56

Thiru ParamEswara Vinnagaram

பரமேஸ்வரவிண்ணகரம்

Thiru ParamEswara Vinnagaram

ஸ்ரீ வைகுந்தவல்லீ ஸமேத ஸ்ரீ பரமபதநாதாய நமஹ

Thayar: Sri Vaikunda Valli
Moolavar: Sri Paramapadhanāthan, Vaikundhanādhan
Utsavar: Vaikundhanādhan
Vimaanam: Mukundha
Pushkarani: Irammadha Theertham
Thirukolam: Amarndha (Sitting)
Direction: West
Mandalam: Thondai Nādu
Area: Kanchipuram
State: TamilNadu
Sampradayam: Thenkalai
Search Keyword: Paramechura Vinnagaram
Mangalāsāsanam: Thirumangai Āzhvār
Tamil
Simplified
English
Verse info
Synonyms
Translation

PT 2.9.1

1128 சொல்லுவன்சொற்பொருள்தானவை யாய்ச்
சுவைஊறுஒலிநாற்றமும்தோற்றமுமாய் *
நல்லரன் நான்முகன்நாரணனுக்குஇடந்தான்
தடம்சூழ்ந்துஅழகாயகச்சி *
பல்லவன்வில்லவனென்றுலகில்
பலராய்ப்பலவேந்தர் வணங்குகழல்
பல்லவன் * மல்லையர்கோன்பணிந்த
பரமேச்சுரவிண்ணகரமதுவே. (2)
1128 ## சொல்லு வன் சொல் பொருள் தான் அவை ஆய்ச் *
சுவை ஊறு ஒலி நாற்றமும் தோற்றமும் ஆய் *
நல் அரன் நாரணன் நான்முகனுக்கு *
இடம்-தான்-தடம் சூழ்ந்து அழகு ஆய கச்சி **
பல்லவன் வில்லவன் என்று உலகில் *
பலராய்ப் பல வேந்தர் வணங்கு கழல்
பல்லவன் * மல்லையர்-கோன் பணிந்த
பரமேச்சுரவிண்ணகரம்-அதுவே-1 **
1128. ##
solluvan soRporuL thānavaiyāyc * chuvai ooRu oli nNāRRamum thORRamumāy *
nNallaran nNānmugan nNāraNaNnukku idanNdhān * thadam choozhnthu azhagāyakacchi *
pallavan villavaNnenRu ulagil * palarāyppala vEnNdhar vaNangkukazhal pallavan *
mallaiyarkOn paNinNdha * paramEcchura viNNagaramadhuvE. (2) 2.9.1

Ragam

யமுனாகல்யாணி

Thalam

ஜம்பை

Bhavam

Self

Simple Translation

1128. The sacred place of our god who is the meaning of all words, taste, sound, and smell and the creator of Shivā and Nānmuhan is the Paramechura Vinnagaram temple in beautiful Kacchi surrounded by ponds where the Pallava king, a fine archer and chief of the Mallaiyar, worshiped him as many monarchs of the earth praised him and bowed to his ankleted feet.

Word by word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion. Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
சொல்லு வன் சொல் சொல்லும் வேதமும் இவற்றின்; பொருள் தான் அவை ஆய் பொருளும் தானேயாயும்; சுவை ஊறு ஒலி நாற்றமும் ரஸம் ஸ்பர்சம் சப்தம் கந்தம்; தோற்றமும் ஆய் ரூபம் ஆகிய ஐம்புலன்களும் தானேயாயும்; நல் அரன் நான்முகனுக்கு சிவனுக்கும் பிரமனுக்கும்; நாரணன் அந்தர்யாமியாயிருப்பவனுக்கு நாராயணனுக்கு; இடம் தான் தடம் சூழ்ந்து இருப்பிடம் தடாகங்கள் சூழ்ந்த; அழகு ஆய கச்சி அழகிய காஞ்சீபுரத்திலே; பல்லவன் வில்லவன் பல்லவன் வில்லவன்; என்று உலகில் என்று உலகில்; பலர் ஆய்ப் பல வேந்தர் பல பெயர்களாலே பல அரசர்களால்; வணங்கு கழல் வணங்கும் பாதத்தையுடையவனும்; மல்லையர் கோன் திருக்கடல் மல்லைக்குத் தலைவனுமான; பல்லவன் பணிந்த பல்லவன் வணங்கிய; பரமேச்சுரவிண்ணகரம் அதுவே அதுவே பரமேச்வர விண்ணகரமாம்
sollu word; van sol (more than that) the vEdham which is difficult to attain; poruL meanings of vEdham; avai for those; thAn Ay being the controller; suvaiyum taste; URum touch; oliyum sound; nARRamum fragrance; thORRamum for form which is seen by eyes; Ay being the controller; nal being the benefactor; aran being the antharyAmi for rudhra who destroys; nAraNan being nArAyaNa (who protects in his original form); nAnmuganukku for sarvESvaran who is the antharyAmi of brahmA who creates; idam thAn the abode; thadam by ponds; sUzhndhu being surrounded; azhagAya being beautiful; kachchi in kAnchi town; pallavan enRu known as pallavan; villavan enRu and known as villavan; palarAy countless; ulagil who ruled in this world; pala vEndhar many kings; vaNangu worship; kazhal having brave feet; mallaiyar for the residents of thirukkadalmallai which is known as mallApuri; kOn king; pallavan one who is known as pallavan; paNindha surrendered; paramEchchura viNNagaram paramESvara viNNagaram

