MUT 33

மாலே! தேவர்கட்கு அமுதம் அளித்தாயே!

2314 பாலகனாய் ஆலிலைமேல்பைய * உலகெல்லாம்
மேலொருநாளுண்டவனே! மெய்ம்மையே * - மாலவனே!
மந்தரத்தால் மாநீர்க்கடல்கடைந்து * வானமுதம்
அந்தரத்தார்க்கீந்தாய்நீயன்று.
2314 pālakaṉāy * āl ilaimel paiya * ulaku ĕllām
mel ŏrunāl̤ * uṇṭavaṉe! mĕymmaiye ** - mālavaṉe!
mantarattāl * mā nīrk kaṭal kaṭaintu * vāṉ amutam
antarattārkku īntāy nī aṉṟu -33

Ragam

Mohana / மோஹன

Thalam

Tiripuṭai / திரிபுடை

Bhavam

Self

Divya Desam

Simple Translation

2314. O Thirumāl, it is true that you swallowed all the seven worlds at the end of the eon, lay on a banyan leaf as a baby, churned the milky ocean with Mandara mountain and gave the nectar to all the gods in the sky.

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
மேல் ஒரு நாள் முன்பு ஒரு சமயம்; பாலகனாய் சிறு குழந்தையாய்; ஆலிலைமேல் ஆலிலையில்; உலகு எல்லாம் உலகமெல்லாம்; பைய மெல்ல; மெய்ம்மையே உண்மையாகவே; உண்டவனே! உண்டவனே!; மாலவனே! ஸர்வஜ்ஞனே!; நீ அன்று நீ அன்று; மந்திர மலையால் மந்திரத்தால்; மா நீர் மிக்க நீரையுடைய; கடல் கடலை; கடைந்து கடைந்து; வான் அமுதம் சிறந்த அம்ருதத்தை; அந்தரத்தார்க்கு தேவர்களுக்கு; ஈந்தாய் அளித்தாய்
mĕl oru nāl̤ once upon a time; pālaganāy in the form of an infant; āl ilai mĕl on top of a tender banyan leaf; ulagu ellām all the worlds; paiya slowly; meymmaiyĕ truly; uṇdavanĕ ŏh one who ate and reclined!; mālavanĕ ŏh the great one!; you, who are like these; anṛu on that day; mandharaththāl with the manthara hill [a celestial hill]; mā nīr kadal kadaindhu churning the ocean which has huge quantity of water; vān amudham the great nectar; andharaththārkku to dhĕvas (celestial entities); īndhāy you offered