PT 7.3.6

பள்ளிகொண்டானையே நான் பாடுவேன்

1573 எட்டனைப்பொழுதாகிலும் என்றும்
என்மனத்தகலாதிருக்கும்புகழ் *
தட்டலர்த்தபொன்னேயலர்கோங்கின்
தாழ்பொழில்திருமாலிருஞ்சோலையங்
கட்டியை * கரும்பீன்றஇன்சாற்றைக்
காதலால்மறைநான்குமுன்னோதிய
பட்டனை * பரவைத்துயிலேற்றை என்
பண்பனையன்றிப்பாடல்செய்யேனே.
1573 ĕl̤ taṉaippŏzhutu ākilum * ĕṉṟum
ĕṉ maṉattu akalātu irukkum pukazh *
taṭṭu alartta pŏṉṉe alar koṅkiṉ *
tāzh pŏzhil tirumāliruñcolai am
kaṭṭiyai ** karumpu īṉṟa iṉ cāṟṟai *
kātalāl maṟai nāṉkum muṉ otiya
paṭṭaṉai * paravait tuyil eṟṟai * ĕṉ
paṇpaṉai aṉṟip pāṭal cĕyyeṉe-6

Ragam

Tōdi / தோடி

Thalam

Jambai / ஜம்பை

Bhavam

Self

Simple Translation

1573. My famous will not leave my mind even for a moment. Sweet as sugar and sugarcane juice, he stays in Thirumālirunjolai surrounded with groves where kongu trees bloom with abundant golden flowers. He taught lovingly the four Vedās to the sages and rests on Adisesha on the milky ocean. I will not compose pāsurams on anyone except the dear Nambi of Thirunaraiyur.

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
எள் தனைப்பொழுதாகிலும் நொடிப் பொழுதுங் கூட; என்றும் என் மனத்து என்றும் என் மனத்தைவிட்டு; அகலாது பிரியாமல்; இருக்கும் இருக்கும்; புகழ் புகழையுடையவனும்; தட்டு அலர்த்த இதழ் விரிந்த; பொன்னே பொன் போன்ற; அலர் மலர்களையுடைய; கோங்கின் கோங்குமரங்களின்; தாழ் தாழ்ந்திருக்கும்; பொழில் சோலைகளையுடைய; திருமாலிருஞ்சோலை திருமாலிருஞ்சோலையில்; இருக்கும் பெருமானும்; அம்கட்டியை கற்கண்டு போன்றவனும்; கரும்பு ஈன்ற கரும்பின்; இன் சாற்றை இனிய ரசம் போன்றவனும்; முன் காதலால் முன்பொரு சமயம் விருப்பத்துடன்; மறை நான்கும் நான்கு வேதங்களையும்; ஓதிய சாந்தீபனிடம் கற்று ஓதிய; பட்டனை பண்டிதனும்; பரவை பாற் கடலில்; துயில் ஏற்றை பள்ளி கொண்டவனுமான; என் பண்பனை என் பண்பனைத் தவிர; அன்றி வேறு ஒருவனை; பாடல் செய்யேனே பாட மாட்டேன்