60

Thiru Allik Keni

திருவல்லிக்கேணி

Thiru Allik Keni

Thiruvallikkeni, Brindāranya Kshetram

ஸ்ரீ ருக்மணி ஸமேத ஸ்ரீ வேங்கடக்ருஷ்ணாய நமஹ

Thayar: Sri Rukmani Thāyar
Moolavar: Sri Venkata krishnan
Utsavar: Sri Pārthasārathy
Vimaanam: Anandha, Pranava, Pushpaka, Sesha, Thaivagai
Pushkarani: Kairavini
Thirukolam: Nindra (Standing)
Direction: East
Mandalam: Thondai Nādu
Area: Chennai
State: TamilNadu
Aagamam: Vaikānasam
Sampradayam: Thenkalai
Brahmotsavam: Chithirai Thiruvonam Aani Thiruvonam
Days: 10 10
Timings: 6 am to 12 pm 4 pm to 9 pm
Search Keyword: Thiruvallikkeni
Tamil
Simplified
English
Verse info
Synonyms
Translation

PT 2.3.1

1068 விற்பெருவிழவும் கஞ்சனும்மல்லும்
வேழமும்பாகனும்வீழ *
செற்றவன்தன்னை * புரமெரிசெய்த
சிவனுறுதுயர்களைதேவை *
பற்றலர்வீயக்கோல் கையில்கொண்டு
பார்த்தன்றன்தேர்முன்நின்றானை *
சிற்றவைபணியால்முடிதுறந் தானைத்
திருவல்லிக்கேணிக்கண்டேனே. (2)
1068 ## வில் பெரு விழவும் கஞ்சனும் மல்லும் * வேழமும் பாகனும் வீழ *
செற்றவன்-தன்னை புரம் எரி செய்த * சிவன் உறு துயர் களை தேவை **
பற்றலர் வீயக் கோல் கையில் கொண்டு * பார்த்தன்-தன் தேர்முன் நின்றானை *
சிற்றவை பணியால் முடி துறந்தானைத் * திருவல்லிக்கேணிக் கண்டேனே-1
1068. ##
viRperu vizhavum kaNYchanum mallum * vEzhamum pāganum veezha *
cheRRavan thannai purameri seydha * sivanuRu thuyargaLai thEvai *
paRRalar veeyak kOl kaiyil koNdu * pārtthan than thErmun ninRānai *
siRRavai paNiyāl mudi thuRandhānaith * thiruvallikkENik kaNdEnE * (2) 2.3.1

Ragam

தோடி

Thalam

ஆதி

Bhavam

Self

Simple Translation

1068. The lord fought and killed Kamsan, the wrestlers and the elephant Kuvalayabeedam and its mahout, removed the curse of Shivā, the destroyer of the three forts, helped Arjunā and drove the chariot in the Bhārathā war, defeating the enemies of the Pāndavās, and as Rāma, he obeyed the orders of his stepmother and gave up the kingdom of Ayodhya to his younger brother Bharathan. He stays in Thiruvallikkeni and I saw him there.

Word by word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion. Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
பெரு வில் பெரிய வில்; விழவும் உத்ஸவமும்; கஞ்சனும் கம்ஸனும்; மல்லும் மல்லர்களும்; வேழமும் குவலயாபீட யானையும்; பாகனும் அதன் பாகனும்; வீழ விழும்படி; செற்றவன் தன்னை அழித்தவனும்; புரம் எரி செய்த திரிபுரமெரித்த; சிவன் உறு சிவபெருமான் அடைந்த; துயர் ப்ரஹ்மஹத்தி சாபத்தை; களை தேவை போக்கினவனும்; பற்றலர் சத்துருக்கள்; வீயக் மாளும்படியாக; கோல் சாட்டையை; கையில் கொண்டு கையிலே கொண்டு; பார்த்தன் தன் அர்ஜுனனுடைய; தேர் முன் தேர் முன் பார்த்தசாரதியாய்; நின்றானை நின்றவனும்; சிற்றவை சிறிய தாய்; பணியால் கைகேயியின் சொல்லைக்கேட்டு; முடி கிரீடத்தை; துறந்தானை துறந்தவனுமான எம்பெருமானை; திருவல்லிக்கேணி திருவல்லிக்கேணியில்; கண்டேனே கண்டேனே
vil peru vizhavum the great festival of dhanur yAgam (ritual with bow); kanjanum kamsa; mallum the wrestlers such as chANUra, mushtika et al; vEzhamum the elephant named kuvalayApeedam; pAganum its mahout; vIzha to fall down; seRRavan thannai being the one who destroyed; puram eri seydha one who burnt thripuram (the three towns); sivan rudhran; uRu acquired; thuyar the suffering due to harming his teacher (brahmA); kaLai eliminated; dhEvai being the lord; paRRalar enemies; vIya to be destroyed; kOl thorny stick; kaiyil in his hand; koNdu holding; pArththan than arjunan-s; thEr mun in front of the chariot; ninRAnai being the one who stood as the charioteer; siRRavai step-mother kaikEyi-s; paNiyAl obeying the words; mudi crown (which is to be given during coronation); thuRandhAnai SrI pArthasArathy who well abandoned; thiruvallikkENi in thiruvallikkENi; kaNdEn I got to see

PT 2.3.2

1069 வேதத்தைவேதத்தின் சுவைப்பயனை
விழுமியமுனிவர்விழுங்கும் *
கோதிலின்கனியை நந்தனார்களிற்றைக்
குவலயத்தோர்தொழுதேத்தும் *
ஆதியைஅமுதைஎன்னையாளுடை
யப்பனை ஒப்பவரில்லா
மாதர்கள்வாழும் * மாடமாமயிலைத்
திருவல்லிக்கேணிக்கண்டேனே. (2)
1069 ## வேதத்தை வேதத்தின் சுவைப் பயனை * விழுமிய முனிவர் விழுங்கும் *
கோது இல் இன் கனியை நந்தனார் களிற்றைக் * குவலயத்தோர் தொழுது ஏத்தும்
ஆதியை அமுதை என்னை ஆள் உடை அப்பனை * ஒப்பவர் இல்லா
மாதர்கள் வாழும் * மாட மா மயிலைத் * திருவல்லிக்கேணிக் கண்டேனே-2
1069. ##
vEdhatthai vEdhaththin suvaippayanai * vizhumiya munivar vizhungkum *
kOdhilin kaniyai nandhanār kaLiRRaik * kuvalayaththOr dhozhudhEtthum *
ādhiyai amudhai ennaiyāLudai appanai * oppavarillā mādhargaL vāzhum *
mādamā mayilaith * thiruvallikkENik kaNdEnE. (2) 2.3.2

