MUT 46

திருமால் கடல் கடைந்த பான்மை

2327 மலைமுகடுமேல்வைத்து வாசுகியைச்சுற்றி *
தலைமுகடுதானொருகைபற்றி * அலைமுகட்டு
அண்டம்போய்நீர்தெறிப்ப அன்றுகடல்கடைந்தான் *
பிண்டமாய்நின்றபிரான்.
2327 malai mukaṭu mel vaittu * vācukiyaic cuṟṟi *
talai mukaṭu tāṉ ŏru kai paṟṟi ** - alai mukaṭṭu
aṇṭam poy nīr tĕṟippa * aṉṟu kaṭal kaṭaintāṉ *
piṇṭamāy niṉṟa pirāṉ -46

Ragam

Mohana / மோஹன

Thalam

Tiripuṭai / திரிபுடை

Bhavam

Self

Divya Desam

Simple Translation

2327. When the lord churned the milky ocean using Mandara mountain as a churning stick and the snake Vāsuki as the rope, pulling the rope with the gods on one side and the Asurans on the other, the water rose up and touched the sky.

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
பிண்டமாய் உலகிற்கு மூலகாரணமாக; நின்ற பிரான் நின்ற எம்பெருமான்; முகடு சிகரத்தையுடைய; மலை மந்திர மலையை; மேல் வைத்து தன் முதுகுமேல் வைத்து; வாசுகியை வாசுகியை; சுற்றி கயிறாகச் சுற்றி; தலை அதன் தலையான; முகடு சிகரத்தை; தான் ஒரு தான் ஒரு; கை பற்றி கையால் பற்றி; அலை அலையின்; முகட்டு நீர் மேலுள்ள திவிலைகள்; அண்டம் போய் அண்டத்தில் போய்; தெறிப்ப அன்று தெறிக்கும்படியாக; கடல் கடைந்தான் கடல் கடைந்தான்
piṇdam āy ninṛa pirān emperumān who is the material cause [for the creation of the worlds]; anṛu once upon a time; mugadu malai the mountain mantharam with peaks; mĕl vaiththu keeping it atop (himself in the form of tortoise); vāsugaiyaich chuṝi coiling the snake vāsugi (around that mountain as rope for churning); thalai mugadu the tallest peak [of mantharam]; thān oru kai paṝi holding it with one of his hands; alai mugattu nīr the droplets of water on top of the waves; aṇdam pŏy theṛippa to hit against the walls of the universe; kadal kadaindhān he churned the ocean