இவ்விவ இடங்களிலே வந்து நிற்கிறவன் ஆஸ்ரித விரோதிகளை போக்கி துர்மானிகளோடும் புறையறக் கலக்கும் ஸீலவான் கிடீர் -என்கிறார்
இவையவன் கோயில் இரணியனதாகம் அவை செய்தரியுருவமானான் -செவி தெரியா நாகத்தான் நால் வேதத்துள்ளான் நறவேற்றான் பாகத்தான் பாற் கடலுளான் —–31–
பதவுரை
இரணியனது–ஹிரண்யாஸுரனுடைய ஆகம்–மார்பை அவை செய்து–இருபிள வாக்க அரி உருவம் ஆனான்–நரசிங்கமாகத் தோன்றினவனும்