Ragam

தோடி

Thalam

ஆதி

Bhavam

Self

Divya Desam

Simple Translation

1069. Our god, the bull-like son of Nandan, the ruler of the sky, the faultless fruit that sages enjoy, the first one on earth, as sweet as nectar, the Vedās, the sweet taste of the Vedās, and their fruition that the sages enjoy stays in Thiruvallikkeni where peacocks as beautiful as women dance on the lovely porches. I saw him there.

Word by word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion. Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
வேதத்தை வேதஸ்வரூபியானவனும்; சுவை அவரவர்களுடைய ருசிக்குத் தக்கபடி; வேதத்தின் வேதத்தில் சொல்லிய; பயனை கரும பலனை அளிப்பவனும்; விழுமிய முனிவர் சிறந்த முனிவர்கள்; விழுங்கும் அநுபவிக்கும்; கோதில் கோது இல்லாத; இன் கனியை போக்யமான பழம் போன்றவனும்; நந்தனார் நந்தகோபனுக்குப்; களிற்றை பிறந்த குட்டியானை போன்றவனும்; குவலயத்தோர் பூமியிலுள்ளவர் எல்லாரும்; தொழுது ஏத்தும் வணங்கித் துதிக்கும்; ஆதியை ஆதிமூர்த்தியை; அமுதை அமுதம் போன்றவனும்; என்னை என்னை; ஆளுடை அடிமை கொண்டவனுமான; அப்பனை எம்பிரானை; ஒப்பவர் இல்லா ஒப்பற்ற; மாதர்கள் வாழும் பெண்கள் வாழும்; மாட மா மாடங்களையுடைய செல்வம் நிறைந்த; மயிலை சிறந்த மயிலையிலிருக்கும் பெருமானை; திருவல்லிக்கேணி திருவல்லிக்கேணியில்; கண்டேனே கண்டேனே
vEdhaththai one who has vEdham as his wealth; suvai matching the taste (of the devotees); vEdhaththin for karmAnushtAnams [observance of deeds] mentioned in vEdham; payanai being the one who bestows the results; vizhumiya great; munivar sages such as sanaka et al; vizhungum enjoying; kOdhu il faultless; in sweet; kaniyai very enjoyable like a fruit; nandhanAr for SrI nandhagOpa; kaLiRRai being the one who is enjoyable like an elephant calf; kuvalayaththOr residents of earth; thozhudhu surrendered; Eththum praising; Adhiyai the cause of the universe; amudhai sweet like nectar; ennai ALudai who enslaved me; appanai benefactor; oppavar matching; illA not having; mAdhargaL women; vAzhum living; mAdam having mansions; mA rich; mayilai having mylApUr as capital; thiruvallikkENik kaNdEnE I got to see in thiruvallikkENi

PT 2.3.3

1070 வஞ்சனைசெய்யத் தாயுருவாகி
வந்தபேய்அலறிமண்சேர *
நஞ்சமர்முலையூடு உயிர்செகவுண்ட
நாதனைத் தானவர்கூற்றை *
விஞ்சைவானவர் சாரணர்சித்தர்
வியந்துதுதிசெய்யப்பெண்ணுருவாகி *
அஞ்சுவையமுதம்அன்று அளித்தானைத்
திருவல்லிக்கேணிக்கண்டேனே.
1070 வஞ்சனை செய்யத் தாய் உரு ஆகி * வந்த பேய் அலறி மண் சேர *
நஞ்சு அமர் முலைஊடு உயிர் செக உண்ட நாதனைத் * தானவர் கூற்றை **
விஞ்சை வானவர் சாரணர் சித்தர் * வியந்துதி செய்யப் பெண் உரு ஆகி **
அம் சுவை அமுதம் அன்று அளித்தானைத் * திருவல்லிக்கேணிக் கண்டேனே-3
1070 vaNYchanai seyyath thāyuruvāgi * vanNdhapEy alaRimaN sEra *
nNaNYchamar mulaiyoodu uyirsegavuNda nNādhanaith * thānavar kooRRai *
viNYchai vāNnavar sāraNar sitthar * viyanNdhu thudhiseyyap peNNuruvāgi *
aNYchuvai amudham anRu aLiththānaith * thiruvallikkENik kaNdEnE * 2.3.3

Ragam

தோடி

Thalam

ஆதி

Bhavam

Self

Simple Translation

1070. The lord, Yama for the Asurans, drank the poisonous milk from Putanā’s breasts and killed her when she came as a mother to cheat him and took the form of Mohini when the milky ocean was churned took the nectar and gave it to the gods as the Sāranar and the Siddhas praised him in amazement. He stays in Thiruvallikkeni and I saw him there.

