PT 11.4.2

ஆமையான திருமால் நமக்கு அரண்

1983 செருமிகுவாளெயிற்றஅரவொன்றுசுற்றித்
திசைமண்ணும்விண்ணும்உடனே *
வெருவரவெள்ளைவெள்ளம்முழுதும்குழம்ப
இமையோர்கள்நின்றுகடைய *
பருவரையொன்றுநின்றுமுதுகில்பரந்து
சுழலக்கிடந்துதுயிலும் *
அருவரையன்னதன்மையடலாமையான
திருமால்நமக்குஓரரணே.
1983 cĕru miku vāl̤ ĕyiṟṟa aravu ŏṉṟu cuṟṟit *
ticai maṇṇum viṇṇum uṭaṉe *
vĕruvara vĕl̤l̤ai vĕl̤l̤am muzhutum kuzhampa *
imaiyorkal̤ niṉṟu kaṭaiya **
paru varai ŏṉṟu niṉṟu mutukil parantu *
cuzhalak kiṭantu tuyilum *
aru varai aṉṉa taṉmai aṭal āmai āṉa *
tirumāl namakku or araṇe

Ragam

Aṭāṇa/ அடாணா

Thalam

Tiripuṭai / திரிபுடை

Bhavam

Self

Divya Desam

Simple Translation

1983. As a turtle he supported Mandara mountain on his back and using it as a churning stick and the snake Vāsuki as a rope he churned the milky ocean while all the gods in the sky helped him. That Thirumāl is our refuge.

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
செரு மிகு வலிமை மிக்க; வாள் ஒளியுள்ள; எயிற்ற பற்களையுடைய; அரவு வாஸூகியை; ஒன்று சுற்றி கயிறாகச் சுற்றி; இமையோர்கள் தேவர்கள்; நின்று கடைய நின்று கடைய; திசை திசைகளும்; மண்ணும் பூமியும்; விண்ணும் உடனே விண்ணும்; வெருவர அஞ்சி நடுங்க; வெள்ளை வெள்ளம் பாற்கடல்; முழுதும் குழம்ப முழுதும் குழம்பும்படி; ஒன்று நின்று பெரிய ஒரு; பருவரை மலையை; முதுகில் முதுகிலே; பரந்து பரப்பி நிறுத்தி; சுழலக் கிடந்து அது சுழல்வதற்காக; துயிலும் அதைத் தாங்க; அன்ன தன்மை அது சாயாமலிருக்க; அடல் வலிமையுடைய; அரு வரை பெரியதொரு மலை; ஆமை ஆன ஆமைவடிவில் வந்த; திருமால் நமக்கு திருமால் நமக்கு; ஓர் அரணே ஒப்பற்ற ரக்ஷகன்