PT 2.9.2

1129 கார்மன்னுநீள்விசும்பும்கடலும்
சுடரும் நிலனும்மலையும் * தன்உந்தித்
தார்மன்னுதாமரைக்கண்ணனிடம்
தடமாமதிள் சூழ்ந்து அழகாயகச்சி *
தேர்மன்னுதென்னவனை முனையில்செருவில்
திறல்வாட்டியதிண்சிலையோன் *
பார்மன்னுபல்லவர்கோன்பணிந்த
பரமேச்சுரவிண்ணகரமதுவே.
1129 கார் மன்னு நீள் விசும்பும் கடலும் *
சுடரும் நிலனும் மலையும் * தன் உந்தித்
தார் மன்னு தாமரைக்கண்ணன் இடம்- *
தடம் மா மதிள் சூழ்ந்து அழகு ஆய கச்சி **
தேர் மன்னு தென்னவனை முனையில் *
செருவில் திறல் வாட்டிய திண் சிலையோன் *
பார் மன்னு பல்லவர்-கோன் பணிந்த *
பரமேச்சுரவிண்ணகரம்-அதுவே-2 **
1129
kārmannu nNeeLvisumbum * kadalum sudarum nNilaNnummalaiyum *
than unNdhiththārmannu thāmaraik kaNNanidam * thadamāmadhiL soozhnNdhu azhagāyakacchi *
thErmannu thennavanaimunaiyil * seruvilthiRal vāttiya thiNsilaiyOn, *
pārmannu pallavar kOnpaNinNdha * paramEcchura viNNagaramadhuvE. 2.9.2

Ragam

யமுனாகல்யாணி

Thalam

ஜம்பை

Bhavam

Self

Simple Translation

1129. The sacred place of lotus-eyed Kannan, the creator of the wide sky where clouds float, of the ocean, sun, moon, earth and mountains and of Nānmuhan from his navel is the Paramechura Vinnagaram temple in beautiful Kacchi surrounded by tall walls where the Pallava king, a strong archer and conquerer of the southern Pandyan king of many chariots, worshiped him.

Word by word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion. Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
கார் மன்னு மேகங்களுடன் கூடிய; நீள் விசும்பும் பெரிய ஆகாசம்; கடலும் சுடரும் கடல் சந்திரன் சூரியன்; நிலனும் மலையும் பூமி மலை; தன் உந்தி தார் தன் நாபிக் கமலத்திலிருந்து உண்டாக்கிய; தாமரை மன்னு கண்ணன் இடம் கண்ணன் இருக்குமிடம்; தடம் தடாகங்களாலும்; மா மதிள் சூழ்ந்து பெரிய மதிள்களாலும் சூழ்ந்த; அழகு ஆய கச்சி அழகிய காஞ்சீபுரத்தில்; முனையில் போர்க்களத்திலே; தேர் மன்னு மஹாரதனான; தென்னவனை பாண்டிய அரசனை; செருவில் யுத்தத்தில்; திறல் வாட்டிய அவன் மிடுக்கை அழித்த; திண் சிலையோன் வலிய வில்லையுடையனாய்; பார் மன்னு இப்புமியில் நெடுங்காலம் வாழ்ந்திருந்த; பல்லவர் கோன் பணிந்த பல்லவராஜன் வணங்கிய; பரமேச்சுரவிண்ணகரம் அதுவே அதுவே பரமேச்சுரவிண்ணகரம்
kAr mannu clouds remaining fixed; nIL visumbum the great sky; kadalum oceans; sudarum chandhra (moon) and sUrya (sun); nilanum earth; malaiyum anchoring mountains; than undhith thAr in the flower which is in his divine navel; mannu remaining; thAmaraik kaNNan for puNdarIkAkshan (lotus-eyed lord); idam residence; thadam by ponds; mA tall; madhiL forts; sUzhndhu surrounded by; azhagAya beautiful; kachchi in kAnchIpuram town; thEr mannu great charioteer; thennavanai pANdiyan; seruvil munaiyil in the battle field; thiRal strength; vAttiya destroyed; thiN firm; silaiyOn one who has the bow; pAr (his vIraSrI – the wealth of valour) on the earth; mannu made it remain firmly; pallavarkOn pallava king; paNindha surrendered; paramEchchura viNNagaram paramESvara viNNagaram

PT 2.9.3

1130 உரந்தருமெல்லணைப்பள்ளிகொண்டான்
ஒருகால்முன்னம்மாவுருவாய்க்கடலுள் *
வரந்தரும்மாமணிவண்ணனிடம்
மணிமாடங்கள்சூழ்ந்துஅழகாயகச்சி *
நிரந்தவர்மண்ணையில்புண்ணுகர்வேல்
நெடுவாயிலுகச்செருவில்முனநாள் *
பரந்தவன்பல்லவர்கோன்பணிந்த
பரமேச்சுரவிண்ணகரமதுவே. (2)
1130 உரம் தரு மெல் அணைப் பள்ளி கொண்டான் *
ஒருகால் முன்னம் மா உருவாய்க் கடலுள் *
வரம் தரு மா மணிவண்ணன் இடம் *
-மணி மாடங்கள் சூழ்ந்து அழகு ஆய கச்சி **
நிரந்தவர் மண்ணையில் புண் நுகர் வேல் *
நெடு வாயில் உகச் செருவில் முன நாள் *
பரந்தவன் பல்லவர்-கோன் பணிந்த *
பரமேச்சுரவிண்ணகரம்-அதுவே-3 **
1130
uranNdharu mellaNaip paLLikoNdān * orukālmunnam māvuru vāykkadaluL *
varanNdharu māmaNivaNNanidam * maNimādangkaL soozhnNdhu azhagāya kacchi *
nNiranNdhavar maNNaiyil puNNugarvEl * nNeduvāyilugaccheruvilmunanNāL *
paranNdhavan pallavarkOn paNinNdha * paramEcchura viNNagaramadhuvE. 2.9.3

Ragam

யமுனாகல்யாணி

Thalam

ஜம்பை

Bhavam

Self

Simple Translation

1130. The beautiful sapphire god who rests on the milky ocean and gave a boon to the Asuran Kesi when he came as a horse stays in sacred Paramechura Vinnagaram in beautiful Kacchi filled with shining palaces where the famous Pallava king who conquered and wounded his enemies in Mannai with his spear worshiped him.

