PT 2.3.3

அமுதமளித்தவன் வாழும் இடம் திருவல்லிக்கேணி

1070 வஞ்சனைசெய்யத் தாயுருவாகி
வந்தபேய்அலறிமண்சேர *
நஞ்சமர்முலையூடு உயிர்செகவுண்ட
நாதனைத் தானவர்கூற்றை *
விஞ்சைவானவர் சாரணர்சித்தர்
வியந்துதுதிசெய்யப்பெண்ணுருவாகி *
அஞ்சுவையமுதம்அன்று அளித்தானைத்
திருவல்லிக்கேணிக்கண்டேனே.
PT.2.3.3
1070 vañcaṉai cĕyyat tāy uru āki * vanta pey alaṟi maṇ cera *
nañcu amar mulaiūṭu uyir cĕka uṇṭa nātaṉait * tāṉavar kūṟṟai **
viñcai vāṉavar cāraṇar cittar * viyantuti cĕyyap pĕṇ uru āki **
am cuvai amutam aṉṟu al̤ittāṉait * tiruvallikkeṇik kaṇṭeṉe-3

Ragam

Tōdi / தோடி

Thalam

Ādi / ஆதி

Bhavam

Self

Simple Translation

1070. The lord, Yama for the Asurans, drank the poisonous milk from Putanā’s breasts and killed her when she came as a mother to cheat him and took the form of Mohini when the milky ocean was churned took the nectar and gave it to the gods as the Sāranar and the Siddhas praised him in amazement. He stays in Thiruvallikkeni and I saw him there.

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
வஞ்சனை செய்ய கபடமாக; தாய் தாய்; உருவாகி வந்த வடிவு கொண்டுவந்த; பேய் அலறி பூதனை கதறிக்கொண்டு; மண் சேர பூமியில் விழ; நஞ்சு அமர் விஷந்தடவின அவளது; முலையூடு மார்பின் வழியாக; உயிர் செக உயிர் போகும்படி; உண்ட நாதனை பாலுண்டவனும்; தானவர் அஸூரர்கட்கு; கூற்றை யமன் போன்றவனும்; விஞ்சை வித்யாதரர்கள்; வானவர் சாரணர் தேவர்கள் சாரணர்கள்; சித்தர் சித்தர்கள் ஆகியோர்; வியந்து வியந்து; துதி செய்ய வணங்கும்படி; பெண் உருவாகி மோஹினியாக வந்து; அம் சுவை இனிய சுவையுள்ள; அமுத அமுதத்தை தேவர்களுக்கு; அன்று அளித்தானை அன்று அளித்த பெருமானை; திருவல்லிக்கேணி திருவல்லிக்கேணியில்; கண்டேனே கண்டேனே
vanjanai seyya to cheat (krishṇa); thāy uruvāgi vandha came disguising in the form of the mother; pĕy pūthanā; alaṛi to cry out; maṇ on earth; sĕra to fall; nanju amar filled with poison; mulai ūdu through the bosom; uyir (her) vital air (life); sega to leave; uṇda mercifully consumed; nādhanai being sarvaṣĕshi (lord of all); dhānavar for demons; kūṝai being death; vinjai vānavar vidhyādharas (celestial people); sāraṇar chāraṇas (celestial people); siththar sidhdhas (celestial people) et al; viyandhu being amaśed; thudhi seyya to praise; peṇ uruvu āgi assuming a feminine form; anṛu when indhra had lost his wealth; am beautiful; suvai having taste; amudham nectar; al̤iththānai one who gave to dhĕvathās; thiruvallikkĕṇik kaṇdĕnĕ saw in thiruvallikkĕṇi