20

Thanjaimāmani Koil

தஞ்சை மாமணிக்கோவில்

Thanjaimāmani Koil

ஸ்ரீசெங்கமலவல்லீ ஸமேத ஸ்ரீ நீலமேக ஸ்வாமிநே நமஹ

Thayar: Sri Senkamala Valli
Moolavar: Neelamegha Perumāl
Utsavar: Sriman Narayananan
Vimaanam: Soundarya
Pushkarani: Amrudha, etc.
Thirukolam: Amarndha (Sitting)
Direction: East
Mandalam: Chozha Nādu
Area: Tanjore
State: TamilNadu
Sampradayam: Thenkalai
Timings: 8:00 a.m. to 11:30 a.m. 5:00 p.m. to 7:00 p.m.
Search Keyword: Thanjai
Tamil
Simplified
English
Verse info
Synonyms
Translation

PT 1.1.6

953 எம்பிரான் எந்தை என்னுடைச்சுற்றம் *
எனக்கரசு என்னுடைவாணாள் *
அம்பினால் அரக்கர்வெருக்கொளநெருக்கி *
அவருயிர்செகுத்தஎம்அண்ணல் **
வம்புலாஞ்சோலைமாமதிள் *
தஞ்சை மாமணிக்கோயிலேவணங்கி *
நம்பிகாள்! உய்யநான் கண்டு கொண்டேன் *
நாராயணாவென்னும் நாமம் (2)
953 ##
எம்பிரான் எந்தை என்னுடைச் சுற்றம் * எனக்கு அரசு என்னுடை வாழ்நாள் *
அம்பினால் அரக்கர் வெருக்கொள நெருக்கி * அவர் உயிர் செகுத்த எம் அண்ணல் **
வம்பு உலாம் சோலை மா மதிள் * தஞ்சை மா மணிக் கோயிலே வணங்கி *
நம்பிகாள்! உய்ய நான் கண்டுகொண்டேன் * நாராயணா என்னும் நாமம் (6)
953. ##
embirān enNdhai ennudaicchuRRam * enakkarasu ennudaivāNāL *
ambināl arakkar verukkoLanNerukki *
avaruyirseguttha em aNNal * vambulāmsOlaimāmadhiL * thaNYchai māmaNikkOyilEvaNanggi *
nNambigāL! uyyanNān kaNdu koNdEn * nNārāyaNā ennum nNāmam (6)

Ragam

சங்கராபரண

Thalam

திரிபுடை

Bhavam

Self

Simple Translation

953. My dear father is my kin, my king and my life, frightened the Rakshasās and killed them with his arrows. O devotees, worship the beautiful diamond-studded temple in Thanjai Māmani koil surrounded with strong walls and blooming with fragrant groves. O Nambis! I have found the name “Nārāyana” and I am saved.

Word by word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion. Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
நம்பிகாள்! பக்தியுள்ள பாகவதர்களே!; எம்பிரான் எனக்கு ஸ்வாமியும்; எந்தை என் தந்தையும்; என்னுடைச் சுற்றம் என்னுடைய சொந்தமும்; எனக்கு அரசு என்னை ஆள்பவனும்; என்னுடை என்னுடைய; வாழ்நாள் வாழ்நாள் முழுவதும்; அரக்கர் அரக்கர் அஞ்சும்படியாக; அம்பினால் அம்புகளினால்; வெருக்கொள நெருக்கி பயந்து ஓடும்படி தகர்த்து; அவர் உயிர் செகுத்த அவர்களது உயிரை முடித்த; எம் அண்ணல் எம்பெருமான் இருக்குமிடம்; வம்பு உலாம் சோலை மணம் மிக்க சோலைகளையும்; மா மதிள் பெரிய மதிள்களையும் உடைய; தஞ்சை மா மணி தஞ்சையிலிருக்கும் மா மணி; கோயிலே வணங்கி கோயிலையே வணங்கி; உய்ய நான் நானும் நிம்மதியாக வாழ; நாராயணா நாராயணா; என்னும் நாமம் என்னும் நாமமத்தை; கண்டுகொண்டேன் அறிந்து கொண்டேன்
nambigAL! Oh those who are complete (with enjoying bhagavAn-s qualities)!; em pirAn being my benefactor; endhai being my father; ennudaich chuRRam being all my relationships; enakku arasu being my ruler; ennudai vAzh nAL being my life-span; arakkar rAkshasas (demoniac people); verukkoLa to be scared; ambinAl with arrows; nerukki suffocating them; avar uyir their lives; seguththa destroyed; em aNNal the eternal abode of sarvESvaran, who is my lord; vambu fragrance; ulAm blowing; sOlai garden; mA lengthy; madhiL having fort; thanjai mA maNik kOyilE thanjai mA maNik kOyil only; vaNangi worshipped; nAn uyya to be uplifted (like all of you); nArAyaNA ennum nAmam the divine name, nArAyaNa; kaNdu koNdEn I got to realise.

