PT 4.10.2

காளியன்மேல் நடனமாடியவன் வாழ்விடம் இது

1339 ஆநிரைமேய்த்துஅன்றுஅலைகடலடைத்திட்டு
அரக்கர்தம்சிரங்களையுருட்டி *
கார்நிறைமேகம்கலந்ததோருருவக்
கண்ணனார்கருதியகோயில் *
பூநிரைச்செருந்திபுன்னைமுத்தரும்பிப்
பொதும்பிடைவரிவண்டுமிண்டி *
தேனிரைத்துண்டுஅங்குஇன்னிசைமுரலும்
திருவெள்ளியங்குடியதுவே.
PT.4.10.2
1339 ānirai meyttu aṉṟu alai kaṭal aṭaittiṭṭu *
arakkar-tam ciraṅkal̤ai uruṭṭi *
kār niṟai mekam kalantatu or uruvak *
kaṇṇaṉār karutiya koyil ** -
pū niraic cĕrunti puṉṉai muttu arumpi *
pŏtumpiṭai vari vaṇṭu miṇṭi *
teṉ iraittu uṇṭu aṅku iṉ icai muralum * -
tiruvĕl̤l̤iyaṅkuṭi-atuve-2

Ragam

Mohana / மோஹன

Thalam

Aḍa / அட

Bhavam

Self

Simple Translation

1339. Our dear lord, the cloud-colored Kannan who grazed the cows, churned the milky ocean for the gods, and fought with the Rākshasas and made their heads roll on the ground stays in the temple in Thiruvelliyangudi where blossoming cherundi and budding punnai plants bloom in the groves and lined bees swarm, drinking honey and singing sweet music.

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
அன்று முன்பு ஒரு சமயம்; ஆ நிரை பசுக்களை; மேய்த்து மேய்த்தவனும்; அலை கடல் அலை கடலிலே; அடைத்திட்டு அணைகட்டி; அரக்கர் தம் ராக்ஷஸர்களின்; சிரங்களை தலைகளை; உருட்டி சிதைத்தவனும்; கார் நிறை கார்காலத்து; மேகம் கலந்தது மேகத்தை ஒத்த; ஓர் உருவ ஓர் உருவத்தையுடையவனுமான; கண்ணனார் கண்ணன்; கருதிய கோயில் இருக்கும் கோயில்; பூ நிரை கொத்துக் கொத்தாய்; செருந்தி பூத்திருக்கும் செருந்தி மரங்களும்; புன்னை புன்னை மரங்களின்; முத்து முத்துப் போன்ற; அரும்பி பொதும்பிடை மொக்குகளின் நடுவில்; வரி வண்டு ரேகைகளையுடைய வண்டுகள்; மிண்டி நெருங்கியிருந்து; தேன் இரைத்து தேனை ரீங்கரித்துக் கொண்டே; உண்டு உண்ணும்; அங்கு அவைகளின் மதுரமான; இன்னிசை முரலும் இன்னிசை முழங்கும்; திருவெள்ளியங்குடி திருவெள்ளியங்குடி; அதுவே என்னும் தலம்
ānirai herds of cows; mĕyththu being the one who protected; anṛu during ṣrī rāmāvathāram; alai tides striking; kadal ocean; adaiththittu building bridge; arakkar tham strong rākshasas-; sirangal̤ai heads; urutti one who severed; kār in rainy season; nirai dense; mĕgam kalandhu matching a cloud; ŏr unique; uruvam who is having a form; kaṇṇanār krishṇa; karudhiya desirously living; kŏyil dhivyadhĕṣam is; nirai in bunches; flowering; serundhi serundhi trees- (a type of sedge); arumbi sprouting (and growing further); muththu having pearls; punnai punnai trees- (mast-wood); podhumbu holes; idai in the middle; vari having stripes (beautiful); vaṇdu beetles; miṇdi being closely together; thĕn honey; iraiththu making noise; uṇdu consumed; angu there itself; in sweetly; isai song; muralum humming; thiruvel̤l̤iyangudi adhuvĕ it is thiruvel̤l̤iyangudi