PT 2.5.8

கமலக்கண்ணன் இடம் கடல்மல்லை

1095 பெண்ணாகிஇன்னமுதம் வஞ்சித்தானைப்
பிறையெயிற்றன்றடலரியாய்ப்பெருகினானை *
தண்ணார்ந்தவார்புனல்சூழ் மெய்யமென்னும்
தடவரைமேல்கிடந்தானை, பணங்கள்மேவி *
என்ணானைஎண்ணிறந்தபுகழினானை
இலங்கொளிசேர்அரவிந்தம்போன்றுநீண்ட
கண்ணானை * கண்ணாரக்கண்டுகொண்டேன்
கடிபொழில்சூழ்கடல்மல்லைத்தலசயனத்தே.
PT.2.5.8
1095 pĕṇ āki iṉ amutam vañcittāṉaip * piṟai ĕyiṟṟu aṉṟu aṭal ariyāyp pĕrukiṉāṉai *
taṇ ārnta vār puṉal cūzh mĕyyam ĕṉṉum * taṭa varaimel kiṭantāṉai paṇaṅkal̤ mevi *
ĕṇṇāṉai ĕṇ iṟanta pukazhiṉāṉai * ilaṅku ŏl̤i cer aravintam poṉṟu nīṇṭa
kaṇṇāṉai * kaṇ ārak kaṇṭukŏṇṭeṉ * kaṭi pŏzhil cūzh kaṭalmallait talacayaṉatte-8

Ragam

Kalyāṇi / கல்யாணி

Thalam

Ādi / ஆதி

Bhavam

Self

Simple Translation

1095. He came as Mohini and gave nectar to the gods, cheating the Asurans when the milky ocean was churned, and he took the form of a mighty man-lion with teeth like crescent moons and split open the chest of Hiranyan. As large as Thiru Meyyam mountain, he rests on the ocean surrounded by cool abundant water on many-headed Adisesha. The lord who has long beautiful lotus eyes stays in Kadalmallai Thalasayanam surrounded with thick groves where all devotees think of him and there is no limit to his fame. I found him there.

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
இன் இனிய; அமுதம் அமிருத்தை அசுரர்கள் பெறாதவாறு; பெண் பெண் உருவமெடுத்து; வஞ்சித்தானை அசுரர்களை வஞ்சித்தவனும்; அன்று ப்ரஹ்லாதன் துன்பப் பட்ட அன்று; பிறை சந்திரனை போன்ற வளைந்த; எயிற்று பற்களையும்; அடல் மிடுக்கையும் உடைய; அரியாய் நரசிம்மமாய்; பெருகினானை வளர்ந்தவனும்; தண் குளிர்ந்த; ஆர்ந்த பெருகும்; வார்புனல் ஜலத்தாலே; சூழ் சூழந்த; மெய்யம் என்னும் திருமெய்யம் என்கிற; தடவரை மேல் பெரிய மலையின்மீது; பணங்கள் மேவி ஆதிசேஷன் மேல்; கிடந்தானை சயனித்திருப்பவனை; எண்ணானை எல்லோராலும் சிந்திக்கப்படுமவனும்; எண் இறந்த எல்லையில்லாத; புகழினானை புகழையுடையவனும்; இலங்கு ஒளி சேர் மிக்க ஒளியுடைய; அரவிந்தம் போன்று தாமரை போன்ற; நீண்ட நீண்ட; கண்ணானை கண்களையுடைய எம்பெருமானை; கண் ஆர கண்ணார; கண்டு கொண்டேன் கண்டு கொண்டது; கடி மணம் மிக்க; பொழில் சோலைகள்; சூழ் சூழ்ந்த; கடல் மல்லைத் திருக்கடல் மல்லை; தலசயனத்தே தலசயனத்தில்
in sweet; amudham nectar (to be not consumed by demons); peṇ āgi assuming a feminine form; vanjiththānai one who cheated them; anṛu when prahlādha was tormented by hiraṇya; piṛai resembling a crescent moon; eyiṛu teeth; adal strong; ariyāy being narasimha; peruginānai one who grew; thaṇ ārndha cool; vār flowing; punal by water; sūzh surrounded by; meyyam ennum known as thirumeyyam; thada varai mĕl on the huge hill; paṇangal̤ on thiruvananthāzhwān; mĕvi firmly; kidandhānai one who mercifully reclined; eṇṇānai one who is thought about by everyone; eṇ iṛandha unlimited; pugazhinānai one who is having divine, auspicious qualities; ilangu ol̤i sĕr having great radiance; aravindham pŏnṛu vast like lotus petal; nīṇda wide; kaṇṇānai one who is having divine eyes; kaṇ āra to quench the thirst of the eyes; kadi fragrant; pozhil by garden; sūzh surrounded; thalasayanaththu in sthala sayanam (where he rests on the ground); kadal mallai in thirukkadalmallai; kaṇdu koṇdĕn ī got to see