PT 2.5.3

1090 உடம்புருவில்மூன்றொன்றாய் மூர்த்திவேறாய்
உலகுய்யநின்றானை * அன்றுபேய்ச்சி
விடம்பருகுவித்தகனைக் கன்றுமேய்த்து
விளையாடவல்லானை, வரைமீகானில் *
தடம்பருகுகருமுகிலைத் தஞ்சைக்கோயில்
தவநெறிக்குஓர்பெருநெறியை, வையங்காக்கும் *
கடும்பரிமேல்கற்கியைநான் கண்டுகொண்டேன்
கடிபொழில்சூழ்கடல்மல்லைத்தலசயனத்தே.
1090 உடம்பு உருவில் மூன்று ஒன்றாய் மூர்த்தி வேறு ஆய் * உலகு உய்ய நின்றானை அன்று பேய்ச்சி *
விடம் பருகு வித்தகனைக் கன்று மேய்த்து * விளையாட வல்லானை வரைமீ கானில் **
தடம் பருகு கரு முகிலைத் தஞ்சைக் கோயில் * தவ நெறிக்கு ஓர் பெரு நெறியை வையம் காக்கும் *
கடும் பரிமேல் கற்கியை நான் கண்டுகொண்டேன் * கடி பொழில் சூழ் கடல்மல்லைத் தலசயனத்தே-3
1090
udamburuvil moonRonRāy moortthivERāy * ulaguyya nNinRānai *
anRupEycchi idamparugu vitthaganaik * kanRumEytthu viLaiyāda vallānai varaimeegānil *
thadamparugu karumugilaith thaNYsaikkOyil * thavanNeRikku Or perunNeRiyai vaiyamkākkum *
kadumbarimEl kaRkiyai nNāNnkaNdukoNdEn * kadipozhilsoozh kadalmallaith thalasayanatthE. 2.5.3

Ragam

கல்யாணி

Thalam

ஆதி

Bhavam

Self

Simple Translation

1090. The dark cloud-colored lord, the protector of the world who drank milk from the breasts of Putanā and killed her and grazed the calves and played with them, is himself the three gods, Nānmuhan, Shivā and Indra, but different than them. He will show the divine path for his devotees so they can go to the Thanjai Māmani temple and worship him. I saw the lord who will come to the earth on a horse as Kalki in Kadalmallai Thalasayanam surrounded with thick groves

