TCV 39

வெற்பு எடுத்த மேகவண்ணன்

790 வெற்பெடுத்துவேலைநீர் கலக்கினாய், அதன்றியும் *
வெற்பெடுத்துவேலைநீர் வரம்புகட்டி வேலைசூழ் *
வெற்பெடுத்தஇஞ்சிசூழ் இலங்கைகட்டழித்தநீ *
வெற்பெடுத்துமாரிகாத்த மேகவண்ணனல்லையே?
790 vĕṟpu ĕṭuttu velai-nīr * kalakkiṉāy atu aṉṟiyum *
vĕṟpu ĕṭuttu velai-nīr * varampu kaṭṭi velai cūzh **
vĕṟpu ĕṭutta iñci cūzh * ilaṅkai kaṭṭazhitta nī *
vĕṟpu ĕṭuttu māri kātta * mekavaṇṇaṉ allaiye? (39)

Ragam

Biyāgadai / பியாகடை

Thalam

Tiripuṭai / திரிபுடை

Bhavam

Self

Divya Desam

Simple Translation

790. You, the cloud-colored lord, used Mandara mountain as a churning stick and churned the milky ocean. You made a bridge using stones on the ocean to go to Lankā, and you destroyed Lankā surrounded by stone walls,. You protected the cows from the storm with Govardhanā mountain.

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate conversion from poetry to prose (Aṉvayam). Please read the meanings (in black) continuously to form the sentence and understand the simplified meaning based on the Divyārtha Dīpikai for the verse.)
வெற்பு எடுத்து மந்தர பர்வதத்தைக்கொண்டு; வேலை நீர் கடல் நீரை; கலக்கினாய்! கடைந்தவனே!; அது அன்றியும் அதுவுமல்லாமல்; வெற்பு மலைகளை; எடுத்து வானரங்களைக்கொண்டு; வேலை நீர் தென்கடலிலே; வரம்பு கட்டி அணையைக்கட்டினவனே!; வேலை கடலான அகழியினால்; சூழ் சூழப்பட்டதாயும்; வெற்பு எடுத்த மலைபோன்ற; இஞ்சி சூழ் மதிள்களால் சூழ்ந்த; இலங்கை இலங்கையினுடைய; கட்டழித்த நீ அரணை அழியச் செய்த ஸ்வாமியே!; வெற்பு கோவர்த்தனமலையை; எடுத்து குடையாக எடுத்து; மாரி காத்த மழையைத் தடுத்த; மேக வண்ணன் காளமேகத்தின்; அல்லையே உருவமன்றோ நீ!

Āchārya Vyākyānam

39 பாட்டு –

அவதாரிகை – சாது பரித்ராணமும் துஷ் க்ர்த் விநாசமும் சொல்லிற்று கீழ் இதில் –இவ்வளவு புகுர நிலாத இந்த்ராதி களுடைய விரோதிகளான ராஷச வர்க்கத்தை அழியச் செய்து அவர்கள் குடி இருப்பைக் கொடுத்தபடியும் -அவ்விந்த்ரன் தான் ஆஸ்ரிதரைக் குறித்து பிரதிகூலனான போது அவனை அழியச் செய்யாதே முகாந்தரத்தாலே ஆஸ்ரிதரை ரஷிக்கும் நீர்மையை அனுபவிக்கிறார் –

**வெற்பெடுத்து

+ Read more