59

Thiru EvvuL

திருஎவ்வுள்

Thiru EvvuL

Punyāvrtha, Veekshāranya Kshetram, Thiruvallur

ஸ்ரீ கனகவல்லீ ஸமேத ஸ்ரீ வீரராகவாய நமஹ

Thayar: Sri Kanka Valli (Vasumathi)
Moolavar: Vaidya Veera Raghava Perumāl, Thiru Ev Vul Kidanthān
Utsavar: Sri Veera Raghavan
Vimaanam: Vijayakodi
Pushkarani: Hruthāpanāsini Pushkarini
Thirukolam: Sayana (Reclining)
Direction: East
Mandalam: Thondai Nādu
Area: Chennai
State: TamilNadu
Sampradayam: Vadakalai
Search Keyword: Thiruyevvul
Tamil
Simplified
English
Verse info
Synonyms
Translation

PT 2.2.1

1058 காசையாடைமூடியோடிக் காதல்செய்தானவனூர் *
நாசமாகநம்பவல்ல நம்பிநம்பெருமான் *
வேயினன்னதோள்மடவார் வெண்ணெயுண்டான் இவனென்று *
ஏசநின்றஎம்பெருமான் எவ்வுள்கிடந்தானே. (2)
1058 ## காசை ஆடை மூடி ஓடிக் * காதல் செய்தான் * அவன் ஊர்
நாசம் ஆக நம்ப வல்ல * நம்பி நம் பெருமான் **
வேயின் அன்ன தோள் மடவார் * வெண்ணெய் உண்டான் இவன் என்று *
ஏச நின்ற எம் பெருமான் * எவ்வுள் கிடந்தானே-1
1058. ##
kāsaiyādai moodiyOdik * kādhal seydhān avanoor *
nāsamāga nambavalla * nambi namberumān *
vEyinannathOL madavār * veNNeyuNdān ivanenRu *
EsanNinRa emberumāNn * evvuL kidanNdhānE * (2) 2.2.1

Ragam

கமாஸ்

Thalam

ஜம்பை

Bhavam

Self

Divya Desam

Simple Translation

1058. When the Rākshasa king of Lankā came as a sage in orange clothes and took Sita the wife of Rāma to Lankā, our Nambi went to Lankā, fought with its king, destroyed it and brought his wife Sita back. The beautiful cowherd women with round bamboo-like arms scolded him saying, “You stole our butter and ate it. You are a thief. ” He rests on a snake bed on the ocean in Thiruyevvul.

Word by word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion. Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
காசை காஷாய; ஆடை ஆடையினால்; மூடி உடம்பை மறைத்துக்கொண்டு; ஓடி ஓடி வந்து; காதல் ஸீதா தேவியிடம்; செய்தான் காதல் கொண்ட; அவன் ஊர் இராவணனின் இலங்கையை; நாசம் ஆக நாசமாக்கும்; நம்ப வல்ல நம்பி சக்தி படைத்த; நம் பெருமான் நம் பெருமான்; வேயின்அன்ன மூங்கில் போன்ற; தோள் தோள்களையுடைய; மடவார் ஆய்ச்சியர்; வெண்ணெய் வெண்ணெய்; உண்டானிவன் என்று உண்டானிவன் என்று; ஏச நின்ற ஏச நின்ற; எம்பெருமான் எம்பெருமான்; எவ்வுள் திருவள்ளூரில்; கிடந்தானே பள்ளிகொண்டுள்ளார்
kAsai Adai with saffron cloth; mUdi covering (the body); Odi rushed to (the hermitage); kAdhal seydhAn one who had desire (towards pirAtti); avan that rAvaNa-s; Ur town; nAsamAga vowing to destroy; namba valla one who was able to complete the task; nambi one who is complete with vIraSrI (the wealth of valour); nam perumAn being our lord; vEy anna like bamboo; thOL shoulders; madavAr gOpikAs having humility, their; veNNey butter; ivan uNdAn enRu saying -he ate-; Esa ninRa to be mercifully present to have the gOpikAs make fun of him; emperumAn my lord; evvuL in this dhivyadhESam [divine abode] named thiruvevvuL; kidandhAn mercifully reclined.

