TKT 16

எம்பிரானுக்குப் பாமாலை சூட்டுவேன்

2047 மாயமான்மாயச்செற்று மருதிறநடந்து * வையம்
தாயமாபரவைபொங்கத் தடவரைதிரித்து * வானோர்க்கு
ஈயுமால்எம்பிரானார்க்கு என்னுடைச்சொற்களென்னும் *
தூயமாமாலைகொண்டு சூட்டுவன்தொண்டனேனே.
2047 māya māṉ māyac cĕṟṟu * marutu iṟa naṭantu * vaiyam
tāy amā paravai pŏṅkat * taṭa varai tirittu ** vāṉorkku
īyum māl ĕmpirāṉārkku * ĕṉṉuṭaic cŏṟkal̤ ĕṉṉum *
tūya mā mālaikŏṇṭu * cūṭṭuvaṉ tŏṇṭaṉeṉe-16

Ragam

Tōdi / தோடி

Thalam

Jambai / ஜம்பை

Bhavam

Self

Divya Desam

Simple Translation

2047. Our lord killed the Rakshasā Mārisan when he came as a magical deer, walked between the marudam trees and destroyed the two Asurans, measured the world and the sky with his feet at Mahābali's sacrifice, and churned the milky ocean, took the nectar from it and gave it to the gods in the sky. I, his devotee, adorn my dear lord with a pure beautiful garland made of my praise.

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
மாய மான் மாரீசன் என்னும் மாய மான்; மாயச் செற்று அழியும்படி கொன்றவனும்; மருது இரட்டை மருதமரங்கள்; இற நடந்து முறிந்து விழும்படி நடந்தவனும்; வையம் திருவிக்ரமனாய் உலகை; தாய் தாவி அளந்தவனும்; மா பரவை பொங்க பெரிய கடல் பொங்க; தடவரை பெரிய மந்தர மலையை நட்டு; திரித்து கடைந்து; வானோர்க்கு தேவர்களுக்கு அமுதம்; ஈயுமால் கொடுத்த; எம்பிரானார்க்கு எம்பெருமானுக்கு; என்னுடை என்னுடைய; சொற்கள் என்னும் சொற்கள் என்னும்; தூய மா தூய்மையான சிறந்த; மாலை கொண்டு மாலை கொண்டு; தொண்டனேனே தொண்டனான நான்; சூட்டுவன் சூட்டுவேன்