Word by word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion. Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
வஞ்சனை செய்ய கபடமாக; தாய் தாய்; உருவாகி வந்த வடிவு கொண்டுவந்த; பேய் அலறி பூதனை கதறிக்கொண்டு; மண் சேர பூமியில் விழ; நஞ்சு அமர் விஷந்தடவின அவளது; முலையூடு மார்பின் வழியாக; உயிர் செக உயிர் போகும்படி; உண்ட நாதனை பாலுண்டவனும்; தானவர் அஸூரர்கட்கு; கூற்றை யமன் போன்றவனும்; விஞ்சை வித்யாதரர்கள்; வானவர் சாரணர் தேவர்கள் சாரணர்கள்; சித்தர் சித்தர்கள் ஆகியோர்; வியந்து வியந்து; துதி செய்ய வணங்கும்படி; பெண் உருவாகி மோஹினியாக வந்து; அம் சுவை இனிய சுவையுள்ள; அமுத அமுதத்தை தேவர்களுக்கு; அன்று அளித்தானை அன்று அளித்த பெருமானை; திருவல்லிக்கேணி திருவல்லிக்கேணியில்; கண்டேனே கண்டேனே
vanjanai seyya to cheat (krishNa); thAy uruvAgi vandha came disguising in the form of the mother; pEy pUthanA; alaRi to cry out; maN on earth; sEra to fall; nanju amar filled with poison; mulai Udu through the bosom; uyir (her) vital air (life); sega to leave; uNda mercifully consumed; nAdhanai being sarvaSEshi (lord of all); dhAnavar for demons; kURRai being death; vinjai vAnavar vidhyAdharas (celestial people); sAraNar chAraNas (celestial people); siththar sidhdhas (celestial people) et al; viyandhu being amazed; thudhi seyya to praise; peN uruvu Agi assuming a feminine form; anRu when indhra had lost his wealth; am beautiful; suvai having taste; amudham nectar; aLiththAnai one who gave to dhEvathAs; thiruvallikkENik kaNdEnE saw in thiruvallikkENi

PT 2.3.4

1071 இந்திரனுக்கென்று ஆயர்கள்எடுத்த
எழில்விழவில்பழநடைசெய் *
மந்திரவிதியில்பூசனைபெறாது
மழைபொழிந்திடத்தளர்ந்து * ஆயர்
எந்தமோடு இனவாநிரைதளராமல்
எம்பெருமான்! அருளென்ன *
அந்தமில்வரையால்மழைதடுத் தானைத்
திருவல்லிக்கேணிக்கண்டேனே.
1071 இந்திரனுக்கு என்று ஆயர்கள் எடுத்த * எழில் விழவில் பழ நடைசெய் *
மந்திர விதியில் பூசனை பெறாது * மழை பொழிந்திடத் தளர்ந்து **
ஆயர் எந்தம்மோடு இன ஆ-நிரை தளராமல் * எம் பெருமான் அருள் என்ன *
அந்தம் இல் வரையால் மழை தடுத்தானைத் * திருவல்லிக்கேணிக் கண்டேனே-4
1071
inNdhiraNnukkenRu āyargaL eduttha * ezhilvizhavil pazhanNadaisey *
manNdhira vidhiyil poosanai peRādhu * mazhaipozhinNdhidath thaLarnNdhu *
āyar enNdhammOdu inavā nNiraithaLarāmal * emberumān aruLenna *
anNdhamil variyāl mazhai thaduththānaith * thiruvallikkENik kaNdEnE * 2.3.4

Ragam

தோடி

Thalam

ஆதி

Bhavam

Self

Divya Desam

Simple Translation

1071. Our lord Kannan saved the cows and the cowherds when they worshiped him saying, “O dear lord! Give us your grace and protect us and our cows from the storm!”, carried Govardhanā mountain as an umbrella and saved them from the storm sent by Indra, as he was angry because they had not performed their pujas to him immediately. He stays in Thiruvallikkeni and I saw him there.

Word by word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion. Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
இந்திரனுக்கு இந்திரனுக்கு; என்று விருந்திட வேண்டுமென்று; ஆயர்கள் எடுத்த ஆயர்கள் நடத்தின; எழில் விழவில் அழகிய விழாவில்; பழ நடைசெய் எப்போதும் செய்யும்; மந்திர விதியில் மந்திர விதிப்படி; பூசனை பூஜைகள்; பெறாது செய்யப்படாததால்; மழை பொழிந்திட இந்திரன் கல் மழை பெய்விக்க; தளர்ந்து ஆயர் ஆயர்கள் துன்பப்பட்டு; எம் பெருமான் கண்ணபிரானே!; எந்தம்மோடு இன நாங்களும்; ஆ நிரை பசுக்களின் கூட்டமும்; தளராமல் மழையினால் துயரப்படாமல்; அருள் காப்பாற்றபடவேண்டும்; என்ன என்று பிரார்த்திக்க; அந்தம் இல் அளவில்லாத மிகப்பெரிய; வரையால் கோவர்த்தனமலையைக் கொண்டு; மழை மழையை; தடுத்தானை தடுத்தருளின பெருமானை; திருவல்லிக்கேணி திருவல்லிக்கேணியில்; கண்டேனே கண்டேனே
indhiranukku enRu to offer feast for indhra; AyargaL cowherds; eduththa vowed; ezhil beautiful; vizhavil in the festival of sacrifice; pazha nadai sey as per previous practice; mandhira vidhiyil as per manthrams; pUsanai peRAdhu due to not getting worshipped; mazhai hale; pozhindhida made it rain; Ayar cowherds; thaLarndhu became sad; emperumAn Oh our lord!; endhammOdu with us; inam herds of; Anirai herds of cow; thaLarAmal to not suffer; aruL mercifully protect; enna as they prayed; andham il immeasurable; varaiyAl by gOvardhana mountain; mazhai that rain; thaduththAnai one who stopped; thiruvallikkENik kaNdEnE saw in thiruvallikkENi

