TCV 88

வானவர்க்கு மருந்தளித்த வள்ளல்

839 வெள்ளைவேலைவெற்புநாட்டி வெள்ளெயிற்றராவளாய் *
அள்ளலாக்கடைந்தவன்று அருவரைக்கொராமையாய் *
உள்ளநோய்கள்தீர்மருந்து வானவர்க்களித்த * எம்
வள்ளலாரையன்றி மற்றொர் தெய்வம்நான்மதிப்பனே?
839 vĕl̤l̤ai velai vĕṟpu nāṭṭi * vĕl̤ ĕyiṟṟu arāvu al̤āy *
al̤l̤alāk kaṭainta * aṉṟu aruvaraikku or āmaiyāy **
ul̤l̤a noykal̤ tīr maruntu * vāṉavarkku al̤itta * ĕm
val̤l̤alārai aṉṟi * maṟṟu ŏr tĕyvam nāṉ matippaṉe? (88)

Ragam

Surutti / சுருட்டி

Thalam

Tiripuṭai / திரிபுடை

Bhavam

Self

Divya Desam

Simple Translation

839. My generous lord churned the milky ocean, using the mountain for a churning stick, a turtle to support the mountain and the white-fanged snake Vāsuki for the rope. He took the nectar that came from the ocean, gave it to the gods in the sky, and took away their troubles. I will not worship any one except him.

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
வெள்ளை வெண்மையான; வேலை பாற்கடலிலே; வெற்பு நாட்டி மந்தரமலையை நட்டு; வெள் எயிற்று வெளுத்த பற்களையுடைய; அராவு அளாய் வாஸுகி என்னும் நாகத்தை சுற்றி; அள்ளலாக் அலைகள் பொங்கி வரும்படி; கடைந்த அன்று கடைந்த காலத்தில்; அருவரைக்கு தரித்து நிற்ப்பதற்கு; ஓர் ஆமையாய் ஓர் ஆமையாய் அவதரித்து; வானவர்க்கு தேவர்களுக்கு; உள்ள நோய்கள் நோய்கள்; தீர் தீர்க்கவல்ல; மருந்து மருந்தான அம்ருதத்தை; அளித்த அருளின; எம் வள்ளலாரை உதாரனனான எம்பெருமானை; அன்றி மற்று தவிர; ஓர் தெய்வம் வேறொரு தெய்வத்தை; நான் மதிப்பனே? நான் மதிப்பேனோ?