PT 2.2.2

1059 தையலாள்மேல்காதல்செய்த தானவன்வாளரக்கன் *
பொய்யிலாதபொன்முடிகள் ஒன்பதோடொன்றும் * அன்று
செய்தவெம்போர்தன்னில் அங்கோர்செஞ்சரத்தால்உருள *
எய்தஎந்தைஎம்பெருமான் எவ்வுள்கிடந்தானே.
1059 தையலாள்மேல் காதல் செய்த * தானவன் வாள் அரக்கன் *
பொய் இலாத பொன் முடிகள் * ஒன்பதோடு ஒன்றும் ** அன்று
செய்த வெம் போர் தன்னில் * அங்கு ஓர் செஞ்சரத்தால் உருள *
எய்த எந்தை எம் பெருமான் * எவ்வுள் கிடந்தானே-2
1059
thaiyalāL mEl kādhal seydha * dhānavan vāLarakkan *
poyyilādha ponmudigaL * onbadhOdu onRum *
anRuseydha vembOr thannil * angku Or seNYcharatthāl uruLa *
eydha enNdhai emberumāNn * evvuL kidanNdhānE * 2.2.2

Ragam

கமாஸ்

Thalam

ஜம்பை

Bhavam

Self

Divya Desam

Simple Translation

1059. When the Rākshasa king loved Rāma's beautiful wife Sita and took her to Lankā, our father, our dear lord went to Lankā, shot his arrows, and fought a cruel war with their king Rāvana, making his faultless ten heads crowned with golden crowns fall to the earth. He rests on his snake bed on the ocean in Thiruyevvul.

Word by word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion. Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
தையலாள் மேல் ஸீதாதேவியை; காதல் செய்த காதலித்த; தானவன் அரக்கனான; வாள் வாளையுடைய; அரக்கன் ராவணனின்; பொய் இலாத உண்மையான; பொன் முடிகள் கிரீடங்கள்; ஒன்பதோடு ஒன்றும் அன்று பத்தையும் அன்று; செய்த வெம் இலங்கையில் நடந்த; போர் தன்னில் கடும் போரில்; அங்கு ஓர் செஞ் ஓர் ஒப்பற்ற; சரத்தால் சிவந்த பாணத்தினாலே; உருள எய்த உருளச் செய்த; எம்பெருமான் எம்பெருமான்; எவ்வுள் திருவள்ளூரில்; கிடந்தானே பள்ளிகொண்டுள்ளான்
thaiyalAL mEl towards pirAtti who has natural femininity; kAdhal seydha one who showed desire; thAnavan demoniac person; vAL one who had sword as his protection; arakkan rAvaNa-s; poy ilAdha true; pon mudigaL heads with golden crowns; onbadhOdu onRum ten; anRu the day when rAvaNa imprisoned pirAtti; seydha performed; vem cruel; pOr thannil honest battle; Or matchless; sem reddish (due to spitting flames); saraththAl by killer arrow; uruLa to fall down as pieces; eydha one who shot; endhai being my father; emperumAn my lord; evvuL in thiruvevvuL; kidandhAn mercifully reclined.

PT 2.2.3

1060 முன்ஓர்தூது வானரத்தின்வாயில்மொழிந்து * அரக்கன்
மன்னூர்தன்னை வாளியினால்மாளமுனிந்து * அவனே
பின்ஓர்தூது ஆதிமன்னர்க்காகி, பெருநிலத்தார் *
இன்னார்தூதனெனநின்றான் எவ்வுள்கிடந்தானே.
1060 முன் ஓர் தூது * வானரத்தின் வாயில் மொழிந்து * அரக்கன்
மன் ஊர் தன்னை * வாளியினால் மாள முனிந்து ** அவனே
பின் ஓர் தூது * ஆதி மன்னர்க்கு ஆகி பெருநிலத்தார் *
இன்னார் தூதன் என நின்றான் * எவ்வுள் கிடந்தானே-3
1060
mun Or dhoodhu * vānaratthinvāyil mozhinNdhu * arakkan
mannoor thannai * vāLiyināl māLa muninNdhu * avanE
pinnOr dhoodhu * Adhimannarkkāgip perunNilatthār *
innār dhoodhaNnena nNinRān * evvuL kidandhānE * 2.2.3