PT 2.3.5

1072 இன்துணைப்பதுமத்து அலர்மகள்தனக்கும்
இன்பன் நற்புவிதனக்குஇறைவன் *
தந்துணைஆயர்பாவை நப்பின்னை
தனக்குஇறை மற்றையோர்க்கெல்லாம்
வன்துணை * பஞ்சபாண்டவர்க்காகி
வாயுரைதூதுசென்றியங்கும்
என்துணை * எந்தைதந்தைதம்மானைத்
திருவல்லிக்கேணிக்கண்டேனே.
1072 இன் துணைப் பதுமத்து அலர்மகள்-தனக்கும் இன்பன் * நல் புவி-தனக்கு இறைவன் *
தன் துணை ஆயர் பாவை நப்பின்னை தனக்கு இறை * மற்றையோர்க்கு எல்லாம்
வன் துணை ** பஞ்ச பாண்டவர்க்கு ஆகி * வாய் உரை தூது சென்று இயங்கும் *
என் துணை எந்தை தந்தை தம்மானை * திருவல்லிக்கேணிக் கண்டேனே-5
1072
in thuNaippadhu maththu alarmagaL thanakkum inban * nNaR puvidhanakku iRaivan *
thanthuNai āyarpāvai nNappinnai thanakku iRai * maRRaiyOrku ellām vaNnthuNai *
paNYcha pāNdavarkkāgi * vāyurai thoodhusenRiyangum eNnthuNai *
enNdhai thanNdhai thammānaith * thiruvallikkENik kaNdEnE * 2.3.5

Ragam

தோடி

Thalam

ஆதி

Bhavam

Self

Divya Desam

Simple Translation

1072. Thirumāl, the king of the world, the beloved of Lakshmi, the husband of Nappinnai, the cowherd girl, and a companion for all, who went as a messenger to the Kauravās for the Pāndavās and was the help of my father and the father of my father, stays in Thiruvallikkeni temple and I saw him there.

Word by word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion. Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
இன் துணை தனக்கினிய துணையான; பதுமத்து தாமரைப்பூவில்; அலர்மகள் தனக்கும் பிறந்த மஹாலக்ஷ்மிக்கு; இன்பன் இனியவனும்; நல் புவி தனக்கு இறைவன் பூமா தேவிக்கு நாதனும்; தன் துணை தன்னையே துணையாகக் கொண்ட; ஆயர் பாவை ஆயர்குலப் பெண்; நப்பின்னை தனக்கு நப்பின்னைக்கு; இறை நாயகனும்; மற்றையோர்க்கு எல்லாம் மற்றுமுள்ள எல்லாருக்கும்; வன் துணை பெரிய வலிய துணையாயிருப்பவனும்; பஞ்ச பாண்டவர்க்கு ஆகி பஞ்ச பாண்டவர்களுக்கு; தூது சென்று தானே தூதனாக சென்று; வாய் உரை அவர்களுக்காக; இயங்கும் பேசினவனும்; என் துணை எனக்குத் துணையானவனும்; எந்தை தந்தை என் குலத் தந்தையுமான; தம்மானை பெருமானை; திருவல்லிக்கேணி திருவல்லிக்கேணியில்; கண்டேனே கண்டேனே
in sweet (for his heart); thuNai being a companion; padhumam one who has lotus flower as birth place; alar magaL thanakkum for periya pirAttiyAr; inban being enjoyable; nal one who forbears everything; puvi thanakku for SrI bhUmip pirAtti; iRaivan being dear; than thuNai having him as the only companion; Ayar pAvai cowherd girl; nappinnai thanakku for nappinnaip pirAtti; iRai being the lord; maRRaiyOrkku ellAm for everyone else; val thuNai being a strong companion; panja pANdavarkku for pancha pANdavas; Agi assuming all types of relationships; vAy urai their words; senRu informed to dhuryOdhana et al; thUdhu iyangum one who mercifully went as divine messenger; en thuNai being a friend in need for people like me; endhai thandhai thammAnai the lord of my clan; thiruvallikkENik kaNdEnE I saw in thiruvallikkENi.

PT 2.3.6

1073 அந்தகன்சிறுவன் அரசர்தமரசற்கிளையவன்
அணியிழையைச்சென்று *
எந்தமக்குஉரிமைசெய்யெனத்தரியாது
எம்பெருமான்! அருளென்ன *
சந்தமல்குழலாளலக்கண் நூற்றுவர்தம்
பெண்டிரும்எய்திநூலிழப்ப *
இந்திரன்சிறுவன் தேர்முன்நின்றானைத்
திருவல்லிக்கேணிக்கண்டேனே.
1073 அந்தகன் சிறுவன் அரசர்-தம் அரசற்கு இளையவன் * அணி இழையைச் சென்று *
எந்தமக்கு உரிமை செய் எனத் தரியாது * எம் பெருமான் அருள் என்ன **
சந்தம் அல் குழலாள் அலக்கண் நூற்றுவர்-தம் * பெண்டிரும் எய்தி நூல் இழப்ப *
இந்திரன் சிறுவன் தேர் முன் நின்றானை * திருவல்லிக்கேணிக் கண்டேனே-6
1073
anNdhagan siRuvaNn arasar tham arasaRku iLaiyavaNn * aNiyizhaiyaic chenRu *
`enNdhamakku urimai sey'enath thariyādhu * `emberumān aruL!' enna *
sanNdhamal kuzhalāLalakkaN nNooRRuvartham * peNdirum eydhinNool izhappa *
inNdhiran siRuvan thErmun nNinRānaith * thiruvallikkENik kaNdEnE * 2.3.6

Ragam

தோடி

Thalam

ஆதி

Bhavam

Self

Divya Desam

Simple Translation

1073. Kannan came and helped Draupadi when Duhshasanan, the younger son of blind Dhrtarashtran and younger brother of the king of kings Duryodhanān took her to the Kauravās’ assembly and tried to disgrace her, drove the chariot in the Bhārathā war for Arjunā and killed all the hundred Kauravās in the battle, widowing their women whose hair was fragrant with sandal. He stays in Thiruvallikkeni and I saw him there.