Word by word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion. Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
முன்னம் ஒருகால் முன்பொருகால்; மா உருவாய்க் விலக்ஷணமான வடிவுடன்; கடலுள் பாற்கடலில்; உரம் தரு வலிமை மிக்க; மெல் அணை மிருதுவான சேஷசயனத்திலே; பள்ளி கொண்டான் சயனித்திருந்தவனும்; வரம் தரும் மா மணி விரும்பும் வரம் அருளும்; வண்ணன் நீல நிறமுள்ள; இடம் பெருமானுக்கு இருப்பிடம்; மணி மாடங்கள் ரத்நமயமான மாடங்கள்; சூழ்ந்து சூழ்ந்த; அழகு ஆய கச்சி அழகிய காஞ்சீபுரத்தில்; முன நாள் முன்பொருசமயம்; மண்ணையில் மண்ணை என்னும் படைவீட்டில்; நிரந்தவர் சத்ருக்களை; புண் நுகர் வேல் மாம்ஸத்தை புஜிக்கும் வேலின்; நெடு வாயில் உக வாயில் வீழ்த்தி அழித்த; செருவில் பரந்தவன் கொடிய யுத்தத்தில்; பல்லவர் கோன் வென்ற பல்லவ அரசன்; பணிந்த வணங்கும்; பரமேச்சுரவிண்ணகரம் அதுவே அதுவே பரமேச்சுரவிண்ணகரம்
munnam oru kAl Once, previously; mA uruvAy having a distinguished form; kadaluL in thiruppARkadal; uram tharum strong; mel tender; aNai on thiruvananthAzhwAn; paLLi koNdAn being the one who mercifully rested; varam tharum one who fulfils (everyone-s) desires; mA maNi like a chinthAmaNi (touchstone); vaNNan for the one who is having the nature; idam abode; maNi filled with gems; mAdangaL sUzhndhu surrounded by mansions; azhagAya kachchi in the beautiful kAnchIpuram town; maNNaiyil in the capital city named maNNai; nirandhavar enemies; puN flesh; nugar consuming; vEl spear-s; neduvAyil in the huge mouth; uga to have (them) destroyed; muna nAL previously; seruvil in the battle; parandhavan one who engaged fully; pallavarkOn pallava king; paNindha surrendered; paramEchchura viNNagaram paramESvara viNNagaram

PT 2.9.4

1131 அண்டமும்எண்திசையும்நிலனும்
அலைநீரொடுவான்எரிகால்முதலா
உண்டவன் * எந்தைபிரானதுஇடம்
ஒளிமாடங்கள்சூழ்ந்துஅழகாயகச்சி *
விண்டவர்இண்டைக்குழாமுடனே
விரைந்தார்இரியச்செருவில்முனைந்து *
பண்டுஒருகால்வளைத்தான்பணிந்த
பரமேச்சுரவிண்ணகரமதுவே.
1131 அண்டமும் எண் திசையும் நிலனும் *
அலை நீரொடு வான் எரி கால் முதலா *
உண்டவன் எந்தை பிரானது இடம் *
-ஒளி மாடங்கள் சூழ்ந்து அழகு ஆய கச்சி **
விண்டவர் இண்டைக் குழாமுடனே *
விரைந்தார் இரியச் செருவில் முனிந்து *
பண்டு ஒருகால் வளைத்தான் பணிந்த *
பரமேச்சுரவிண்ணகரம்-அதுவே-4 **
1131
aNdamum eNthisaiyum nNilaNnum * alainNeerodu vān erikālmudhalā uNdavan *
enNdhaipirānathu idam * oLi mādangkaL soozhnNdhu azhagāyakacchi *
viNdavar iNdaikkuzhāmudaNnE * virainNdhār iriyaccheruvilmunainNdhu *
paNdorukāl vaLaiththān paNinNdha * paramEcchura viNNagaramadhuvE. 2.9.4

Ragam

யமுனாகல்யாணி

Thalam

ஜம்பை

Bhavam

Self

Simple Translation

1131. My father who swallowed the earth, the eight directions, the sky, the oceans with waves, fire and wind stays in sacred Paramechura Vinnagaram temple in beautiful Kachi filled with shining palaces where the Pallava king who bent his bow and made his enemies retreat from the battlefield worshiped him.

