுவே; சுவர் வைத்து சுவராக வைத்து; என்பு எலும்புகளை; தூண் நாட்டி தூணாக நாட்டி; உரோமம் வேய்ந்து ரோமங்களால் மூடி; ஒன்பதுவாசல் தான் ஒன்பதுவாசல்கள்; உடை உடைய; குரம்பை குடிசை போன்ற இந்த சரீரத்தை; பிரியும் போது விட்டுப்பிரியுங்காலத்தில்; உன் தன் உன்னுடைய; சரணமே சரணம் திருவடிகளே சரணம்; என்று இருந்தேன் என்று இருந்தேன்; நானுடைத் தவத்தால் உந்தன் அருளால்; திருவடி உன் திருவடிகளை; அடைந்தேன் சரணமடைந்தேன்
thĕn honey; udai having; kamalam having lotus flower as abode; thiruvinukku for periya pirāttiyār; arasĕ oh beloved one!; thirai kol̤ ḥaving waves; mā nedu vast, deep; kadal in thiruppāṛkadal (milk ocean); kidandhāy oh one who is mercifully reclining!; naimisāraṇiyaththul̤ mercifully residing in ṣrī naimiṣāraṇyam; endhāy oh great benefactor!; ūn flesh; idai in between; suvar vaiththu placed as wall; enbu bone; thūṇ nātti planted as pillar; urŏmam with hair; mĕyndhu covered; onbadhu vāsal nine entrances; udai having; kurambai this body which is a house; piriyumbŏdhu while leaving; unṛan your highness-; saraṇamĕ divine feet only; saraṇam enṛu to have as refuge; irundhĕn ī considered;; nānudai (now) my; thavaththāl by your highness, the penance; thiruvadi your highness- divine feet; adaindhĕn ī reached.