PT 8.10.7

உன் அடியார்க்கு யமதூதர் அஞ்சுவர்

1744 வெள்ளைநீர்வெள்ளத்து அணைந்தஅரவணைமேல் *
துள்ளுநீர்மெள்ளத் துயின்றபெருமானே! *
வள்ளலே! உன்தமர்க்குஎன்றும்நமன்தமர்
கள்ளர்போல் * கண்ணபுரத்துறையம்மானே!
1744 vĕl̤l̤ai nīr vĕl̤l̤attu * aṇainta aravu-aṇaimel *
tul̤l̤u nīr mĕl̤l̤at * tuyiṉṟa pĕrumāṉe **
val̤l̤ale uṉ tamarkku ĕṉṟum * namaṉtamar
kal̤l̤arpol- * kaṇṇapurattu uṟai ammāṉe-7

Ragam

Shaurāṣhṭra / சௌராஷ்ட்

Thalam

Jambai / ஜம்பை

Bhavam

Self

Simple Translation

1744. You rest on the snake Adisesha, your bed floating on the flood of white water (milky ocean) with roaring waves. O generous lord, we are your devotees. You stay like a thief in Kannapuram and you protect us.

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
வெள்ளை நீர் பாற்கடலின்; வெள்ளத்து வெள்ளத்தில்; அணைந்த அணைந்திருக்கும்; அரவு அணைமேல் பாம்பணைமேல்; துள்ளு நீர் துள்ளும் நீர் திவலைகள்; மெள்ள மெள்ள வருட; துயின்ற பெருமானே! துயின்ற பெருமானே!; வள்ளலே! வள்ளலே!; கண்ணபுரத்து திருக்கண்ணபுரத்தில்; உறை அம்மானே! இருக்கும் பெருமானே!; உன் தமர்க்கு உன் அடியார் விஷயத்தில்; என்றும் நமன் தமர் என்றும் யமதூதர்கள்; கள்ளர்போல் திருடர்கள்போல் மறைந்திருப்பர்கள்