Word by word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion. Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
அந்தகன் உட்கண் குருடனான த்ருதராஷ்ட்ரனுடைய; சிறுவன் பிள்ளையாய்; அரசர் தம் அரசற்கு அரசனான; அரசற்கு துரியோதனனுடைய; இளையவன் தம்பி துச்சாஸநன்; அணி ஆபரணம் அணிந்த அழகிய; இழையை திரௌபதியிடம் வந்து; சென்று சூதிலே உன்னைத் தோற்றாகள் அதனால்; எந்தமக்கு உரிமை நீ எங்களுக்கு அடிமை; செய் செய்யக்கடவாய் என்று சொல்ல; என தரியாது இதனைப் பொறுக்க மாட்டாமல்; எம் பெருமான்! எம் பெருமானே!; அருள்! என்ன கிருபை பண்ணவேணும் என்று பிரார்த்திக்க; சந்தம் அல் அழகிய கருத்த; குழலாள் கூந்தலையுடைய அந்த த்ரௌபதியின்; அலக்கண் மனவருத்தத்தை; நூற்றுவர் தம் துரியோதநாதியர் நூறு பேர்களுடைய; பெண்டிரும் எய்தி மனைவிகளும் அடைந்து; நூலிழப்ப மங்கள சூத்திரத்தை இழக்கும்படியாக; இந்திரன் இந்திர புத்திரனான; சிறுவன் அர்ஜூநனுடைய; தேர்முன் தேரின் முன் ஸாரதியாய்; நின்றனை நின்ற பெருமானை; திருவல்லிக்கேணிக் திருவல்லிக்கேணியில்; கண்டேனே கண்டேனே
andhagan dhritharAshtra, the blind man, his; siRuvan being the son; arasar tham arasaRku dhuryOdhana, the king of kings; iLaiyavan brother dhuSSAsanan; aNi decorated; izhaiyai towards dhraupadhi who is having ornaments; senRu went (since they lost you as well, to us in gambling); endhamakku for us; urimai sey serve us; ena as he told; dhariyAdhu being unable to bear (to have servitude towards others); emperumAn! My lord!; aruL you should shower your mercy upon me and protect me; enna as she prayed; al dark; sandham coloured; kuzhalAL dhraupadhi who has hair, her; alakkaN sorrow; nURRuvar tham dhuryOdhanan-s brothers, totally hundred in number, their; peNdirum wives; eydhi attained; nUl mangaLasUthram; izhappa to lose; indhiran siRuvan indhras son arjuna, his; thEr mun in front of the chariot; ninRAnai stood and donned the role of charioteer; thiruvallikkENik kaNdEnE I saw in thiruvallikkENi

PT 2.3.7

1074 பரதனும்தம்பிசத்துருக்கனனும்
இலக்குமனோடுமைதிலியும் *
இரவுநன்பகலும்துதிசெய்யநின்ற
இராவணாந்தகனைஎம்மானை *
குரவமேகமழும் குளிர்ப்பொழிலூடு
குயிலொடுமயில்கள்நின்றால *
இரவியின்கதிர்கள் நுழைதல்செய்தறியாத்
திருவல்லிக்கேணிக்கண்டேனே. (2)
1074 பரதனும் தம்பி சத்துருக்கனனும் * இலக்குமனோடு மைதிலியும் *
இரவும் நன் பகலும் துதி செய்ய நின்ற * இராவணாந்தகனை எம்மானை **
குரவமே கமழும் குளிர் பொழிலூடு * குயிலொடு மயில்கள் நின்று ஆல *
இரவியின் கதிர்கள் நுழைதல் செய்தறியாத் * திருவல்லிக்கேணிக் கண்டேனே-7
1074
baradhanum thambi chathrukkananum * ilakkumaNnOdu maidhiliyum *
iravum nNanpagalum thudhiseyya nNinRa * irāvaNānNdhaganai emmānai *
kuravamE kamazhum kuLirpozhiloodu * kuyilodu mayilgaL nNinRāla *
iraviyin kadhirgaL nuzhaidhal seydhaRiyāth * thiruvallikkENik kaNdEnE. 2.3.7

Ragam

தோடி

Thalam

ஆதி

Bhavam

Self

Divya Desam

Simple Translation

1074. As Rāma he fought with Rāvana, the king of Lankā, while Bharathan, Satrughnan, Lakshamanan and Sita prayed for him night and day. He stays in Thiruvallikkeni and I saw him there where kuravam flowers bloom in a cool thick grove where the rays of the sun do not enter and cuckoo birds sing and peacocks dance.

Word by word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion. Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
பரதனும் தம்பி பரதனும் அவன் தம்பி; சத்துருக்கனனும் சத்துருக்கனனும்; இலக்குமனோடு லக்ஷ்மணணும்; மைதிலியும் மைதிலியும்; இரவும் இடைவிடாது இரவும்; நன் பகலும் நல்ல பகலும்; துதி செய்ய நின்ற தோத்திரம் பண்ணும்; இராவணாந்தகனை ராவணனைக் கொன்ற; எம்மானை பெருமானை; குரவமே கமழும் குரவமலர்களே கமழும்; குளிர் குளிர்ந்த; பொழிலூடு சோலைகளிலே; குயிலொடு குயில்களும்; மயில்கள் நின்றுஆல மயில்களும்ஆரவாரிக்க; இரவியின் ஸூர்ய கிரணங்கள்; கதிர்கள் சோலைச்செறிவாலே; நுழைதல் செய்தறியா உள்ளே நுழைந்தறியாத; திருவல்லிக்கேணி திருவல்லிக்கேணியில்; கண்டேனே கண்டேனே
baradhanum SrI bharathAzhwAn; thambi his younger brother; saththurukkananum SrI SathrugnAzhwAn; ilakkumanOdu with iLaiyaperumAL (lakshmaNa); maidhiliyum sIthAp pirAtti; iravum in night; nal distinguished (due to showing the entities); pagalum in day; thudhi seyya to praise; ninRa one who is mercifully present; emmAn my lord; irAvaNAndhaganai chakravarthith thirumagan who killed rAvaNan; kuravam kurA flowers; kamazhum spreading fragrance; kuLir cool; pozhilUdu in the garden; kuyilodu with cuckoos (which are singing); mayilgaL peacocks; ninRu standing along firmly; Ala dancing; iraviyin kadhirgaL sun-s rays (due to the density of the garden); nuzhaidhal seydhaRiyA not knowing to enter; thiruvallikkENik kaNdEnE I saw in thiruvallikkENi

