PT 6.5.1

கடல் கடைந்தவன் ஊர் திருநறையூர்

1488 கலங்கமுந்நீர்கடைந்து அமுதங்கொண்டு * இமையோர்
துலங்கல்தீரநல்கு சோதிச்சுடராய *
வலங்கையாழிஇடங்கைச்சங்கம் உடையானூர் *
நலங்கொள்வாய்மை அந்தணர்வாழும்நறையூரே. (2)
1488 ## kalaṅka munnīr kaṭaintu * amutam kŏṇṭu * imaiyor
tulaṅkal tīra * nalku cotic cuṭar āya **
valaṅkai āzhi iṭaṅkaic caṅkam * uṭaiyāṉ ūr * -
nalam kŏl̤ vāymai * antaṇar vāzhum-naṟaiyūre-1

Ragam

Senjurutti / செஞ்சுருட்டி

Thalam

Aḍa / அட

Bhavam

Self

Simple Translation

1488. The lord, the divine light who carries a discus in his right hand and a conch in his left, and who churned the milky ocean, stirring it, took the nectar and gave it to the gods, removed their suffering - stays in Thirunaraiyur where good Vediyars live who tell only the truth.

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
முந்நீர் கடலை [ஆற்று நீர் ஊற்று நீர் மழை நீர்]; கலங்க கலங்கும்படியாக; கடைந்து கடைந்து; அமுதம் கொண்டு அமுதமெடுத்து; இமையோர் தேவர்களின்; துலங்கல் கலக்கம் தீர; தீர நல்கு அவர்களுக்குக் கொடுத்தான்; சோதி சோதி; சுடர் ஆய ஸ்வரூபமாயிருப்பவனும்; வலங்கை ஆழி வலக்கையில் சக்கரமும்; இடங்கை சங்கம் இடக்கையில் சங்கமும்; உடையான் உடைய பெருமான்; ஊர் இருக்கும் ஊர்; நலம் கொள் நலம் விரும்புபவர்களும்; வாய்மை உண்மை பேசுபவர்களுமான; அந்தணர் வைதிகர்கள்; வாழும் நறையூரே வாழும் திருநறையூராகும்