Word by word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion. Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
உலகு ஸ்ருஷ்டி (பிரம்மா) ஸ்திதி (விஷ்ணு) லயம் (சிவன்) ஆகிய காலங்களில் உலகை; உய்ய காப்பாற்றுபவனாய்; உடம்பு சரீரம்; உருவில் என்று பார்த்தால்; மூன்று ஒன்றாய் மூவரையும் தனக்கு சரீரமாய்; மூர்த்தி ஆத்மா என்று பார்த்தால்; வேறு ஆய் பிரம்மாவும் சிவனும் வேறு வேறு ஆத்மாக்களாக; நின்றானை நின்றவனை; அன்று கிருஷ்ணாவதாரத்தில்; பேய்ச்சி பூதனையின்; விடம் பருகு விஷம் கலந்த பாலை குடித்த; வித்தகனை ஆச்சர்ய சேஷ்டிதனை; கன்று கன்றுகளை; மேய்த்து மேய்த்து; விளையாட விளையாடுவதற்காக அவதரித்த; வல்லானை கண்ணனை; வரைமீ மலைமேலுள்ள; கானில் காடுகளிலே; தடம் குளங்களில் கன்றுகளுக்கு நீர் குடிக்க; பருகு கற்றுகொடுத்து தானும் நீர் குடித்தவனும்; கரு முகிலை காளமேகம் போன்றவனும்; தஞ்சைக் தஞ்சை; கோயில் மாமணிக்கோயிலிலே இருக்கும்; தவ நெறிக்கு தன்னை அடைய; ஓர் பெரு சிறந்த பெரிய; நெறியை உபாயமென தானாக நிற்பவனும்; வையம் உலகத்தை; காக்கும் காப்பதற்காக; கடும் பரிமேல் மிகுந்த வேகத்தையுடைய குதிரையின் மீது; கற்கியை கல்கியவதாரம் செய்யும் எம்பெருமானை; நான் நான்; கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன்; கடி மணம்மிக்க; பொழில் சோலைகள்; சூழ் சூழ்ந்த; கடல்மல்லைத் திருக்கடல் மல்லை; தலசயனத்தே தலசயனத்தில்
udambu body-s; uruvil in the form; mUnRu three; ulagu uyya for the protection of the world; onRAy in a singular form; mUrththi true nature; vERAy being different; ninRAnai one who stands; anRu during krishNAvathAram; pEychchi pUthanA-s; vidam poisonous milk; parugu one who drank; viththaganai amazing; kanRu calves; mEyththu tended; viLaiyAda vallAnai one who incarnated to play; varaimI atop the hill; kAnil in the forests; thadam in the ponds, to train the calves to drink water, he would demonstrate that by folding his hands in the back; parugu one who mercifully drinks water; karumugilai one who resembles a dark cloud; thanjaik kOyil one who is mercifully present in thanjaimAmaNikkOyil; thava neRikku among the upAyams (means) (which are pursued to attain him); Or peru neRiyai one who remains the greatest means; vaiyam all the worlds; kAkkum to protect; kadu having great speed; pari mEl on the horse; kaRkiyai one who mercifully incarnated as kalki; kadi guarded; pozhil garden; sUzh surrounded; thalasayanam sthala sayanam (where he rests on the ground); kadal mallai in thirukkadalmallai; nAn kaNdu koNdEn I got to see

PT 7.3.9

1576 என்செய்கேன்அடியேன்? உரையீர்இதற்குஎன்றும்
என்மனத்தேஇருக்கும்புகழ் *
தஞ்சையாளியைப்பொன்பெயரோன்
நெஞ்சம்அன்றுஇடந்தவனைத்தழலேபுரை *
மிஞ்செய்வாளரக்கன்நகர்பாழ்படச்
சூழ்கடல்சிறைவைத்து, இமையோர்தொழும் *
பொன்செய்மால்வரையைமணிக்குன்றினை அன்றி
என்மனம்போற்றியென்னாதே.
1576 என் செய்கேன் அடியேன் உரையீர் * இதற்கு
என்றும் என் மனத்தே இருக்கும் புகழ் *
தஞ்சை ஆளியைப் பொன்பெயரோன் * நெஞ்சம்
அன்று இடந்தவனை தழலே புரை **
மின் செய் வாள் அரக்கன் நகர் பாழ்பட *
சூழ் கடல் சிறை வைத்து இமையோர் தொழும் *
பொன் செய் மால் வரையை மணிக் குன்றினை
அன்றி * என் மனம் போற்றி என்னாதே-9
1576
eNn cheykENn adiYENn? uraiyIr * idhaRku eNnRum-
en maNnaththE irukkum pugazh *
thanchai yāLiyaip poNn peyarONn *
nencham aNnRu idanNthavaNnaith thazhalEpurai *
min cheyvāLarakkaNn nNagar pāzhpada *
choozhkadal ciRaivaiththu imaiyOr thozhum *
poNncheymāl varaiyai maNikkuNnRiNnai aNnRi *
eNn maNnam pORRi yeNnNnādhE * . 7.3.9