Ragam

கமாஸ்

Thalam

ஜம்பை

Bhavam

Self

Divya Desam

Simple Translation

1060. When Rāma sent Hanuman to Lankā as a messenger and Rāvana did not send Sita back, he became enraged at the Raksaksas and went to Lankā and destroyed it with his arrows. He went to Duryodhanā for the Pāndavās and so he is praised by the world as the messenger of Pāndavās. He rests on his snake bed on the ocean in Thiruyevvul.

Word by word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion. Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
முன் ஓர் ராமாவதாரத்திலே; தூது தூதனான; வானரத்தின் அனுமன்; வாயில் வாயிலாக; மொழிந்து தூது சொல்லியனுப்பி; அரக்கன் அரக்கனான ராவணனின்; மன் ஊர் தன்னை இலங்கையை; வாளியினால் ஓர் அம்பினாலே; மாள மாண்டுபோகும்படி; முனிந்து சீறிமுடித்து; பின் பின்பு ஒரு சமயம்; அவனே கிருஷ்ணாவதாரத்தில்; ஆதி மன்னர்க்கு பாண்டவர்களுக்கு; ஓர் தூது ஆகி தூதனாகச் சென்று; பெருநிலத்தார் உலகத்திலுள்ளவர்கள் இவன்; இன்னார் தூதன் பாண்டவ தூதன்; என நின்றான் என்று சொன்ன கண்ணன்; எவ்வுள் திருவள்ளூரில்; கிடந்தானே பள்ளிகொண்டுள்ளார்
mun In SrIrAmAvathAram; Or matchless; thUdhu words to be conveyed; vAnaraththin thiruvadi-s (hanuman-s); vAyil through the mouth; mozhindhu informed and sent; arakkan rAvaNa, the demon; mannu remaining firmly; Ur thannai lankA; vALiyinAl with arrow; mALa to be destroyed; munindhu being the one who mercifully showed his anger; avanE that chakravarthi thiruamgan (divine son of emperor dhaSarathi) himself; pin in krishNAvathAram; Adhi mannarkku pANdavas who are the original kings; Or thUdhAgi being the [unique] messenger; peru nilaththAr the residents of this vast earth; innAr thUdhan ena to say that he is the messenger of pANdavas; ninRAn stood (in front of arjuna-s chariot); evvuL kidandhAnE reclined in thiruvevvuL

PT 2.2.4

1061 பந்தணைந்தமெல்விரலாள் பாவைதன்காரணத்தால் *
வெந்திறலேறேழும் வென்றவேந்தன், விரிபுகழ்சேர் *
நந்தன்மைந்தனாகவாகும் நம்பிநம்பெருமான் *
எந்தைதந்தைதம்பெருமான் எவ்வுள்கிடந்தானே.
1061 பந்து அணைந்த மெல் விரலாள் * பாவை தன் காரணத்தால்
வெந் திறல் ஏறு ஏழும் * வென்ற வேந்தன் விரி புகழ் சேர்
நந்தன் மைந்தன் ஆக ஆகும் * நம்பி நம் பெருமான்
எந்தை தந்தை தம் பெருமான் * எவ்வுள் கிடந்தானே-4
1061
panNdhaNainNdha melviralāL * pāvaithan kāraNatthāl *
venNdhiRalE EzhumvenRa * vEnNdhan viripugazhsEr *
nNanNdhan mainNdhaNnāgavāgum * nNambi nNamberumān *
enNdhai thanNdhai thamberumān * evvuL kidanNdhānE * 2.2.4

Ragam

கமாஸ்

Thalam

ஜம்பை

Bhavam

Self

Divya Desam

Simple Translation

1061. Our Nambi, our father, who was raised as a son by the famous Nandagopalan and fought with seven strong bulls, defeating them to marry Nappinnai who plays with a ball with her soft fingers rests on his snake bed on the ocean in Thiruyevvul.