PT 2.3.8

1075 பள்ளியிலோதிவந்ததன்சிறுவன்
வாயில்ஓராயிரநாமம் *
ஒள்ளியவாகிப்போத ஆங்குஅதனுக்கு
ஒன்றுமோர்பொறுப்பிலனாகி *
பிள்ளையைச் சீறிவெகுண்டு தூண்புடைப்பப்
பிறையெயிற்றனல்விழிபேழ்வாய் *
தெள்ளியசிங்கமாகியதேவைத்
திருவல்லிக்கேணிக்கண்டேனே. (2)
1075 ## பள்ளியில் ஓதி வந்த தன் சிறுவன் * வாயில் ஓர் ஆயிரம் நாமம் *
ஒள்ளிய ஆகிப் போத ஆங்கு அதனுக்கு * ஒன்றும் ஓர் பொறுப்பு இலன் ஆகி **
பிள்ளையைச் சீறி வெகுண்டு தூண் புடைப்ப * பிறை எயிற்று அனல் விழிப் பேழ் வாய் *
தெள்ளிய சிங்கம் ஆகிய தேவைத் * திருவல்லிக்கேணிக் கண்டேனே-8
1075
##
paLLiyilOdhi vanNdhadhan siRuvan * vāyil Orāyira nNāmam *
oLLiyavāgip pOdhaAnku adhanukku * onRumOr poRuppilaNnāgi *
piLLaiyaichcheeRi veguNdu thooNpudaippap * piRaiyeyiRRanal vizhi pEzhvāy *
theLLiya singkamāgiya dhEvaith * thiruvallikkENik kaNdEnE. (2) 2.3.8

Ragam

தோடி

Thalam

ஆதி

Bhavam

Self

Divya Desam

Simple Translation

1075. When Prahladan, the son of Hiranyan came home from school and recited god's thousand names, his father, the Asuran Hiranyan, was enraged. Prahladan claimed the god would appear wherever a devotee wished and Hiranyan, without thinking, broke open a pillar, and the god came out in the form of a heroic lion with teeth like crescent moons, fiery eyes and a gaping mouth and killed him. I saw that divine one in Thiruvallikkeni.

Word by word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion. Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
பள்ளியில் பள்ளிக்கூடத்தில்; ஓதி வந்த படித்து விட்டு வீட்டுக்கு வந்த; தன் சிறுவன் தன் மகன் பிரகலாதன்; வாயில் வாயில்; ஓராயிரம் நாமம் ஸஹஸ்ர நாமங்களை; ஒள்ளிய ஆகிப் போத அழகாக உச்சரிக்க; ஆங்கு அதனுக்கு ஒன்றும் ஓர் அதை எள்ளளவும்; பொறுப்பு இலன் பொறுக்கமாட்டாதவனாக; ஆகி ஆகி இரணியன்; பிள்ளையை அந்த பிரகலாதனை; சீறி வெகுண்டு மிகவும் கோபித்து; தூண் புடைப்ப தூணைத் தட்டினபோது; பிறை பிறைபோன்ற; எயிற்று பற்களையும்; அனல் நெருப்பைக் கக்கும்; விழி கண்களையும்; பேழ்வாய் பெரிய வாயையுமுடைய; தெள்ளிய தெளிந்த; சிங்கம் நரசிம்மவதாரம் செய்த; ஆகிய தேவை தேவனை தெளிசிங்கப் பெருமானை; திருவல்லிக்கேணி திருவல்லிக்கேணியில்; கண்டேனே கண்டேனே
paLLiyil in school; Odhi after studies; vandha one who came to him; than siRuvan his son prahlAdhAzhwAn, his; vAyil divine lips; Or Ayira nAmam (sarvESvaran-s) one thousand divine names; oLLiyavAgi beautifully; pOdha as it came towards him; Angu there; adhanukku for reciting such emperumAn-s divine names; onRum Or even little bit; poRuppu ilan Agi not having tolerance; piLLaiyai towards his son; sIRi veguNdu being very angry; thUN the pillar (which was laid by himself); pudaippa hit (in that); piRai like crescent; eyiRu teeth; anal fire sparks emitting; vizhi eyes; pEzhvAy huge mouth; theLLiya clear; singam Agiya one who mercifully incarnated as narasimha; dhEvai lord; thiruvallikkENik kaNdEnE I saw in thiruvallikkENi.

PT 2.3.9

1076 மீனமர்பொய்கைநாண்மலர்கொய்வான்
வேட்கையினோடுசென்றிழிந்த *
கானமர்வேழம் கையெடுத்தலறக்
கராஅதன்காலினைக்கதுவ *
ஆனையின்துயரம்தீரப்புள்ளூர்ந்து
சென்றுநின்றுஆழிதொட்டானை *
தேனமர்சோலைமாடமாமயிலைத்
திருவல்லிக்கேணிக்கண்டேனே. (2)
1076 மீன் அமர் பொய்கை நாள்மலர் கொய்வான் * வேட்கையினோடு சென்று இழிந்த *
கான் அமர் வேழம் கைஎடுத்து அலறக் * கரா அதன் காலினைக் கதுவ **
ஆனையின் துயரம் தீரப் புள் ஊர்ந்து * சென்று நின்று ஆழிதொட்டானை *
தேன் அமர் சோலை மாட மா மயிலைத் * திருவல்லிக்கேணிக் கண்டேனே-9
1076
meenamar poygainNāL malar koyvān * vEtkaiyiNnOdu senRizhinNdha *
kānamar vEzham kaiyeduththalaRak * karā adhan kālinaik kadhuva *
ānaiyin thuyaram theerap puLLoornNdhu * senRu nNinRu āzhi thottānai,
thEnamar sOlai māda māmayilaith * thiruvallikkENik kaNdEnE * 2.3.9

Ragam

தோடி

Thalam

ஆதி

Bhavam

Self

Divya Desam

Simple Translation

1076. When the elephant Gajendra entered a pond where fish frolicked, in the forest to pick some fresh flowers to worship the god, a crocodile caught his legs, and, terrified, he raised his trunk and called Kannan. The god came riding on Garudā and threw his discus, killed the crocodile and saved Gajendra. I saw him, as beautiful as a peacock, in Thiruvallikkeni filled with large palaces and surrounded by groves dripping with honey.

