PAT 5.1.9

எம்பிரானே! இடரைக் க:ளையாய்

441 நம்பனே! நவின்றேத்தவல்லார்கள்
நாதனே! நரசிங்கமதானாய்! *
உம்பர்கோனுலகேழும்அளந்தாய்
ஊழியாயினாய்! ஆழிமுன்னேந்தி *
கம்பமாகரிகோள்விடுத்தானே.
காரணா! கடலைக்கடைந்தானே! *
எம்பிரான். என்னையாளுடைத்தேனே!
ஏழையேனிடரைக்களையாயே.
441 nampaṉe naviṉṟu etta vallārkal̤ * nātaṉe naraciṅkamatu āṉāy! *
umparkoṉ ulaku ezhum al̤antāy * ūzhi āyiṉāy āzhi muṉ enti **
kampa mā kari kol̤ viṭuttāṉe * kāraṇā kaṭalaik kaṭaintāṉe! *
ĕmpirāṉ ĕṉṉai āl̤ uṭait teṉe! * ezhaiyeṉ iṭaraik kal̤aiyāye (9)

Ragam

Dhanyāsi / தன்யாசி

Thalam

Aḍa / அட

Bhavam

Self

Divya Desam

Simple Translation

441. You are my solace and Faith and the god of those who praise you with love. The god of the gods in the sky, You took the form of a man-lion, You measured all the seven worlds, and You are the apocalypse. You, the reason for everything, removed the suffering of the elephant Gajendra when he was caught by a crocodile and You churned the milky ocean with the gods in the sky. . Make me your devotee and protect me. I am weak—remove my suffering.

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
நம்பனே! நம்பத்தகுந்தவனே!; நவின்று தோத்திரங்களை வாயாரச்சொல்லி; ஏத்த வல்லார்கள் துதிக்கவல்லவர்களுக்கு; நாதனே! தலைவனே!; நரசிங்கமது நரசிம்மாவதாரம்; ஆனாய்! செய்தருளினவனே!; உம்பர் நித்யசூரிகளுக்கு; கோன் தலைவனே!; உலகு ஏழும் எல்லா உலகங்களையும்; அளந்தாய்! திரிவிக்கிரமனாய் அளந்தவனே!; ஊழி ஊழி காலத்துக்குப் பின்; ஆயினாய்! உலகங்களைப்படைத்தவனே!; ஆழி முன் திருச்சக்கரத்தை; ஏந்தி கையிலேந்தி; கம்ப மா கரி பயந்திருந்த கஜேந்திரனுடைய; கோள் விடுத்தானே! துயரைப்போக்கியவனே!; காரணா! ஜகத்காரண பூதனே!; கடலை கடலை; கடைந்தானே! கடைந்தவனே!; எம்பிரான்! என்னை எம்பிரானே! என்னை; ஆள் உடை அடிமைப்படுத்திக்கொண்ட; தேனே! தேன் போன்ற இனியவனே!; ஏழையேன் அபலையான என்னுடைய; இடரை துன்பத்தைக்; களையாயே களைந்தருளவேண்டும்
nampaṉe! One who is worthy of trust!; nātaṉe! the Lord of; etta vallārkal̤ those capable of offering worship; naviṉṟu with mouths full of praise; āṉāy! You incarnated as; naraciṅkamatu Narasimha; koṉ the Supreme Leader of; umpar celestial beings; al̤antāy! as Trivikrama, You measured; ulaku eḻum all the worlds; ūḻi after cosmic dissolution; āyiṉāy! You created the worlds; enti You wield in Your hand; āḻi muṉ the divine discus; kol̤ viṭuttāṉe! You removed the fear for; kampa mā kari the scared Gajendran; kāraṇā! the Prime Cause of the Universe; kaṭaintāṉe! You churned; kaṭalai the ocean; ĕmpirāṉ! ĕṉṉai my Lord; teṉe! You are as sweet as honey!; āl̤ uṭai who have graced me to be your servant; kal̤aiyāye You must remove; iṭarai the sufferings of; eḻaiyeṉ this poor man