Word by word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion. Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
பந்து பந்தை; அணைந்த வைத்திருக்கும்; மெல் மெல்லிய; விரலாள் விரல்களையுடைய; பாவை தன் காரணத்தால் நப்பின்னை நிமித்தமாக; வெந் திறல் கொடிய; ஏறு ஏழும் ஏழு ரிஷபங்களையும்; வென்ற வென்று முடித்த; வேந்தன் அரசனும்; விரி புகழ் சேர் பெரும் புகழ் பெற்ற; நந்தன் நந்தகோபனுக்கு; மைந்தன் ஆக குமாரனாக; ஆகும் அவதரித்த; நம்பி நம்பெருமான் நம்பெருமான்; எந்தை தந்தை தம் நம் குலத்துக்கே நாதனான; பெருமான் நம்பெருமானான அவன்; எவ்வுள் திருவள்ளூரில்; கிடந்தானே பள்ளிகொண்டுள்ளார்
pandhu ball; aNaindha having; mel tender; viralAL having fingers; pAvai than kAraNaththAl to attain nappinnaip pirAtti who has natural femininity; vem cruel; thiRal strong; ERu Ezhum seven bulls; venRa killed; vEndhan being the king; viri well known; pugazh sEr having fame; nandhan maindhanAga being SrI nandhagOpa-s divine son; Agum placing himself; nambi being full in all auspicious qualities; nam perumAn being our lord; endhai thandhai tham perumAn lord for our clan starting with me, my father and his father; evvuL kidandhAnE reclined in thiruvevvuL

PT 2.2.5

1062 பாலனாகிஞாலமேழும்உண்டு பண்டு ஆலிலைமேல் *
சாலநாளும்பள்ளிகொள்ளும் தாமரைக்கண்ணன், எண்ணில் *
நீலமார்வண்டுண்டுவாழும் நெய்தலந்தண்கழனி *
ஏலநாறும்பைம்புறவில் எவ்வுள்கிடந்தானே.
1062 பாலன் ஆகி ஞாலம் ஏழும் உண்டு * பண்டு ஆல் இலைமேல்
சால நாளும் பள்ளி கொள்ளும் * தாமரைக் கண்ணன் எண்ணில்
நீலம் ஆர் வண்டு உண்டு வாழும் * நெய்தல் அம் தண் கழனி
ஏலம் நாறும் பைம் புறவின் * எவ்வுள் கிடந்தானே-5
1062
bālanāgi NYālamEzhumuNdu * paNdu AlilaimEl *
sāla_nāLum paLLikoLLum * thāmaraik kaNNan_ eNNil *
neelamār vaNduNdu vāzhum * neythalanN dhaNgazhani *
ElanNāRum paimbuRavil * evvuL kidanNdhānE * 2.2.5

Ragam

கமாஸ்

Thalam

ஜம்பை

Bhavam

Self

Divya Desam

Simple Translation

1062. The lotus-eyed Kannan, who swallowed all the seven worlds at the end of the eon and lay as a baby on a banyan leaf for many ages, rests on his snake bed on the ocean in Thiruyevvul where bees with blue wings drink honey from neytal flowers and live on cool fields surrounded with fragrant groves.