Word by word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion. Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
அண்டமும் அண்டங்களும்; எண் திசையும் எட்டு திசைகளும்; நிலனும் அலை நீரொடு பூமி அலைகடல்; வான் ஆகாசம்; எரி கால் அக்நி காற்று; முதலா ஆகியவற்றை பிரளயகாலத்தில்; உண்டவன் உண்டவனான; எந்தை பிரானது இடம் எம்பெருமானிருக்குமிடம்; ஒளி மாடங்கள் சூழ்ந்து ஒளிமயமான மாடங்கள் சூழ்ந்த; அழகு ஆய கச்சி அழகிய காஞ்சீபுரத்தில்; பண்டு ஒரு கால் முன்னொரு காலத்தில்; செருவில் போர்க்களத்தில்; விரைந்தார் சண்டை செய்ய விரைந்து வந்த; விண்டவர் இண்டை பகைவர்களுடைய திரண்ட; குழாமுடனே கூட்டத்தோடு; இரிய சிதறியோடும்படி; முனிந்து சீறி; வளைத்தான் வில்லைவளைத்தவனான பல்லவராஜன்; பணிந்த வணங்கிய; பரமேச்சுரவிண்ணகரம் அதுவே அதுவே பரமேச்சுரவிண்ணகரம்
aNdamum oval shaped universes; eNdhisaiyum eight directions; nilanum earth; alai rising waves; nIrodu oceans; vAn sky; eri fire; kAl air; mudhalA etc; uNdavan one who mercifully consumed; endhai pirAnadhu for one who is my clan-s lord; idam abode; oLi shining; mAdangaL by mansions; sUzhndhu surrounded; azhagAya beautiful; kachchi in kAnchIpuram town; seruvil in battle; viraindhArudanE with those who rushed towards; viNdavar of the enemies; iNdai gathered; kuzhAm crowd; iriya to break and disperse; munindhu showed anger; paNdu orukAl previously; vaLaiththAn pallava king who launched his bow; paNindha surrendered; paramEchchura viNNagaram paramESvara viNNagaram

PT 2.9.5

1132 தூம்புடைத்திண்கைவன்தாள்களிற்றின்
துயர்தீர்த்து, அரவம்வெருவ * முனநாள்
பூம்புனல்பொய்கைபுக்கானவனுக்குஇடந்தான்
தடம்சூழ்ந்துஅழகாயகச்சி *
தேம்பொழில்குன்றெயில்தென்னவனைத்
திசைப்பச்செருமேல்வியந்துஅன்றுசென்ற *
பாம்புடைப்பல்லவர்கோன்பணிந்த
பரமேச்சுரவிண்ணகரமதுவே.
1132 தூம்பு உடைத் திண் கை வன் தாள் களிற்றின் *
துயர் தீர்த்து அரவம் வெருவ * முன நாள்
பூம் புனல் பொய்கை புக்கான்-அவனுக்கு *
இடம்-தான்-தடம் சூழ்ந்து அழகு ஆய கச்சி **
தேம் பொழில் குன்று எயில் தென்னவனைத் *
திசைப்பச் செருமேல் வியந்து அன்று சென்ற *
பாம்பு உடைப் பல்லவர்-கோன் பணிந்த *
பரமேச்சுரவிண்ணகரம்-அதுவே-5 **
1132
thoombudaith thiNkaivan thāLkaLiRRiNn * thuyartheerthu aravamveruva *
munanNāL poombunal poygai pukkānavaNnukku idanNdhāNn * thadamchoozhnNdhu azhagāyakacchi *
thEmbozhil kunReyil thennavaNnaith * thisaippac cherumEl viyanNdhanRuchenRa *
pāmbudaip pallavarkOn paNinNdha * paramEcchura viNNagaramadhuvE. 2.9.5

Ragam

யமுனாகல்யாணி

Thalam

ஜம்பை

Bhavam

Self

Simple Translation

1132. Our lord who saved the long-trunked elephant Gajendra from the crocodile that caught it when it went to get flowers in the pond, and who entered the water and danced on the heads of the snake Kālingan stays in sacred Paramechura Vinnagaram temple in beautiful Kachi filled with lovely palaces where the Pallava king who fought and conquered the Pandyan king of the southern land surrounded with hill-like forts and groves dripping with honey worshiped him.

Word by word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion. Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
முன நாள் முன்பொரு சமயம்; தூம்பு உடைத் திண் கை துதிக்கையையும்; வன் தாள் வலிமையான கால்களையுமுடைய; களிற்றின் துயர் கஜேந்திரனின் துயர்; தீர்த்து தீர்த்தவனும்; பூம் புனல் பொய்கை அழகிய பொய்கையிலே; அரவம் வெருவ காளிய நாகம் அஞ்சும்படியாக; புக்கான் அவனுக்கு பாய்ந்தவனுமான எம்பெருமான்; இடம் தான் இருக்குமிடம்; தடம் சூழ்ந்து தடாகங்கள் சூழ்ந்த; அழகு ஆய கச்சி அழகிய காஞ்சீபுரத்தில்; தேம் பொழில் தேன் நிறைந்த சோலைகளையும்; குன்று எயில் மலைபோன்ற மதிள்களையுமுடைய; தென்னவனை பாண்டிய நாட்டின் அரசன்; திசைப்ப அன்று அறிவு கலங்கும்படி முன்பு; செருமேல் போர்க்களத்திலே; வியந்து சென்ற விருப்பத்துடனே போய்ச் சேர்ந்தவனும்; பாம்பு உடை நாகத்தைக் கொடியாகவுடையவனுமான; பல்லவர் கோன் பணிந்த பல்லவ அரசன் வணங்கிய; பரமேச்சுரவிண்ணகரம் அதுவே அதுவே பரமேச்சுரவிண்ணகரம்
thUmbudai having hole; thiN strong; kai trunk; val strong; thAL leg; kaLiRRin SrI gajEndhrAzhwAn-s; thuyar sorrow; thIrththu eliminated; aravam kALiya, the snake; veruva to fear; muna nAL previously; pUm punal poygai into the pond which is filled with beautiful water; pukkAnavanukku for the one who jumped; idam abode; thadam by ponds; sUzhndhu surrounded by; azhagAya kachchi in beautiful kAnchIpuram; thEn having honey; pozhil garden; kunRu like a mountain; eyil having fort; thennavan pANdiyan; thisaippa to become bewildered; anRu previously; seru mEl in battle; viyandhu with great desire; senRa who arrived; pAmbu udai having snake as his flag; pallavarkOn pallava king; paNindha surrendered; paramEchchura viNNagaram paramESvara viNNagaram