Word by word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion. Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
மீன் அமர் மீன்கள் இருக்கும்; பொய்கை மடுவிலே; நாள் மலர் புதிய புஷ்பங்களை; கொய்வான் பறிக்க வேண்டும் என்ற; வேட்கையினோடு விருப்பத்தோடு; சென்று இழிந்த போய் இறங்கின; கான் அமர் காட்டில் திரியும்; வேழம் யானை கஜேந்திரனை; கரா அதன் முதலையானது; காலினை அந்த யானையின்; கதுவ காலைத் கௌவிக்கொள்ள; கையெடுத்து யானைதனது துதிக்கையை; அலற தூக்கிக் கூச்சலிட; ஆனையின் ஆனையின்; துயரம் தீர துயரம் தீர; புள் ஊர்ந்து கருடன் மேல்; சென்று நின்று சென்று நின்று; ஆழி சக்கரத்தை; தொட்டானை பிரயோகித்த பெருமானை; தேன் அமர் தேன்மாறாத; சோலை சோலைகளையுடைய; மாட மா மயிலை மாடங்கள் உள்ள மயிலையில்; திருவல்லிக்கேணி திருவல்லிக்கேணியில்; கண்டேனே கண்டேனே
mIn amar poygai in the pond filled with fish; nAL freshly blossomed; malar flowers; koyvAn to pluck; vEtkaiynOdu with desire; senRu izhindha which came and entered; kAn in the forest; amar which roams around freely; vEzham elephant; kai its trunk; eduththu lifted up; alaRa to cry out; karA the crocodile; adhan its; kAlinai foot; kadhuvu as it caught (at that time); Anaiyin SrI gajEndhrAzhwAn-s; thuyaram sorrow; thIra to go; puL Urndhu riding on periya thiruvadi (garudAzhwAr); senRu rushed; ninRu stood on the banks of the pond; Azhi thottAnai the lord who launched his thiruvAzhi (sudharSana chakram); thEn amar always having beetles; sOlai surrounded by gardens; mAda mA mayilaith thiruvallikkENik kaNdEnE I saw in thiruvallikkENi which is in mylApUr which has huge mansions

PT 2.3.10

1077 மன்னுதண்பொழிலும்வாவியும்மதிளும்
மாடமாளிகையும்மண்டபமும் *
தென்னன்தொண்டையர்கோன்செய்தநல்மயிலைத்
திருவல்லிக்கேணிநின்றானை *
கன்னிநன்மாட மங்கையர்தலைவன்
காமருசீர்க்கலிகன்றி *
சொன்னசொன்மாலைபத்துடன்வல்லார்
சுகமினிதாள்வர்வானுலகே. (2)
1077 ## மன்னு தண் பொழிலும் வாவியும் மதிளும் * மாட மாளிகையும் மண்டபமும் *
தென்னன் தொண்டையர்-கோன் செய்த நல் மயிலைத் * திருவல்லிக்கேணி நின்றானை **
கன்னி நல் மாட மங்கையர் தலைவன் * காமரு சீர்க் கலிகன்றி *
சொன்ன சொல்-மாலை பத்து உடன் வல்லார் * சுகம் இனிது ஆள்வர் வான்-உலகே-10
1077. ##
mannuthaN pozhilum vāviyum madhiLum * māda māLigaiyum maNdabamum *
thennaNn thoNdaiyarkOn seydha nNanmayilaith * thiruvallikkENi nNinRānai *
kanninNan māda mangkaiyar thalaivan * kāmaruseerk kalikanRi *
sonna sonmālai patthudan vallār * sugam inidhāLvar vāNnulagE. (2) 2.3.10

Ragam

தோடி

Thalam

ஆதி

Bhavam

Self

Divya Desam

Simple Translation

1077. The famous poet Kaliyan, the chief of Thirumangai filled with beautiful palaces, composed a garland of ten pāsurams on the god of Thiruvallikkeni filled with mandapams, tall palaces with porches, forts, ponds and cool groves constructed by the southern king of the Thondai country. If devotees learn and recite these ten pāsurams, they will reach the world of the gods in the sky and rule there happily.

Word by word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion. Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
மன்னு பொழிலும் நித்தியமாய்; தண் குளிர்ந்த; சோலைகளும் சோலைகளும்; வாவியும் நீர் நிலங்களும்; மதிளும் மதில்களும்; மாட மாளிகையும் மாட மாளிகைகளும்; மண்டபமும் மண்டபங்களும்; தென்னன் பாண்டிய குலத்தவரான; தொண்டையர் கோன் திருமங்கை ஆழ்வார்; செய்த அருளிச்செய்த; நல் மயிலை அழகிய மயிலையிலிருக்கும்; திருவல்லிக்கேணி திருவல்லிக்கேணியில்; நின்றானை இருக்கும்; கன்னி நல் அழிவில்லாத நல்ல; மாட மாடங்களையுடைய; மங்கையர் தலைவன் திருமங்கைத் தலைவன்; காமரு சீர்க்கலிகன்றி அழகிய திருமங்கையாழ்வார்; சொன்ன அருளிச்செய்த; சொல் மாலை சொல் மாலையான; பத்துடன் இப்பத்துப் பாசுரங்களையும்; வல்லார் ஓதவல்லவர்கள்; சுகம் இனிது இனிய சுகமான; வான் உலகே ஆள்வர் பரமபதத்தை ஆள்வர்
mannu eternally; thaN cool; pozhilum gardens; vAviyum water bodies; madhiLum fortified streets; mAdam mansions; mALigaiyum multi-storeyed bungalows; maNdapamum having halls; thennan descendant of pANdiya king; thoNdaiyar for the residents of thoNdai nAdu; kOn the king, thoNdaimAn chakravarthi; seydha built; nal beautiful; mayilaith thiruvallikkENi in thiruvallikkENi which is part of mylAppUr which is the capital city; ninRAnai on the one who stood; kanni as protection; nal beautiful; mAdam having mansions; mangaiyar for the residents of thirumangai region; thalaivan being the leader; kAmar beautiful; sIr having SrIvaishNavaSrI (wealth of kainkaryam); kalikanRi AzhwAr; sonna mercifully sang; sol mAlai garland of words; paththudan the ten pAsurams; vallAr those who can learn; inidhu sugam to have eternal experience; vAnulagu paramapadham; ALvar will reach.