Word by word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion. Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
பாலன் ஆகி சிறு குழந்தையாய்; ஞாலம்ஏழும் ஏழுஉலகங்களையும்; உண்டு வயிற்றில் வைத்து; பண்டு பிரளய காலத்தில்; ஆல் இலைமேல் ஆல் இலைமேல்; சால நாளும் பலகாலம்; பள்ளிகொள்ளும் சயனித்திருந்த; தாமரைக்கண்ணன் தாமரைக்கண்ணன்; எண்ணில் கணக்கற்ற; நீலம் ஆர் நெய்தற் பூவிலே; வண்டு உண்டு தேனைப்பருகி; வாழும் வாழும் வண்டுகள்; அம் தண் அழகிய குளிர்ந்த; நெய்தல் கழனி நெய்தல் கழனிகளையும்; ஏலம் நாறும் ஏலக்காய் மணம் கமழும்; பைம் புறவின் சோலைகளையமுடைய; எவ்வுள் திருவள்ளூரில்; கிடந்தானே பள்ளிகொண்டுள்ளார்
bAlanAgi as a small child; gyAlam Ezhum seven worlds; uNdu consumed; paNdu during the deluge; Alilai mEl on a banyan leaf; sAla nALum very long time; paLLi koLLum mercifully rested; eN il inconceivable; thAmaraik kaNNan lotus-eyed sarvESvaran; neelam blue coloured; vaNdu beetles; neydhal in water-lily; Ar being seated; uNdu drinking (the honey on it); vAzhum living; am beautiful; thaN cool; kazhani fertile fields; Elam fragrance; nARum blowing; pai vast; puRavil having gardens outside; evvuL kidandhAn reclined in thiruvevvuL

PT 2.2.6

1063 சோத்தநம்பியென்று தொண்டர்மிண்டித் தொடர்ந்தழைக்கும் *
ஆத்தனம்பிசெங்கணம்பி ஆகிலும்தேவர்க்கெல்லாம் *
மூத்தனம்பிமுக்கணம்பிஎன்று முனிவர்தொழுது
ஏத்தும் * நம்பிஎம்பெருமான் எவ்வுள்கிடந்தானே.
1063 சோத்தம் நம்பி என்று * தொண்டர் மிண்டித் தொடர்ந்து அழைக்கும்
ஆத்தன் நம்பி செங்கண் நம்பி * ஆகிலும் தேவர்க்கு எல்லாம் **
மூத்த நம்பி முக்கண் நம்பி என்று * முனிவர் தொழுது
ஏத்தும் * நம்பி எம் பெருமான் * எவ்வுள் கிடந்தானே-6
1063
sOttha nNambi enRu * thoNdar miNdith thodarnNdhazhaikkum *
āttha nambi sengkaNambi * āgilum dhEvarkkellām *
moottha nNambi mukkaNambiyenRu * munivarthozhudhEtthum *
nNambi emberumān * evvuL kidanNdhānE. 2.2.6

Ragam

கமாஸ்

Thalam

ஜம்பை

Bhavam

Self

Divya Desam

Simple Translation

1063. The lord whom devotees and sages joined together and praised saying, “O Nambi, we worship you. You are our ancient one. You have beautiful eyes. You are the antaryami of three-eyed Shivā himself!” rests on the snake bed on the ocean in Thiruyevvul.

Word by word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion. Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
தொண்டர் அடியார்கள்; மிண்டி போட்டியிட்டுக் கொண்டு; நம்பி! பெருமானே! உன்னை; சோத்தம் வணங்குகிறோம் என்று சொல்லி; தொடர்ந்து இடைவிடாமல்; அழைக்கும் துதிக்கும்; ஆத்தன் நம்பி நண்பனான நம்பி; செங்கண் செந்தாமரைக் கண்ணனாக; நம்பி ஆகிலும் இருக்கச் செய்தேயும்; தேவர்க்கு எல்லாம் தேவர்களுக்கெல்லாம்; மூத்த நம்பி முன்னே பிறந்த பிரமனுக்கும்; முக்கண் மூன்று கண்களையுடைய; நம்பி என்று சிவனுக்கும் அந்தர்யாமியானவன்; முனிவர் ஸநகர் போன்ற முனிவர்கள்; தொழுது வணங்கி; ஏத்தும் நம்பி துதிக்கும்படியாயுள்ள; எம்பெருமான் எம்பெருமான்; எவ்வுள் திருவள்ளூரில்; கிடந்தானே பள்ளிகொண்டுள்ளார்
thoNdar SrIvaishNavas who are ananyaprayOjanas (those who don-t expect any benefit other than kainkaryam]; miNdi densely gather; nambi Oh one who is complete with all auspicious qualities!; sOththam enRu saying -we worship you-; thodarndhu continuously; azhaikkum those who praise; Aththan nambi one who is complete in being most trustworthy; sengan nambi is complete with the beauty of his reddish eyes;; Agilum though he is like this; dhEvarkku ellAm for all the dhEvathAs; mUththa nambi for brahmA who was born before; mukkaN nambi saying -one who remains as antharyAmi of rudhra who has three eyes-; munivar sages such as sanaka et al; thozhudhu surrender; Eththum to praise; nambi one who is complete; emperumAn my lord; evvuL kidandhAnE is reclining in thiruvevvuL.