PT 2.9.6

1133 திண்படைக்கோளரியின்உருவாய்த்
திறலோனகலம்செருவில்முனநாள் *
புண்படப்போழ்ந்தபிரானதுஇடம்
பொருமாடங்கள்சூழ்ந்துஅழகாயகச்சி *
வெண்குடைநீழல்செங்கோல்நடப்ப
விடைவெல்கொடிவேற்படைமுன்உயர்த்த *
பண்புடைப்பல்லவர்கோன்பணிந்த
பரமேச்சுரவிண்ணகரமதுவே.
1133 திண் படைக் கோளரியின் உரு ஆய்த் *
திறலோன் அகலம் செருவில் முன நாள் *
புண் படப் போழ்ந்த பிரானது இடம்- *
பொரு மாடங்கள் சூழ்ந்து அழகு ஆய கச்சி **
வெண் குடை நீழல் செங்கோல் நடப்ப *
விடை வெல் கொடி வேல்-படை முன் உயர்த்த *
பண்பு உடைப் பல்லவர்-கோன் பணிந்த *
பரமேச்சுரவிண்ணகரம்-அதுவே-6 **
1133
thiNpadaikkOLariyin uruvāy * thiRalOnagalam seruvilmunanNāL *
puNpadap pOzhnNdha pirānadhidam * borumādangkaL soozhnNdha azhagāyakacchi *
veNkudai nNeezhal seNGkOl nNadappa * vidaivelkodi vElpadai mun_uyarttha *
paNbudaip pallavarkOn paNinNdha * paramEcchura viNNagaramadhuvE. 2.9.6

Ragam

யமுனாகல்யாணி

Thalam

ஜம்பை

Bhavam

Self

Simple Translation

1133. Our lord who fought with Hiranyan in the form of a man-lion, splitting open and wounding the powerful chest of the Rākshasa, stays in sacred Paramechura Vinnagaram in beautiful Kachi filled with lovely palaces worshiped by the famous Pallava king who rules with his scepter and his white umbrella that casts a shadow and his army that marches carrying spears and victorious bull banners to conquer their enemies.

Word by word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion. Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
முன நாள் முன்பொரு சமயம்; திண் படை கூறிய நகங்களை ஆயுதமாக உடைய; கோளரியின் உரு ஆய் நரசிம்மமாகத் தோன்றி; செருவில் யுத்தத்தில்; திறலோன் அகலம் இரணியனின் மார்பை; புண் படப் போழ்ந்த புண் படும்படி பிளந்த; பிரானது இடம் எம்பெருமான் இருக்குமிடம்; பொரு மாடங்கள் அருகருகே இருக்கும் மாடங்கள்; சூழ்ந்து சூழ்ந்த; அழகு ஆய கச்சி அழகிய காஞ்சீபுரத்தில்; வெண் குடை நீழல் வெண்கொற்ற குடையின் கீழே; செங்கோல் நடப்ப ஆட்சி செலுத்திய; விடை வெல் கொடி பாம்புக் கொடியையும்; வேல் படை வேலாயுதத்தையும் படை முன்; உயர்த்த உயர்த்த; பண்பு உடை நற்பண்பு உடையவனான; பல்லவர் கோன் பணிந்த பல்லவ அரசன் வணங்கிய; பரமேச்சுரவிண்ணகரம் அதுவே அதுவே பரமேச்சுரவிண்ணகரம்
thiN strong (divine nail); padai weapon; kOL having strength; ariyin uruvAy being in the form of narasimha; thiRalOn very strong hiraNya-s; agalam chest; muna nAL previously; seruvil in battle; puN pada to become wounded; pOzhndha split; pirAnadhu for the benefactor; idam abode; poru joined with each other; mAdangaL sUzhndhu azhagAya kachchi beautiful kAnchIpuram surrounded by mansions; veN kudai nIzhal under the white umbrella signifying being an emperor; sengOl nadappa having his orders carried out; vel showing victory; vidaik kodi snake flag; vEl spear; padai mun in front of the army; uyarththa one who raised high; paNbu udai having beautiful nature; pallavarkOn pallava king; paNindha surrendered; paramEchchura viNNagaram paramESvara viNNagaram

