ஆழ்வாரான அவஸ்தை போய் ஒரு பிராட்டி அவஸ்தியைப் பஜித்து அவளுடைய தசையை தாயார் சொல்லுகிறாள் –
இப்படிப் பட்ட திருவேங்கடமுடையானுடைய முஃத்யத்தை அனுபவித்து தாமான தன்மை அழிந்து -ஒரு பிராட்டி தசையைப் பிராப்தராய் – அவளுடைய யுக்தி வ்ருத்திகளை திருத் தாயாராக அனுவதித்திக் கொண்டு பேசுகிறார் –
(முலையோ முழு முற்றும் போந்தில மொய் பூம் குழல் குறிய கலையோ அரையில்லை நாவோ குழறும் கடல் மண்ணெல்லாம்