PT 2.2.7

1064 திங்களப்புவானெரிகாலாகி * திசைமுகனார்
தங்களப்பன்சாமியப்பன் பாகத்திருந்த * வண்டுண்
தொங்கலப்புநீண்முடியான் சூழ்கழல்சூடநின்ற *
எங்களப்பன்எம்பெருமான் எவ்வுள்கிடந்தானே.
1064 திங்கள் அப்பு வான் எரி கால் ஆகி * திசை முகனார்
தங்கள் அப்பன் சாமி அப்பன் * பாகத்து இருந்த வண்டு உண்
தொங்கல் அப்பு நீள் முடியான் * சூழ் கழல் சூடநின்ற
எங்கள் அப்பன் எம் பெருமான் * எவ்வுள் கிடந்தானே-7
1064
thingkaLappu vānerigālāgi * dhisaimuganār *
thangkaLappan sāmiyappan * pāgaththirunNdha *
vaNduN thongalappu nNeeNmudiyān * soozhgazhal soodanNinRa *
engkaLappaNn emberumān * evvuL kidanNdhānE * 2.2.7

Ragam

கமாஸ்

Thalam

ஜம்பை

Bhavam

Self

Divya Desam

Simple Translation

1064. Our father, creator of Nānmuhan on the lotus on his navel, is the moon, water, sky, fire and wind, and is praised by the Sama Vedā. The lord Shivā with mat-hair-Ganga on his head, who wears a nectar-dripping Konrai garland, also worships our Lord’s feet. He rests on the snake bed on the ocean in Thiruyevvul.

Word by word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion. Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
திங்கள் அப்பு சந்திரன் ஜலம்; வான் எரி ஆகாசம் அக்னி; கால் ஆகி வாயு ஆகியவற்றை சரீரமாயும்; திசைமுகனார் நான்முக பிரம்மாவுக்கு; தங்கள் அப்பன் தந்தையாயும்; சாமி ஸாமவேதத்தால் ஸ்தாபிக்கப்பட்ட; அப்பன் காரணபூதனானான எம்பெருமான்; பாகத்து தனது சரீரத்தின் ஒருபக்கத்திலே; இருந்த இருப்பவனாய்; வண்டு உண் வண்டுகள் நிறைந்த; தொங்கல் கொன்றை மாலையையும்; அப்பு கங்கா ஜலத்தையும்; நீள் முடியான் நீண்ட சடையிலுடைய சிவ பெருமான்; சூழ் கழல் உலகமெல்லாம் தாவி அளந்த விசாலமான எம்பெருமானின் திருவடிகளை; சூட தன் தலைமீது சூடி; நின்ற வணங்கச்செய்த; எங்கள் அப்பன் எங்கள் அப்பன்; எம்பெருமான் எம்பெருமான்; எவ்வுள் திருவள்ளூரில்; கிடந்தானே பள்ளிகொண்டுள்ளார்
thingaL moon; appu water; vAn ether; eri fire; kAl air, these four elements; Agi having as body (being the SarIri); thisai muganAr thangaL for four-headed brahmA; appan being the father; sAmi one who is revealed in sAma vEdham; appan being the cause; vaNdu beetles; uN drinking honey; thongal konRai garland; appu gangA water; nIL lengthy; mudi having in his matted hair; bAgaththu in one side of emperumAn-s divine form; irundhAn rudhra who is present; sUzh spreading everywhere in earth; kazhal divine feet; sUda to decorate (the head); ninRa one who stood; engaL appan being our father; emperumAn one who is our lord; evvuL kidandhAnE reclined in thiruvevvuL