Ragam

தோடி

Thalam

ஜம்பை

Bhavam

Self

Simple Translation

1576. Tell me, for I am his slave, what can I give back to him for everything he has done for me? The famous lord of Naraiyur, the ruler of Thanjai, who split open the chest of Hiranyan, and who built a bridge on the ocean, went to Lankā the land of the king Rāvana, with a shining sword like lightning and destroyed it - stays in my heart. He is a large golden mountain and a diamond hill and my mind will not praise anyone except him

Word by word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion. Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
அடியேன் இதற்கு என் உள்ளத்தில் என்றும் வாழும்; என் பெருமானுக்கு நான் என்ன; செய்கேன் கைம்மாறு செய்வேன்; உரையீர் சொல்லுங்கள்; என் மனத்தே என்னுள்ளத்திலேயே; என்றும் இருக்கும் என்றுமிருக்கும்; புகழ் தஞ்சை புகழுடையவனும்; ஆளியை தஞ்சையை ஆள்பவனும்; பொன் பெயரோன் இரணியனின்; நெஞ்சம் நெஞ்சை; அன்று இடந்தவனை அன்று பிளந்தவனும்; தழலே புரை நெருப்புப் போன்ற; மின் செய் ஒளியுடைய; வாள் வாள் படையுடைய; அரக்கன் அரக்கனின் இலங்கை; நகர் பாழ் பட நகரம் பாழாகும்படி; சூழ் கடல் அந்த நகரைச் சூந்திருந்த கடலில்; சிறை வைத்து அணைகட்டினவனும்; இமையோர் தேவர்களால்; தொழும் வணங்கப்படுபவனும்; பொன் செய் பொன்னாலான; மால் வரையை மலைபோன்றவனும்; மணி நீலமணிமயமான; குன்றினை மலைபோன்றவனுமான; அன்றி பெருமானைத் தவிர; என் மனம் என் மனம் வேறு ஒருவரை; போற்றி என்னாதே போற்றி வாழ்த்தாது

IT 70

2251 தமருள்ளம்தஞ்சை தலையரங்கம்தண்கால் *
தமருள்ளும்தண்பொருப்புவேலை * - தமருள்ளும்
மாமல்லைகோவல் மதிட்குடந்தையென்பரே *
ஏவல்லவெந்தைக்கிடம்.
2251 தமர் உள்ளம் தஞ்சை * தலை அரங்கம் தண்கால் *
தமர் உள்ளும் தண் பொருப்பு வேலை ** - தமர் உள்ளும்
மாமல்லை கோவல் * மதிள் குடந்தை என்பரே *
ஏ வல்ல எந்தைக்கு இடம் -70
2251
thamaruLLam thancai * thalaiyarangam thaNkāl, *
thamaruLLum thaNporuppu vElai, * - thamaruLLum-
māmallai kOval * mathitkudanthai enbarE, *
Evalla enthaik kidam. 70

Ragam

பைரவி

Thalam

திரிபுடை

Bhavam

Self

Simple Translation

2251. The places of our heroic lord, skilled in shooting arrows and conquering his enemies, are Thanjai Māmani koil, which is the hearts of his devotees, divine Srirangam and Thiruthangā, the cool milky ocean, Thirukkadalmallai praised by devotees, Thirukkovalur and Thirukkudandai surrounded with walls.

Word by word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion. Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
தமர் உள்ளம் பக்தர்களுடைய மனம்; தஞ்சை தஞ்சை மா மணிக்கோயில்; தலை அரங்கம் சிறந்த திருவரங்கம்; தண் கால் திருத்தண்கால்; தமர் அடியார்கள்; உள்ளும் நினைத்துருகும்; தண் பொருப்பு குளிர்ந்த திருமலை; வேலை திருப்பாற்கடல்; தமர் உள்ளும் பக்தர்கள் சிந்திக்கும்; மாமல்லை திருக்கடல்மல்லை; கோவல் திருக்கோவலூர்; மதிள் மதிள்களோடு கூடிய; குடந்தை திருக்குடந்தை ஆகியவை; ஏ வல்ல அம்பு எய்வதில் வல்லவரான; எந்தைக்கு எம்பெருமான் இருக்கும்; இடம் என்பரே இடம் என்பர்
thamar uLLam devotees’ heart; thanjai thanjai mAmaNik kOyil [a divine abode in thanjAvUr]; thalai arangam (among all divine places) most special thiruvarangam; thaNkAl thiruththaNkAl [a divine abode near present day sivakAsi]; thamar uLLum what the followers have thought of (as everything for them); thaN poruppu the cool thirumalai (thiruvEngadam); vElai thiruppARkadal (milky ocean); thamar uLLum places meditated upon by followers; mAmallai thirukkadal mallai [mahAbalipuram]; kOval thirukkOvalUr; madhiL kudandhai kudandhai [kumbakONam] with divine fortified walls; E valla endhaikku idam enbar [his followers] will say are the residences for chakravarthy thirumagan (SrI rAma) who is an expert at shooting arrows.

