Who Knows His True Form?
உண்மையான உருவம் யாருக்குத் தெரியும்
2054 திருவடிவில்கருநெடுமால்சேயனென்றும்
திரேதைக்கண்வளையுருவாய்த்திகழ்ந்தானென்றும் *
பெருவடிவில்கடலமுதம்கொண்டகாலம்
பெருமானைக்கருநீலவண்ணன்தன்னை *
ஒருவடிவத்தோருருவென்றுஉணரலாகாது
ஊழிதோறூழிநின்றேத்தலல்லால் *
கருவடிவிற் செங்கண்ணவண்ணன்தன்னைக்
கட்டுரையேயாரொருவர் காண்கிற்பாரே?