PT 7.8.1

பாம்பிணையில் பள்ளிகொண்டவனே ஆமருவியப்பன்

1618 செங்கமலத்திருமகளும்புவியும்
செம்பொன்திருவடியினிணைவருடமுனிவரேத்த *
வங்கமலிதடங்கடலுள் அநந்தனென்னும்
வரியரவினணைத்துயின்றமாயோன்காண்மின் *
எங்குமலிநிறைபுகழ்நால்வேதம் ஐந்து
வேள்விகளும்கேள்விகளும்இயன்றதன்மை
அங்கமலத்தயனனையார்பயிலும்செல்வத்து
அணியழுந்தூர் நின்றுகந்தஅமரர்கோவே. (2)
1618 ## cĕṅ kamalat tirumakal̤um puviyum cĕm pŏṉ *
tiruvaṭiyiṉ iṇai varuṭa muṉivar etta *
vaṅkam mali taṭaṅ kaṭalul̤ anantaṉ ĕṉṉum *
vari araviṉ aṇait tuyiṉṟa māyoṉ kāṇmiṉ- **
ĕṅkum mali niṟai pukazh nāl vetam * aintu
vel̤vikal̤um kel̤vikal̤um iyaṉṟa taṉmai *
am kamalattu ayaṉ aṉaiyār payilum cĕlvattu *
aṇi azhuntūr niṉṟu ukanta amarar-kove-1

Ragam

Biyāgadai / பியாகடை

Thalam

Ādi / ஆதி

Bhavam

Self

Simple Translation

1618. The Māyon who rests on Adisesha on the wide milky ocean rolling with waves, as Lakshmi and the earth goddess stroke his divine golden feet and sages praise him stays in beautiful, flourishing Thiruvazhundur where famous learned Vediyars skilled in the four Vedās perform the five sacrifices and are as divine as Nānmuhan himself.

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
எங்கும் மலி எங்கும் பரவிய; நிறை புகழ் நிறைந்த புகழுடைய; நால் வேதம் நான்கு வேதங்களும்; ஐந்து வேள்விகளும் ஐந்து வேள்விகளும்; கேள்விகளும் கேட்டறிய வேண்டியவைகளும்; இயன்ற இயற்கையாகவே; தன்மை அறிந்துகொள்ளக்கூடியவைகளும்; அம் கமலத்து அழகிய கமலத்தில் தோன்றிய; அயன் பிரமனையொத்தவரான; அனையார் வைதிகர்கள்; பயிலும் செல்வத்து சிறப்புடையவர்கள் வாழும்; அணி அழுந்தூர் அழகிய திருவழுந்தூரில்; நின்று வந்துநின்று; உகந்த அமரர் உகந்த அமரர்; கோவே தலைவன் எம்பெருமான்; செங் கமல செந்தாமரை மலரில்; திருமகளும் தோன்றிய திருமகளும்; புவியும் பூமாதேவியும்; செம் பொன் அழகிய பொன்மயமான; திருவடியின் திருவடிகளையும்; இணை வருட இரண்டையும் வருட; முனிவர் ஏத்த முனிவர்கள் துதிக்க; வங்கம் மலி அலைகள் நிறைந்த; தடங் கடலுள் பாற்கடலில்; அனந்தன் என்னும் அனந்தன் என்னும்; வரி அரவின் ரேகைகளுடைய பாம்பு; அணை படுக்கையில்; துயின்ற சயனித்திருக்கும்; மாயோன் மாயனைக்; காண்மின் கண்டு களியுங்கள்