MUT 16

2297 வந்துதைத்தவெண்திரைகள் செம்பவளவெண்முத்தம் *
அந்திவிளக்குமணிவிளக்காம் * - எந்தை
ஒருவல்லித்தாமரையாள் ஒன்றியசீர்மார்வன் *
திருவல்லிக்கேணியான்சென்று. (2)
2297 ## வந்து உதைத்த வெண் திரைகள் * செம் பவள வெண் முத்தம் *
அந்தி விளக்கும் அணி விளக்காம் ** - எந்தை
ஒரு அல்லித் தாமரையாள் * ஒன்றிய சீர் மார்வன் *
திருவல்லிக்கேணியான் சென்று -16
2297. ##
vanthuthaittha veNthiraikaL * sempavaLam veNmuttham *
anthi viLakkum aNiviLakkām, * - enthai
oruvallith thāmaraiyāL * onRiyaseer mārvan, *
thiruvallikkENiyān senRu. (2) 16

Ragam

மோஹன

Thalam

திரிபுடை

Bhavam

Self

Divya Desam

Simple Translation

2297. By the tossing sea of Tiruvallikeni, Where corals and pearls washed ashore liken the evening sky and the lamps they light of dusk, the Lord has come to reside, along with the lotus lady who graces his auspicious chest. He is my master.

Word by word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion. Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
ஒரு அல்லி ஒரு ஒப்பற்ற; தாமரையாள் திருமகள்; சென்று ஒன்றிய வந்து பொருந்திய; சீர் அழகிய; மார்வன் திருமார்பை உடையவன்; திருவல்லிக்கேணியான் திருவல்லிக்கேணியில்; எந்தை இருக்கும் எம்பெருமான்; வெண் திரைகள் வெளுத்த அலைகள்; வந்து உதைத்த மோதித் தள்ளிய; செம் பவள சிவந்த பவழங்களும்; வெண் முத்தம் வெளுத்த முத்துக்களும்; அந்தி விளக்கும் மாலை நேரத்தில்; அணி விளக்காம் மங்கள விளக்காக ஒளிவிடும்
oru alli thAmaraiyAL periya pirAttiyAr (SrI mahAlakshmi) who has the incomparable lotus flower which has beautiful petals as her dwelling place; senRu onRiya sIr mArvan one who has beautiful divine heart in which pirAtti fitted nicely; veNthiraigaL vandhu udhaiththa sem pavaLam oN muththam red corals and white pearls which were brought out in an agitated way by the white complexioned waves; andhi viLakkum aNi viLakkAm manifesting the evening time through auspicious lamps; thiruvallikkENiyAn emperumAn who is dwelling in the divine abode of thiruvallikkENi; endhai my lord

NMT 35

2416 தாளால் உலகம் அளந்தவசைவேகொல்? *
வாளாகிடந்தருளும் வாய்திறவான் * - நீளோதம்
வந்தலைக்கும்மாமயிலை மாவல்லிக்கேணியான் *
ஐந்தலைவாய்நாகத்தணை. (2)
2416 ## தாளால் உலகம் * அளந்த அசைவே கொல்? *
வாளா கிடந்தருளும் வாய்திறவான் ** - நீள் ஓதம்
வந்து அலைக்கும் மா மயிலை * மாவல்லிக் கேணியான் *
ஐந்தலை வாய் நாகத்து அணை -35
2416. ##
thāLāl ulagam * aLandha asaivEkol *
vāLākidandharuLum * vāythiRavān *
nILOdham vandhalaikkum māmayilai * māvallikkENiyān *
aindhalaivāy nāgaththaNai? 35

Ragam

அடாணா

Thalam

அட

Bhavam

Self

Divya Desam

Simple Translation

2416. The divine one of Thiruvallikkeni, as beautiful as a peacock, who rests on the five heads of the snake ādisesha where the large waves of the dark ocean roll and dash on the shores is quietly lying now without opening his mouth. Is he tired because he measured the world with his feet?

Word by word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion. Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
நீள் ஓதம் பெரிய அலைகள்; வந்து கரையிலே வந்து; அலைக்கும் வீசும்; மா மயிலை மயிலாபுரிக்கு அடுத்த; மா அல்லிக்கேணியான் அல்லிக்கேணியில் இருப்பவன்; ஐந்தலை ஐந்து தலைகளையும்; வாய் வாய்களையும் உடைய; நாகத்து அணை ஆதிசேஷன் மேல்; வாளா அசையாமல்; கிடந்தருளும் சயனித்திருக்கிறான்; வாய் வாய் திறந்து ஒரு வார்த்தையும்; திறவான் சொல்லாதிருக்கிறான்; தாளால் திருவடியாலே; உலகம் அளந்த உலகம் அளந்த; அசைவேகொல்? ஆயாஸமோ?
nIL Odham vandhu alaikkum mAmayilai mAvallikkEniyAn one who has taken residence at the great thiruvallikkENi which is near the great thirumayilai where waves come and lap; aindhalai vAy nAgaththu aNai vALA kidandharuLum lying still atop the bed of serpent which has five heads and mouths; vAy thiRavAn he is not even speaking; thALAl ulagam aLandha asaivE kol (is this) because of the tiredness after measuring the worlds?