PT 2.9.7

1134 இலகியநீள்முடிமாவலிதன்பெருவேள்வியில்
மாணுருவாய், முனநாள் *
சலமொடுமாநிலங்கொண்டவனுக்குஇடந்தான்
தடம்சூழ்ந்துஅழகாயகச்சி *
உலகுடைமன்னவன்தென்னவனைக்
கன்னிமாமதிள்சூழ்கருவூர்வெருவ *
பலபடைசாயவென்றான்பணிந்த
பரமேச்சுரவிண்ணகரமதுவே.
1134 இலகிய நீள் முடி மாவலி-தன் *
பெரு வேள்வியில் மாண் உரு ஆய் முன நாள் *
சலமொடு மா நிலம் கொண்டவனுக்கு *
இடம்-தான்-தடம் சூழ்ந்து அழகு ஆய கச்சி **
உலகு உடை மன்னவன் தென்னவனைக் *
கன்னி மா மதிள் சூழ் கருவூர் வெருவ *
பல படை சாய வென்றான் பணிந்த *
பரமேச்சுரவிண்ணகரம்-அதுவே-7 **
1134
ilagiya nNeeLmudi māvali thanperuvELviyil * māNuruvāy munanNāL *
salamodu mānNilaNG koNdavaNnukku idanNdhāNn * thadam choozhnNdhu azhagāyakacchi *
ulagudai mannavan thennavaNnai * kanni māmadhiLsoozh karuvoorveruva,
palapadai sāyavenRān paNinNdha * paramEcchura viNNagaramadhuvE. 2.9.7

Ragam

யமுனாகல்யாணி

Thalam

ஜம்பை

Bhavam

Self

Simple Translation

1134. Our god who went as a dwarf and took the earth and the sky by tricking Mahābali, the king who wore a shining crown, stays in sacred Paramechura Vinnagaram temple in beautiful Kachi where the Pallava king, the ruler of the whole world, who fought and conquered the southern Pandyan king in Karuvur surrounded with strong forts, worshiped him.

Word by word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion. Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
இலகிய நீள் முடி பிரகாசமான கிரீடத்தையுடைய; மாவலி தன் மகாபலியின்; பெரு வேள்வியில் பெரிய யாகத்தில்; மாண் உருவாய் வாமன உருவாய்; முன நாள் முன்பொரு சமயம்; சலமொடு கபடமாக; மா நிலம் உலகத்தையெல்லாம்; கொண்டவனுக்கு ஆக்ரமித்துக்கொண்ட பெருமானுக்கு; இடம் தான் இருப்பிடம்; தடம் சூழ்ந்து தடாகங்கள் சூழ்ந்த; அழகு ஆய கச்சி அழகிய காஞ்சீபுரத்தில்; கன்னி மா பெரிய; மதிள் சூழ் மதிள்களாலே சூழப்பட்ட; கருவூர் கருவூர் நகரம் நிலை; வெருவ கலங்கவும்; பல படை சதுரங்க ஸேனை; சாய முடியும்படியாகவும்; உலகு உடை உலகங்களை அடிமையாகவுடைய; மன்னவன் வென்றான் பாண்டியனை வென்ற; தென்னவனை பணிந்த பல்வவன் வணங்கிய; பரமேச்சுரவிண்ணகரம் அதுவே அதுவே பரமேச்சுரவிண்ணகரம்
ilagiya shining; nIL tall; mudi having crown; mAvali than mahAbali-s; peru vELviyil in the great yAgam; mAN uruvAy being in the form of vAmana [dwarf]; muna nAL previously; mA vast; nilam earth; salamodu with water; koNdavanukku for the one who accepted and measured; idam thAn abode; thadam sUzhndhu azhagAya kachchi beautiful kAnchIpuram surrounded by ponds; kanni eternal; mA madhiL with huge forts; sUzh surrounded by; karuvUr karuvUr; veruva to fear; pala padai four types of armies; sAya to be finished; ulagudai for the whole world; mannavan the king; thennavanai pANdiyan; venRAn one who defeated; paNindha surrendered; paramEchchura viNNagaram paramESvara viNNagaram

PT 2.9.8

1135 குடைத்திறல்மன்னவனாய் ஒருகால்
குரங்கைப்படையா * மலையால்கடலை
யடைத்தவன்எந்தைபிரானதுஇடம்
மணிமாடங்கள்சூழ்ந்துஅழகாயகச்சி *
விடைத்திறல்வில்லவன்நென்மெலியில்
வெருவச்செருவேல்வலங்கைப்பிடித்த *
படைத்திறல்பல்லவர்கோன்பணிந்த
பரமேச்சுரவிண்ணகரமதுவே.
1135 குடைத் திறல் மன்னவன் ஆய் ஒருகால் *
குரங்கைப் படையா * மலையால் கடலை
அடைத்தவன் எந்தை பிரானது இடம்- *
மணி மாடங்கள் சூழ்ந்து அழகு ஆய கச்சி **
விடைத் திறல் வில்லவன் நென்மெலியில் *
வெருவச் செரு வேல் வலங் கைப் பிடித்த *
படைத் திறல் பல்லவர்-கோன் பணிந்த *
பரமேச்சுரவிண்ணகரம்-அதுவே-8 **
1135
kudaitthiRal mannavaNnāy * orukāl kuraNGgaippadaiyā *
malaiyālkadalai adaitthavaNn enNdhaipirānadhu idam * maNi mādangkaL soozhnNdhu azhagāyakacchi *
vidaitthiRal villavan nNenmeliyil * veruvaccheruvEl valaNGkaippidittha,
padaitthiRal pallavarkOn paNinNdha * paramEcchura viNNagaram adhuvE. 2.9.8

Ragam

யமுனாகல்யாணி

Thalam

ஜம்பை

Bhavam

Self

Simple Translation

1135. Our god who, as Rāma, gathered a monkey army and made a bridge on the ocean stays in sacred Paramechura Vinnagaram in beautiful Kachi filled with palaces studded with diamonds where the Pallava king who raised his spear in his right hand and fought mightily in Nenmeli, making his enemy Villavan retreat from the battlefield, worshiped him.

