PT 6.7.3

நறையூர் நம்பிதான் வாமனன்

1510 தெள்ளார்கடல்வாய் விடவாயசினவாளரவில்துயிலமர்ந்து *
துள்ளாவருமான்விழ வாளிதுரந்தான், இரந்தான்மாவலிமண் *
புள்ளார்புறவில்பூங்காவி புலங்கொள்மாதர்கண்காட்ட *
நள்ளார்கமலம்முகங்காட்டும் நறையூர்நின்றநம்பியே.
1510 tĕl̤ ār kaṭalvāy viṭa vāya *
ciṉa vāl̤ aravil tuyil amarntu *
tul̤l̤ā varu māṉ vizha vāl̤i
turantāṉ * irantāṉ māvali maṇ ** -
pul̤ ār puṟavil pūṅ kāvi *
pulaṅkŏl̤ mātar kaṇ kāṭṭa *
nal̤ ār kamalam mukam kāṭṭum *
naṟaiyūr niṉṟa nampiye-3

Ragam

Ārabi / ஆரபி

Thalam

Jambai / ஜம்பை

Bhavam

Self

Simple Translation

1510. Our lord Nambi who rests on the shining snake Adisesha on the clear milky ocean shot his arrow and killed Marisan when the Raksasan came in the form of a swiftly running deer and went to king Mahabali as a dwarf, asked for three feet of land, and measured the world and the sky with his two feet. He stays in Thirunaraiyur where in the groves filled with birds, kāvi flowers bloom like the eyes of beautiful women and lotuses bloom like their faces.

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
தெள் ஆர் தெளிந்த; கடல் வாய் பாற்கடலில்; விட வாய் விஷம் கக்கும்; சின சீற்றமுடைய; வாள் அரவில் ஒளியுள்ள ஆதிசேஷன் மீது; துயில் அமர்ந்து சயனித்தவனும்; துள்ளா துள்ளிவிளையாடிக்கொண்டு; வரு மான் வந்த மாய மான்; விழ வாளி மாளும் படி அம்பு; துரந்தான் எய்தவனுமான; இரந்தான் மஹாபலியினிடம்; மாவலி மண் பூமி யாசித்த பெருமான்; புள் ஆர் பட்சிகள் நிறைந்த; புறவில் சோலைகளில்; பூங்காவி அழகிய செங்கழுநீர்ப் பூக்கள்; புலன் கொள் மாதர் அழகிய பெண்களின்; கண் காட்ட கண்களைப் போன்றும்; நள் ஆர் இதழ்ச் செறிவையுடைய; கமலம் தாமரைப்பூக்கள்; முகம் அவர்களது முகங்கள்; காட்டும் போன்றும் இருக்கும்; நறையூர் திருநறையூரில்; நின்ற நம்பியே இருக்கும் ஸ்வாமியே!