PT 10.6.2

உலகம் உண்டவனா கட்டுண்டிருந்தவன்!

1899 குன்றொன்றுமத்தாஅரவமளவிக்
குரைமாகடலைக்கடைந்திட்டு * ஒருகால்
நின்றுஉண்டைகொண்டோட்டிவன்கூன்நிமிர
நினைத்தபெருமான், அதுவன்றியும்முன் *
நன்றுண்டதொல்சீர்மகரக்கடலேழ்
மலையேழ்உலகேழ்ஒழியாமைநம்பி *
அன்றுண்டவன்காண்மின்இன்றுஆய்ச்சியரால்
அளைவெண்ணெயுண்டுஆப்புண்டிருந்தவனே.
1899 kuṉṟu ŏṉṟu mattā aravam al̤avik *
kurai mā kaṭalaik kaṭaintiṭṭu * ŏrukāl
niṉṟu uṇṭai kŏṇṭu oṭṭi vaṉ kūṉ nimira *
niṉainta pĕrumāṉ atu aṉṟiyum muṉ **
naṉṟu uṇṭa tŏl cīr makarak kaṭal ezh malai ezh *
ulaku ezh ŏzhiyāmai nampi *
aṉṟu uṇṭavaṉ kāṇmiṉ-iṉṟu āycciyarāl *
al̤ai vĕṇṇĕy uṇṭu āppuṇṭiruntavaṉe-2

Ragam

Sāveri / ஸாவேரி

Thalam

Aḍa / அட

Bhavam

Self

Divya Desam

Simple Translation

1899. The lord who churned the sounding milky ocean using Mandara mountain for a churning stick shot with a sling at the Kuni’s back, making it bend, and then shot again and straightened it. He swallowed the ancient seven worlds, the seven mountains and the seven oceans where fish swim and kept them in his stomach. See, now he has stolen butter and the cowherd women have caught him and tied him up and he cannot move. (Dāmodara Leelai)

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
குன்று ஒன்று ஒப்பற்ற மந்திர மலையை; மத்தா மத்தாக கொண்டு; அரவம் வாஸுகியென்னும் நாகத்தை; அளவி கயிறாகச் சுற்றி; குரை மா கடலை ஒலிக்கின்ற பெருங்கடலை; கடைந்திட்டு கடைந்தவனும்; ஒருகால் வேறு ஒரு சமயம்; உண்டை கொண்டு வில்லின் உண்டைகளைக் கொண்டு; வன் கூன் வலிதான மந்தரையின் கூனை; ஓட்டி நின்று நிமிர போக்கி நிமிரும்படி; நினைந்த பெருமான் செய்ய நினைத்த பெருமானும்; முன் அது அன்றியும் மற்றொரு சமயம்; தொல் சீர் பிரளய காலத்தில்; மகர முதலைகளையுடைய; உலகு ஏழ் உலகங்கள் ஏழையும்; கடல் ஏழ் கடல்கள் ஏழையும்; மலை ஏழ் மலைகள் ஏழையும்; ஒழியாமை ஒன்றோடொன்று சேர்ந்துவிடாதபடி; நம்பி நன்று உண்ட உண்டு காத்த பெருமானையும்; காண்மின் காண்மின்; அன்று உண்டவன் அன்று உண்டவன்; இன்று இன்றோவெனில்; அளை தயிரையும்; வெண்ணெய் வெண்ணெயையும்; உண்டு உண்டு; ஆய்ச்சியரால் ஆய்ச்சியரால்; ஆப்புண்டி தாம்பால் கட்டப் பட்டு; இருந்தவனே! இருந்தவனே!