TCV 45

புனிதனே! நீ எங்கிருக்கிறாய்?

796 மண்ணுளாய்கொல் விண்ணுளாய்கொல் மண்ணுளேமயங்கிநின்று *
எண்ணுமெண்ணகப்படாய்கொல் என்னமாயை * நின்தமர்
கண்ணுளாய்கொல் சேயைகொல் * அனந்தன்மேல்கிடந்தஎம்
புண்ணியா * புனந்துழாயலங்கலம்புனிதனே!
796 maṇṇul̤āy kŏl? viṇṇul̤āy kŏl * maṇṇul̤e mayaṅki niṉṟu *
ĕṇṇum ĕṇ akappaṭāy kŏl * ĕṉṉa māyai niṉ tamar **
kaṇṇul̤āy kŏl? ceyai kŏl * aṉantaṉ mel kiṭanta ĕm *
puṇṇiyā * puṉantuzhāy alaṅkal am puṉitaṉe (45)

Ragam

Ārabi / ஆரபி

Thalam

Jambai / ஜம்பை

Bhavam

Self

Divya Desam

Simple Translation

796. Are you on the earth or are you in the sky, or are you mixed into the earth? We do not know who you are—what is this magic? Are you with other gods in heaven? Are you near? Are you far? O virtuous one resting on the snake Adishesha in the milky ocean, who wear a fresh thulasi garland, you are pure.

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
மண்ணுளாய் கொல் மண்ணுலகத்தில் அவதரித்தவனே!; விண்ணுளாய் கொல் பரமபதத்தில் இருப்பவனே!; மண்ணுளே மயங்கி நின்று பூமியிலே மயங்கி; எண்ணும் எண்ணிக்கொண்டிருப்பவரின்; எண் எண்ணங்களுக்கு; அகப்படாய் அகப்படாதவனாய்; கொல் இருப்பவனே!; நின் தமர் உன்னிடம் அன்புடையவர்களின்; கண்ணுளாய் கொல் கண்ணிலேயே இருப்பவனே!; சேயை அன்பில்லாதவர்களுக்கு; கொல் வெகுதூரத்திலிருப்பவனே!; அனந்தன்மேல் கிடந்த ஆதிசேஷன் மேலே இருக்கும்; எம் புண்ணியா எம்பெருமானே!; புனந்துழாய் அலங்கல் திருத்துழாய்மாலை அணிந்த; அம் புனிதனே! அழகனே!; என்ன மாயை! இது என்ன ஆச்சரியம்!