PT 2.2.8

1065 முனிவன்மூர்த்திமூவராகி வேதம்விரித்துரைத்த
புனிதன் * பூவைவண்ணன் அண்ணல்புண்ணியன் விண்ணவர்கோன் *
தனியன்சேயன்தானொருவனாகிலும் தன்னடியார்க்கு
இனியன் * எந்தைஎம்பெருமான் எவ்வுள்கிடந்தானே.
1065 முனிவன் மூர்த்தி மூவர் ஆகி * வேதம் விரித்து உரைத்த
புனிதன் * பூவை வண்ணன் அண்ணல் * புண்ணியன் விண்ணவர்-கோன் **
தனியன் சேயன் தான் ஒருவன் ஆகிலும் * தன் அடியார்க்கு
இனியன் * எந்தை எம் பெருமான் * எவ்வுள் கிடந்தானே-8
1065
munivan moortthi moovarāgi * vEdham viritthuraittha
punidhan * poovai vaNNan aNNal * puNNiyan viNNavargOn *
thaniyan sEyan thānoruvanāgilum * thannadiyārkku
iniyan * enNdhai emberumān * evvuL kidanNdhānE. 2.2.8

Ragam

கமாஸ்

Thalam

ஜம்பை

Bhavam

Self

Divya Desam

Simple Translation

1065. The highest matchless king of the gods is all the three gods, pure, virtuous, a sage, unique, remote and colored like a kāyām flower. The lord who is sweet to all his devotees and taught the Vedās to the sages rests on the snake bed on the ocean in Thiruyevvul.

Word by word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion. Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
முனிவன் ஸ்ருஷ்டிக்க ஸங்கல்பித்தவனாய்; மூர்த்தி பிரமன் விஷ்ணு சிவன் என்ற; மூவர் ஆகி மும்மூர்த்தியாய்; வேதம் வேதப் பொருள்களை; விரித்து அனைவரும் அறியும்படி; உரைத்த கீதையில் அருளிச்செய்தவனும்; புனிதன் புனிதனும்; பூவை வண்ணன் காயாம்பூ நிறமுடையவனும்; அண்ணல் ஸ்வாமியும்; புண்ணியன் தர்மாத்மாவும்; விண்ணவர்கோன் நித்யஸூரிகளுக்குத் தலைவனும்; தனியன ஒப்பற்றவனும்; சேயன் யோகிகளும் அறிய முடியாத; தான் ஒருவன் ஆகிலும் அத்விதீயனாக இருந்தாலும்; தன் அடியார்க்கு தன் அடியவர்களுக்கு; இனியன் நல்லவனாய்; எந்தை என் தந்தை; எம்பெருமான் எம்பெருமான்; எவ்வுள் திருவள்ளூரில்; கிடந்தானே பள்ளிகொண்டுள்ளார்
munivan one who vowed to create; mUrththi mUvar Agi being brahmA, vishNu and rudhra; vEdham meanings of vEdham; viriththu to make everyone know; uraiththa one who mercifully explained in SrI gIthA; punidhan having purity; pUvai like kAyAm pU (dark coloured flower); vaNNan having divine complexion; aNNal being lord; puNNiyan being greatly magnanimous; viNNavar for nithyasUris; kOn being the leader; thaniyan being matchless; sEyan being difficult to be known even by yOgis; thAn oruvan Agilum though he remains distinguished (in this manner); than adiyArkku for those who are surrendered unto him; iniyan being good; endhai being my father; emperumAn being my lord; evvuL kidandhAnE reclined in thiruvevvuL

PT 2.2.9

1066 பந்திருக்கும்மெல்விரலாள் பாவைபனிமலராள் *
வந்திருக்கும்மார்வன்நீல மேனிமணிவண்ணன் *
அந்தரத்தில்வாழும் வானோர்நாயகனாயமைந்த *
இந்திரற்கும்தம்பெருமான் எவ்வுள்கிடந்தானே.
1066 பந்து இருக்கும் மெல் விரலாள் * பாவை பனி மலராள்
வந்து இருக்கும் மார்வன் * நீல மேனி மணி வண்ணன்
அந்தரத்தில் வாழும் * வானோர்-நாயகன் ஆய் அமைந்த
இந்திரற்கும் தம் பெருமான் * எவ்வுள் கிடந்தானே-9
1066
panNdhirukkum melviralāL * pāvai panimalarāL *
vandhirukkum mārvan * neelamEni maNivaNNan *
anNdharatthil vāzhum * vānOr nNāyaganāy amainNdha *
inNdhiraRkum thamberumān * evvuL kidanNdhānE * 2.2.9

