MUT 32

கோபாலகன் விரும்பிய இடங்கள்

2313 பாற்கடலும்வேங்கடமும் பாம்பும்பனிவிசும்பும் *
நூற்கடலும்நுண்ணூலதாமரைமேல் * - பாற்பட்
டிருந்தார்மனமும் இடமாகக்கொண்டான் *
குருந்தொசித்தகோபாலகன்.
2313 pāṟkaṭalum veṅkaṭamum * pāmpum paṉi vicumpum *
nūl kaṭalum nuṇ nūla tāmarai mel ** - pāṟpaṭṭu
iruntār maṉamum * iṭamākak kŏṇṭāṉ *
kuruntu ŏcitta kopālakaṉ -32

Ragam

Mohana / மோஹன

Thalam

Tiripuṭai / திரிபுடை

Bhavam

Self

Simple Translation

2313. Gopalan who broke the Kurundam trees and killed the Asurans abides on Adisesha on the milky ocean, in Thiruvenkatam, the cool sky, all the sastras, the hearts of the sages plunged in yoga and in my heart.

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
குருந்து குருந்த மரத்தை; ஒசித்த முறித்தவனும்; கோபாலகன் பசுக்களைக் காத்தவனும்; பாற்கடலும் திருப்பாற்கடலையும்; வேங்கடமும் திருவேங்கடமலையையும்; பாம்பும் ஆதிசேஷனையும்; பனி பனி போல் குளிர்ந்த; விசும்பும் பரமபதத்தையும்; கடலும் கடல் போன்ற; நூல் சாஸ்திரங்களையும்; நுண் ஸூக்ஷ்ம; நூல சாஸ்திரங்களில் கூறப்பட்ட; தாமரை மேல் இருதயகமலத்தில்; பாற்பட்டு இந்திரியங்களை அடக்கிய; இருந்தார் யோகிகளின்; மனமும் நெஞ்சத்தையும்; இடமாக தனக்கு இருப்பிடமாக; கொண்டான் கொண்டவன் எம்பெருமான்
kurundhu the kurundham tree (a variety of tree growing along the bank of river yamunā); osiththa one who snapped it and destroyed it; gŏpālagan kaṇṇapirān (krishṇa) who tends to cows; pāṛkadalum thiruppāṛkadal (milky ocean); vĕngadamum thiruvĕngadam hills; pāmbum thiruvananthāzhwān (ādhiṣĕshan); panivisumbum paramapadham (ṣrīvaikuṇtam) which is very cool (without the heat from samsāram casting its shadow); nūṛkadalum ṣāsthras which are like the expansive ocean; nuṇ nūla thāmarai mĕlpāl̤ pattirundhār manamum the hearts of yŏgis (those who carry out penance) who focus their sensory perceptions on the lotus-like heart which is mentioned in those subtle ṣāsthras; idam āgak koṇdān has taken these as his places of dwelling