Word by word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion. Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
குடைத் திறல் வெண் கொற்றக்குடையையும்; மன்னவன் ஆய் மிடுக்கையுமுடைய ராமனாய்; ஒரு கால் முன்னொரு காலத்தில்; குரங்கைப் வாநரங்களைப்; படையா படையாகக் கொண்டு; மலையால் கடலை மலைகளினால் கடலை; அடைத்தவன் அணைகட்டி அடைத்தவனான; எந்தை பிரானது இடம் எம்பெருமானுக்கு இருப்பிடம்; மணி மாடங்கள் ரத்தினங்களாலான மாடங்கள்; சூழ்ந்த சூழ்ந்த; அழகு ஆய கச்சி அழகிய காஞ்சீபுரத்தில்; விடைத் திறல் காளையின் மிடுக்கையுடைய; நென்மெலியில் நென்மெலி யென்னும் படைவீட்டையுமுடைய; வில்லவன் வில்லவனென்கிற அரசன்; வெருவ அஞ்சி நடுங்கும்படி யுத்தத்திற்குத் தேவையான; செரு வேல் வேல் படையை அஞ்சும்படி; வலங் கைப் பிடித்த வலக்கையிலே பிடித்தவனும்; படை ஆயதங்களை ஆளத்தக்க; திறல் மிடுக்கை யுடையனுமான; பல்லவர் கோன் பணிந்த பல்லவ அரசன் வணங்கிய; பரமேச்சுரவிண்ணகரம் அதுவே அதுவே பரமேச்சுரவிண்ணகரம்
kudai white victorious umbrella; thiRal having strength; mannavanAy being chakravarthith thirumagan (son of emperor dhaSaratha); orukAl when rAvaNa separated pirAtti; kurangai monkeys; padaiyA having as army; malaiyAl with rocks; kadalai ocean; adaiththavan one who stopped (built bridge); endhai pirAnadhu for my clan-s lord; idam abode; aNi beautiful; mAdangaL sUzhndhu azhagAya kachchi beautiful kAnchIpuram surrounded by mansions; vidai like a bull; thiRal having strength; nenmeliyil and being the one who has capital city named nenmeli; villavan king named villavan; veruva to fear; seru weapon for battle; vEl spear; valangaip pidiththa one who held in his right hand; padai to handle weapons; thiRal one has the strength; pallavarkOn pallava king; paNindha surrendered; paramEchchura viNNagaram paramESvara viNNagaram

PT 2.9.9

1136 பிறையுடைவாணுதல்பின்னைதிறத்து முன்னே
ஒருகால்செருவில்லுருமின் *
மறையுடைமால்விடையேழடர்த்தாற்கிடந்தான்
தடம்சூழ்ந்துஅழகாயகச்சி *
கறையுடைவாள்மறமன்னர்கெடக்
கடல்போலமுழங்கும்குரல்கடுவாய் *
பறையுடைப்பல்லவர்கோன்பணிந்த
பரமேச்சுரவிண்ணகரமதுவே.
1136 பிறை உடை வாள் நுதல் பின்னைதிறத்து * முன்னே
ஒருகால் செருவில் உருமின் *
மறை உடை மால் விடை ஏழ் அடர்த்தாற்கு * இடம்-தான்
தடம் சூழ்ந்து அழகு ஆய கச்சி **
கறை உடை வாள் மற மன்னர் கெடக் *
கடல்போல முழங்கும் குரல் கடுவாய் *
பறை உடைப் பல்லவர்-கோன் பணிந்த *
பரமேச்சுரவிண்ணகரம்-அதுவே-9 **
1136
piRaiyudai vāNudhal pinnai thiRatthu * munnE oru kālseruvil urumin *
maRaiyudai mālvidaiyEzhadarththāRku idanNdhān * thadam choozhnNdha azhagāyakacchi *
kaRaiyudaivāL maRamannarkeda * kadalpOl muzhangkum kuralkaduvāy *
paRaiyudaip pallavarkOn paNinNdha * paramEcchura viNNagaramadhuvE. 2.9.9

Ragam

யமுனாகல்யாணி

Thalam

ஜம்பை

Bhavam

Self

Simple Translation

1136. Our lord who fought the strong, wicked seven bulls and conquered them for the sake of Nappinnai whose forehead shines like the crescent moon stays in the sacred Paramechura Vinnagaram temple in beautiful Kachi surrounded with ponds where the Pallava king with drums roaring in battle like the ocean who conquered heroic kings with blood-smeared swords worshiped the lord. .

Word by word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion. Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
பிறை உடை சந்திரனைப் போன்ற; வாள் நுதல் ஒளிமயமான நெற்றியையுடைய; பின்னை திறத்து நப்பின்னைக்காக; முன்னே ஒரு கால் முன்னொருகால்; செருவில் உருமின் போர்க்களத்தில் கர்ஜித்துக் கொண்டு; மறை உடை எதிர்த்து வரும்; மால் விடை ஏழ் பெரிய ஏழு ரிஷபங்களை; அடர்த்தாற்கு இடம் தான் அடக்கினவனுக்கு இருப்பிடம்; தடம் சூழ்ந்து தடாகங்கள் சூழ்ந்த; அழகு ஆய கச்சி அழகிய காஞ்சீபுரத்தில்; கறை உடை ரத்தக்கறை மாறாத; வாள் வாளை யுடையவர்களும்; மற மன்னர் கெட கோபமுடைய அரசர்களும் அழிய; கடல்போல முழங்கும் கடல்போலே கோஷம் எழுப்பும்; குரல் கடுவாய் குரலையும் கொடூரமான வாயையுடைய; பறை உடை பறைகளையும் உடைய; பல்லவர் கோன் பணிந்த பல்லவ அரசன் வணங்கிய; பரமேச்சுரவிண்ணகரம் அதுவே அதுவே பரமேச்சுரவிண்ணகரம்
piRai crescent like; vAL lustre; udai having; nudhal having forehead; pinnai thiRaththu for nappinaip pirAtti; munnE orukAl once previously; seruvil in battle; urumin thunder like voice; maRai enmity; udai having; mAl big; vidai Ezhu seven bulls; adarththARku for the one who killed; idam thAn sUzhndhu azhagAya kachchi beautiful kAnchIpuram surrounded by ponds, is the abode; kaRai udai having stains; vAL sword; maRam having great anger; mannar kings; keda to be destroyed; kadalpOl like ocean; muzhangum making belligerent noise; kural voice; kadu vAy having hard mouth; paRai a percussion instrument,; udai having; pallavarkOn pallava king; paNindha surrendered; paramEchchura viNNagaram paramESvara viNNagaram

