PT 3.9.1

மனமே! வைகுந்த விண்ணகரத்தை வணங்கு

1228 சலங்கொண்டஇரணியனது அகல்மார்வம் கீண்டு
தடங்கடலைக்கடைந்த அமுதம்கொண்டுகந்தகாளை *
நலங்கொண்டகருமுகில்போல் திருமேனி அம்மான்
நாள்தோறும்மகிழ்ந்து இனிதுமருவியுறை கோயில் *
சலங்கொண்டுமலர்சொரியும் மல்லிகைஒண்செருந்தி
சண்பகங்கள்மணநாறும் வண்பொழிலினூடே *
வலங்கொண்டு கயலோடிவிளையாடு நாங்கூர்
வைகுந்தவிண்ணகரம் வணங்குமடநெஞ்சே! (2)
PT.3.9.1
1228 ## calam kŏṇṭa iraṇiyaṉatu akal mārvam kīṇṭu *
taṭaṅ kaṭalaik kaṭaintu amutam kŏṇṭu ukanta kāl̤ai *
nalam kŏṇṭa karu mukilpol tirumeṉi ammāṉ *
nāl̤toṟum makizhntu iṉitu maruvi uṟai koyil **
calam kŏṇṭu malar cŏriyum mallikai ŏṇ cĕrunti *
cĕṇpakaṅkal̤ maṇam nāṟum vaṇ pŏzhiliṉūṭe *
valam kŏṇṭu kayal oṭi vil̤aiyāṭu nāṅkūr *
vaikuntaviṇṇakaram-vaṇaṅku maṭa nĕñce-1

Ragam

Aṭāṇa/ அடாணா

Thalam

Aḍa / அட

Bhavam

Self

Simple Translation

1228. The dark lord colored like a rain-giving cloud, strong as a bull, who split open the wide chest of the evil Asuran Hiranyan, and who churned the milky ocean and gave the nectar to the gods stays happily every day in the temple of Vaikundavinnagaram in Nāngur where jasmine bushes, punnai trees, beautiful cherundi trees and shenbaga flowers bloom in the rain, spreading their fragrance in the lovely groves, and fish frolic, swim and play in the ponds. O innocent heart, let us go there and worship him.

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
சலம் கொண்ட சீற்றம் கொண்ட; இரணியனது இரணியனுடைய; அகல் மார்வம் கீண்டு அகன்ற மார்வை; கீண்டு பிளந்தவனும்; தடங் கடலைக்கடைந்து பெரிய கடலைக் கடைந்து; அமுதம்கொண்டு அமுதத்தை தேவர்களுக்கு; உகந்தகாளை கொடுத்து மகிழ்ந்த காளை; நலங் கொண்ட அழகிய; கரு முகில் போல் நீலமேகம் போன்ற; திருமேனி அம்மான் திருமேனியுடைய எம்பெருமானை; நாள்தோறும் மகிழ்ந்து நாள்தோறும் மகிழ்ந்து; இனிது மருவி வணங்குபவர்க்கு இனியவனான; உறை கோயில் எம்பெருமான் இருக்குமிடம்; சலம் கொண்டு தண்ணீரைப்பருகி; மலர் சொரியும் மலர் சொரியும்; மல்லிகை அழகிய மல்லிகைச் செடிககளும்; ஒண் செருந்தி புன்னை; செண்பகங்கள் சண்பக மரங்களும்; மணம் நாறும் மணம் மிக்க; வண் பொழிலினூடே அழகிய சோலைகளினுள்ளே; வலம் கொண்டு கயல் ஓடி மீன்களானவை ஓடித்துள்ளி; விளையாடும் நாங்கூர் விளையாடும் திருநாங்கூரிலிருக்கும்; வைகுந்தவிண்ணகரம் வைகுந்தவிண்ணகரை; வணங்கு மட நெஞ்சே! வணங்கு மட நெஞ்சே!
salam koṇda having anger (towards prahlādhan); iraṇiyan hiraṇyan-s; adhu built by the strength of the boons; agal mārvam wide chest; kīṇdu effortlessly tore; thadam kadalai the huge thiruppāṛkadal (milk ocean); kadaindhu churned; amudham the nectar which came out of it; koṇdu distributed it to dhĕvathās; ugandha one who became happy; kāl̤ai being youthful; nalam koṇda beautiful; karu mugil pŏl like a dark cloud; thirumĕni ammān sarvĕṣvaran who has a divine form; nādŏṛum everyday; magizhndhu with joy; inidhu to be sweet for the devotees; maruvi uṛai kŏyil eternally residing without any other expectation; kayal the kayal fish (which cannot survive outside water); ŏdi running away from the water which is its habitat; salam koṇdu malar soṛiyum competing with each other and showering flowers; oṇ malligai serundhi senbagangal̤ beautiful jasmine, serundhi and champak flowers; maṇam nāṛum spreading fragrance; vaṇ rich; pozhilinūdĕ in the garden; val̤am koṇdu vil̤aiyādum playing joyfully (due to breathing in that fragrance); nāngūr in thirunāngūr; vaigundha viṇṇagaram vaigundha viṇṇagaram; vaṇangu worship; mada nenjĕ ŏh humble heart!