PT 3.10.2

தேவர்களுக்கு அமுதளித்தவன் இடம் அரிமேய விண்ணகரம்

1239 வென்றிமிகுநரகனுரமது அழியவிசிறும்
விறலாழித்தடக்கையன், விண்ணவர்கட்கு * அன்று
குன்றுகொடுகுரைகடலைக்கடைந்துஅமுதமளிக்கும்
குருமணிஎன்னாரமுதம்குலவியுறைகோயில் *
என்றுமிகுபெருஞ்செல்வத்து எழில்விளங்கு மறையோர்
ஏழிசையும்கேள்விகளும்இயன்றபெருங் குணத்தோர் *
அன்றுஉலகம்படைத்தவனையனையவர்கள்நாங்கூர்
அரிமேயவிண்ணகரம்வணங்குமடநெஞ்சே!
PT.3.10.2
1239 vĕṉṟi miku narakaṉ uram-atu azhiya viciṟum *
viṟal āzhit taṭak kaiyaṉ viṇṇavarkaṭku aṉṟu *
kuṉṟu kŏṭu kurai kaṭalaik kaṭaintu amutam al̤ikkum *
kurumaṇi ĕṉ ār amutam kulavi uṟai koyil **
ĕṉṟum miku pĕruñ cĕlvattu ĕzhil vil̤aṅku maṟaiyor *
ezh icaiyum kel̤vikal̤um iyaṉṟa pĕruṅ kuṇattor *
aṉṟu ulakam paṭaittavaṉai aṉaiyavarkal̤ nāṅkūr *
arimeyaviṇṇakaram-vaṇaṅku maṭa nĕñce-2

Ragam

Mohana / மோஹன

Thalam

Jambai / ஜம்பை

Bhavam

Self

Simple Translation

1239. Our god, as sweet as nectar, who carries a discus in his heroic hands and shines like a diamond, who came as a man-lion and split open the chest of the victorious Hiranyan and churned the roaring milky ocean with Mandara mountain to give nectar to the gods in the sky stays happily in the Arimeyavinnagaram temple in flourishing Nāngur where good Vediyars live, skilled in the seven kinds of music and as versed as in the sastras as Nānmuhan, the creator of the world. O heart, let us go and worship him there.

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
வென்றி மிகு வெற்றியடையக் கூடிய; நரகன் நரகாசுரனின்; உரம் அது அழிய மிடுக்கு அழிய; விசிறும் வீசி எறியப்பட்ட; விறல் ஆழி வலிய சக்கரத்தை; தடக் கையன் கையிலுடையவனாய்; விண்ணவர்கட்கு அன்று தேவர்களுக்காக அன்று; குன்று கொடு மந்திர மலையை நட்டு; குரை கடலை சப்திக்கும் கடலை; கடைந்து கடைந்து; அமுதம் அளிக்கும் அமுதம் அளித்தவனும்; குருமணி என் ஆர் சிறந்த மணி போன்றவனும்; அமுதம் அமுதம் போன்றவனும்; குலவி கொண்டாடிக்கொண்டு; உறை கோயில் இருக்கும் கோயில்; என்றும் மிகு தினமும் பெருகி வரும்; பெருஞ்செல்வத்து பெருஞ்செல்வமுடையவராய்; எழில் விளங்கு அழகிய வேதத்தை; மறையோர் நன்கறிந்தவராய்; ஏழ் இசையும் ஸப்த ஸ்வரங்களும்; கேள்விகளும் அவற்றின் அங்கங்களும்; இயன்ற பெரும் அறிந்த பெரும்; குணத்தோர் குணமுடையவர்களாய்; அன்று உலகம் அன்று உலகம்; படைத்தவனை படைத்த பிரம்மாவைப் போன்ற; அனையவர்கள் வைதிகர்கள் வாழும்; நாங்கூர் திருநாங்கூரின்; அரிமேயவிண்ணகரம் அரிமேயவிண்ணகர; வணங்கு எம்பெருமானை வணங்கு; மட நெஞ்சே! மட நெஞ்சே!
venṛi migu very victorious; naragan narakāsura-s; adhu uram such strength; azhiya to be destroyed; visiṛum flowing; viṛal having strength; āzhi thiruvāzhi (chakra); thadam big; kaiyan having in his divine hand; anṛu when the clan of dhĕvathās prayed; viṇṇavargatku for dhĕvathās such as indhra et al.; kunṛu kodu manthara mountain; kurai kadalai tumultuous ocean; kadaindhu churned; amudham nectar; al̤ikkum mercifully gave (them); kuru maṇi like the best gem; en ār amudham my nectar which will never satiate; kulavi uṛai residing desirously; kŏyil being divine abode; enṛum everyday; migu over flowing; perum selvaththu having unlimited wealth; ezhil vil̤angum with shining beauty; maṛaiyŏr those who have mastered vĕdham; ĕzh isaiyum saptha svaras (seven tunes); kĕl̤vigal̤um other ancillary subjects; iyanṛa learnt; perum guṇaththŏr those who have abundance of great qualities; anṛu at that time; ulagam padaiththavanĕ anaiyavargal̤ where brāhmaṇas who are capable of performing creation just as brahmā is capable of doing, are residing; nāngūr in thirunāngūr; arimĕya viṇṇagaram emperumān in arimĕya viṇṇagaram; mada nenjĕ ŏh obedient heart!; vaṇangu surrender.