PT 6.8.2

கடல் கடைந்தவனை நறையூரில் கண்டேன்

1519 முந்நீரைமுன்னாள்கடைந்தானை * மூழ்த்தநாள்
அந்நீரைமீனாய் அமைத்தபெருமானை *
தென்னாலிமேய திருமாலைஎம்மானை *
நன்னீர்வயல்சூழ் நறையூரில்கண்டேனே.
1519 munnīrai muṉ nāl̤ * kaṭaintāṉai * mūzhtta nāl̤
an nīrai mīṉ āy * amaitta pĕrumāṉai *
tĕṉ āli meya tirumālai ĕmmāṉai *
nal nīr cūzh * naṟaiyūril kaṇṭeṉe-2

Ragam

Bhairavi / பைரவி

Thalam

Jambai / ஜம்பை

Bhavam

Self

Simple Translation

1519. Our father, Thirumāl, the lord of Thennāli (Thiruvāli) churned the milky ocean, and in ancient times, at the end of the eon, he took the form of a fish and swallowed the ocean. I saw him in Thirunaraiyur surrounded with fields filled with good water.

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
முன் நாள் முன்பொரு சமயம்; முன் நீரை கடலை [ஆற்று நீர் ஊற்று நீர் மழை நீர்]; கடைந்தானை கடைந்தவனும்; மூழ்த்த நாள் பிரளயகாலத்தில்; அந் நீரை அந் நீரை; மீனாய் மீனாக அவதரித்து; அமைத்த தன் வயிற்றில் அடக்கி அமைத்த; பெருமானை பெருமானை; தென் ஆலி திருவாலி நகரில்; மேய திருமாலை திருமகளுடன் கூடி இருக்கும்; எம்மானை எம்பெருமானை; நல் நீர் நல்ல நீர்பாயும்; வயல் சூழ் வயல்களால் சூழந்த; நறையூரில் திருநறையூரில்; கண்டேனே கண்டேனே