PT 2.9.10

1137 பார்மன்னுதொல்புகழ்ப்பல்லவர்கோன்பணிந்த
பரமேச்சுரவிண்ணகர்மேல் *
கார்மன்னுநீள்வயல்மங்கையர்தம்தலைவன்
கலிகன்றிகுன்றாதுஉரைத்த *
சீர்மன்னுசெந்தமிழ்மாலைவல்லார்
திருமாமகள்தன் அருளால் * உலகில்
தேர்மன்னராய்ஒலிமாகடல்சூழ்
செழுநீருலகாண்டுதிகழ்வர்களே. (2)
1137 ## பார் மன்னு தொல் புகழ்ப் பல்லவர்-கோன்
பணிந்த * பரமேச்சுரவிண்ணகர்மேல் *
கார் மன்னு நீள் வயல் மங்கையர்-தம் தலைவன் *
கலிகன்றி குன்றாது உரைத்த **
சீர் மன்னு செந்தமிழ் மாலை வல்லார் *
திரு மா மகள்-தன் அருளால் * உலகில்
தேர் மன்னராய் ஒலி மா கடல் சூழ் *
செழு நீர் உலகு ஆண்டு திகழ்வர்களே-10 **
1137. ##
pārmannu tholpugazhp pallavarkOn paNinNtha * paramEcchura viNNagarmEl *
kārmannu nNeeLvayal mangkaiyar thaNndhalaivan * kalikanRi kunRādhu uraittha *
seermannu senNdhamizh mālai vallār * thirumāmagaL than aruLāl *
ulagil thErmannarāy olimākadal sooz * sezhunNeer ulagāNdu thigazhvargaLE. (2) 2.9.10

Ragam

யமுனாகல்யாணி

Thalam

ஜம்பை

Bhavam

Self

Simple Translation

1137. Kaliyan the chief of Thirumangai where fields flourish composed ten pāsurams on the god of Paramechura Vinnagaram temple where the famous Pallava king, the ruler of the world, worshiped the lord. If devotees learn and recite this wonderful garland of Tamil pāsurams they will shine as kings, possessing chariots and ruling the world surrounded by the roaring ocean by the grace of Lakshmi.

Word by word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion. Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
பார் மன்னு பூமியிலே நிலைத்து நின்ற; தொல் புகழ் பழைய புகழையுடைய; பல்லவர் கோன் பணிந்த பல்லவ அரசன் வணங்கிய; பரமேச்சுரவிண்ணகர்மேல் பரமேச்சுரவிண்ணகரைக் குறித்து; கார் மன்னு பெரிய கார் நெல்; நீள் வயல் வயல்களையுடைய; மங்கையர் தம் தலைவன் திருமங்கை நாட்டுத் தலைவன்; கலிகன்றி திருமங்கை ஆழ்வார்; குன்றாது உரைத்த குறையொன்றுமின்றி அருளிச்செய்த; சீர் மன்னு அழகிய குணங்களால் தொடுத்த; செந்தமிழ் மாலை செந்தமிழ் பாசுரங்களை; வல்லார் கற்பவர்கள்; திரு மா மகள் தன் அருளால் மஹாலக்ஷ்மியின் கிருபையினால்; உலகில் தேர் மன்னராய் உலகில் தேர் மன்னர்களாய்; ஒலி மா கடல் சூழ் சப்திக்கும் பெரிய கடலாலே சூழப்பட்ட; செழு நீர் உலகு செழிப்பான நீர்மையையுடைய உலகை; ஆண்டு திகழ்வர்களே ஆண்டு திகழ்வர்களே
pAr On earth; mannu firmly remained; thol ancient; pugazh having fame; pallavarkOn pallava king; paNindha surrendered; paramEchchura viNNagara mEl on paramESvara viNNagaram; kAr dark; mannu remaining firmly; niL vast; vayal having fertile field; mangaiyar tham for thirumangai region; thalaivan king; kalikanRi thirumangai AzhwAr; kunRAdhu not minimising any of the qualities; uraiththa mercifully spoke; sIr bhagavAn-s qualities; mannu remaining firm; sem beautiful; thamizh mAlai thamizh garland; vallAr those who can learn with meanings; thirumAmagaL than periya pirAttiyAr-s; aruLAl by mercy; ualagil in this world; thEr mahAratha (great charioteers); mannarAy being kings; oli resounding; mA kadal by huge ocean; sUzh being surrounded; sezhu beautiful; nIr having water; ulagu earth; ANdu rule over; thigazhvargaL will shine.