TVM 5.3.1

3255 மாசறுசோதி என்செய்யவாய்மணிக்குன்றத்தை *
ஆசறுசீலனை ஆதிமூர்த்தியைநாடியே *
பாசறவெய்தி அறிவிழந்தெனைநாளையம்? *
ஏசறுமூரவர்கவ்வை தோழீ! என்செய்யுமே? (2)
3255 ## மாசு அறு சோதி * என் செய்ய வாய் மணிக்குன்றத்தை *
ஆசு அறு சீலனை * ஆதி மூர்த்தியை நாடியே **
பாசறவு எய்தி * அறிவு இழந்து எனை நாளையம்? *
ஏசு அறும் ஊரவர் கவ்வை * தோழீ என் செய்யுமே? (1)
3255. ##
māsaRu sOthi * en seyyavāy maNikkunRaththai *
āsaRu seelanai * ādhi moorththiyai nādiyE *
pāsaRa veydhi * aRivizhanNthu enai nNāLaiyam? *
EsaRum ooravar kavvai * thOzhee! en_seyyumE? * . (2) 5.3.1

Ragam

பியாகடை

Thalam

திரிபுடை

Bhavam

Nāyaki (lovelorn lady)

Simple Translation

You know, my mate, my awareness is lost And my lustre gone since long, in quest Of the primordial Lord of splendour unalloyed and coral lips, The mount of emerald, of loving condescension with no lapse; How then will the rebuke of slanderous folks affect me?

Explanatory Notes

(i) The mates of Parāṅkuśa Nāyakī, who had prior knowledge of her contemplated move, dissuaded her, in a low whisper, from going ahead with it, lest the people around should reproach her for her aggressive stance. The Nāyakī was, however, not in the least worried about public opinion; as a matter of fact, she had become impervious to it long back. The Nāyakī stood on a + Read more

Word by word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion. Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
மாசு அறு சோதி அழுக்கற்ற சோதியையுடைய; செய்ய வாய் சிவந்த அதரத்தை உடையவனும்; என் மணி என் மாணிக்க; குன்றத்தை மலை போன்றவனும்; ஆசு அறு குற்றமற்ற; சீலனை சீலகுணத்தையுடையவனும்; ஆதி மூர்த்தியை முழுமுதற் கடவுளுமான; நாடியே பெருமானைத் தேடி அலைந்து; பாசறவு எய்தி மேனியின் பசுமை நிறம் அழிந்து; அறிவு இழந்து அறிவு இழந்து; எனை நாளையம்? எத்தனை காலம் இருப்போம்?; தோழீ! தோழீ!; ஏசு அறும் ஏசுவதற்கென்றே இருக்கும்; ஊரவர் ஊரார்; கவ்வை பழிச்சொல்; என் செய்யுமே? என்னை என்ன செய்யும்?
sOdhi having thEjas (radiance); seyya reddish; vAy having mouth; en maNik kunRaththai one who is like an emerald mountain, who is enjoyable for me; Asu defect; aRu without; seelanai One who is having good qualities; Adhi one who first came and bestowed me the enjoyment; mUrththiyai one who is the lord; nAdiyE seeking out permanently; pAsu freshness/complexion in my body; aRaveydhi having lost; aRivu wisdom; izhandhu having lost; enai nALaiyam for how long; thOzhI Oh friend!; Esu in scolding/blaming; aRum fixed on; Uravar the citizens-; kavvai shouting; en what; seyyum will do?; seyya reddish; thAmarai lotus like