PMT 8.8

தேவர்க்கு அமுதம் அளித்தவனே! தாலேலோ

726 மலையதனாலணைகட்டி மதிளிலங்கையழித்தவனே! *
அலைகடலைக்கடைந்து அமரர்க்கமுதருளிச்செய்தவனே! *
கலைவலவர்தாம்வாழும் கணபுரத்தென்கருமணியே! *
சிலைவலவா! சேவகனே! சீராம! தாலேலோ. (2)
726 malai ataṉāl aṇai kaṭṭi * matil̤-ilaṅkai azhittavaṉe *
alai kaṭalaik kaṭaintu * amararkku amutu arul̤ic cĕytavaṉe **
kalai valavar tām vāzhum * kaṇapurattu ĕṉ karumaṇiye *
cilai valavā cevakaṉe * cīrāmā tālelo (8)

Ragam

Nīlāmbari / நீலாம்பரி

Thalam

Tiripuṭai / திரிபுடை

Bhavam

Mother

Simple Translation

726. You made the monkeys build a dam on the ocean and destroyed Lankā surrounded by walls, and you churned the wavy milky ocean and gave nectar to the gods. You the best of archers, the servant of your devotees, are the dark jewel of Kannapuram where the best poets and artists live. O SriRāma, thālelo, thālelo.

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
மலையதனால் மலைகளால்; அணைகட்டி அணயைக்கட்டி; மதிள் இலங்கை அரணையுடைய இலங்கையை; அழித்தவனே! அழித்தவனே!; அலைகடலைக் கடைந்து அலைகடலைக் கடைந்து; அமரர்க்கு அமுது தேவர்களுக்கு அமிர்தத்தை; அருளிச் செய்தவனே கொடுத்தருளினவனே!; கலை வலவர்தாம் கலையில் தேர்ந்தவர்கள்; வாழும் வாழ்கிற; கணபுரத்து திருக்கண்ணபுரத்தில் எழுந்தருளியிருக்கும்; என் கருமணியே! நீலரத்னம் போன்ற எம்பெருமானே!; சிலை வலவா! வில் வல்லவனே!; சேவகனே! வீரனே!; சீராமா! தாலேலோ! ஸ்ரீராமனே! தாலேலோ!