PT 2.6.1

தலசயனப் பெருமாளை நினையாதவரை மதியோம்

1098 நண்ணாத வாளவுணரிடைப்புக்கு * வானவரைப்
பெண்ணாகிய அமுதூட்டும்பெருமானார் * மருவினிய
தண்ணார்ந்த கடல்மல்லைத் தலசயனத்துஉறைவாரை *
எண்ணாதேயிருப்பாரை இறைப்பொழுதும் எண்ணோமே. (2)
PT.2.6.1
1098 ## naṇṇāta vāl̤ avuṇar * iṭaip pukku vāṉavaraip
pĕṇ āki * amutu ūṭṭum pĕrumāṉār maruviṉiya
taṇ ārnta kaṭalmallait * talacayaṉattu uṟaivārai
ĕṇṇāte iruppārai * iṟaip pŏzhutum ĕṇṇome-1

Ragam

Sahāna / ஸஹானா

Thalam

Jambai / ஜம்பை

Bhavam

Self

Simple Translation

1098. I will not spend even the time it takes to blink thinking of those who do not think of my god who took the form of Mohini and gave to the gods the nectar that came from the milky ocean, cheating the sword-carrying Asurans, the enemies of the demigods. He stays in beautiful cool Kadalmallai Thalasayanam surrounded by the large ocean.

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
நண்ணாத தன்னை அணுகாதவர்களும்; வாள் வாளையுடையவர்களுமான; அவுணர் இடை அரக்கர்கள் நடுவில்; பெண் ஆகி புக்கு பெண் வேடம் பூண்டு புகுந்து; வானவரை தேவர்களுக்கு; அமுது ஊட்டும் மட்டும் அம்ருதம் அளித்த; பெருமானார் பெருமையயுடைய எம்பெருமான்; மருவி இனிய பொருந்தி வாழ்வதற்கு இனிய தேசமாய்; தண் ஆர்ந்த குளிர்ச்சி மாறாததாயிருக்கும்; கடல் மல்லை கடல் மல்லை; தலசயனத்து தலசயனத்தில்; உறைவாரை தரையில் சயனித்திருக்கும் எம்பெருமானின்; எண்ணாதே எளிமையை எண்ணாமல் இருக்கும்; இருப்பாரை இங்கு வாழ்பவரை; இறைப் பொழுதும் க்ஷணகாலமும; எண்ணோமே நினைக்கமாட்டோம்
naṇṇādha those who did not approach him; vāl̤ having sword; avuṇaridai amidst the asuras (demons); peṇṇāgip pukku entering with a feminine disguise; vānavarai dhĕvas (saintly persons); amudhu ūttum one who feeds nectar; perumānār having greatness; maruva to remain firmly; iniya being an enjoyable abode; thaṇ ārndha remaining cool always; kadal present on the seashore; mallai in ṣrī mallāpuri; thala sayanaththu on the divine mattress which is the ground; uṛaivārai one who mercifully reclines; eṇṇādhu without thinking about; iruppārai those who remain in that dhivyadhĕṣam; iṛaippozhudhum even for a moment; eṇṇŏm we will not think about