Ragam

கமாஸ்

Thalam

ஜம்பை

Bhavam

Self

Divya Desam

Simple Translation

1066. The dark-colored god, shining like a diamond, who embraces on his chest the beautiful Lakshmi who has soft fingers and plays with a ball is the god of the gods in the sky and the king of the gods Indra. He rests on the snake bed on the ocean in Thiruyevvul.

Word by word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion. Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
பந்து இருக்கும் பந்து பிடித்த; மெல் விரலாள் மெல்லிய விரல்களையுடைய; பனி மலராள் குளிர்ந்த தாமரையில்; பாவை பிறந்த மஹாலக்ஷ்மி; வந்து இருக்கும் வந்து நித்யவாஸம் பண்ணும்; மார்வன் மார்பையுடைய; நீல மேனி நீல மேனி; மணி வண்ணன் மணி வண்ணனும்; அந்தரத்தில் சுவர்க்கத்தில்; வாழும் வாழ்கின்ற; வானோர் தேவர்களுக்கு; நாயகன் ஆய் அமைந்த தலைவனாக இருக்கும்; இந்திரற்கும் இந்திரனுக்கும்; தம் பெருமான் ஸ்வாமியான நம் பெருமான்; எவ்வுள் திருவள்ளூரில்; கிடந்தானே பள்ளிகொண்டுள்ளார்
pandhu ball; irukkum present; mel tender; viralAL having fingers; pani cool; malarAL having lotus flower as her birth place; pAvai periya pirAttiyAr who is having femininity with shyness, innocence, fear, humility; vandhu arriving from that flower; irukkum eternally residing; mArvan having the divine chest; neelam like a dark kuvaLai flower; mEni having physical beauty; maNi like a gem; vaNNan having the nature of simplicity; andharaththil in svargam (heaven); vAzhum living; vAnOr for dhEvathAs; nAyaganAy being the leader; amaindha who is present; indhiraRkum for indhra too; perumAn one who is the lord; evvuL kidandhAnE is reclining in thiruvevvuL.

PT 2.2.10

1067 இண்டைகொண்டுதொண்டரேத்த எவ்வுள் கிடந்தானை *
வண்டுபாடும்பைம்புறவின் மங்கையர்கோன்கலியன் *
கொண்டசீரால்தண்தமிழ்செய்மாலை ஈரைந்தும்வல்லார் *
அண்டமாள்வதுஆணை அன்றேல்ஆள்வர் அமருலகே. (2)
1067 ## இண்டை கொண்டு தொண்டர் ஏத்த * எவ்வுள் கிடந்தானை
வண்டு பாடும் பைம் புறவின் * மங்கையர்-கோன் கலியன்
கொண்ட சீரால் தண் தமிழ் செய் மாலை * ஈர் ஐந்தும் வல்லார்
அண்டம் ஆள்வது ஆணை * அன்றேல் ஆள்வர்-அமர் உலகே-10
1067. ##
iNdai koNdu thoNdarEttha * evvuL kidanNdhānai *
vaNdu pādum paimbuRavil * mangkaiyarkONn kaliyan,
koNda seerāl thaNthamizhmālai * eerainNdhum vallār *
aNdam āLvathu āNai * anREl āLvar amar ulagE * (2) 2.2.10

Ragam

கமாஸ்

Thalam

ஜம்பை

Bhavam

Self

Divya Desam

Simple Translation

1067. Kaliyan the king of Thirumangai surrounded with flourishing fields swarming with bees composed a garland of ten beautiful Tamil pāsurams on the god who rests on the ocean and is worshiped in Thiruyevvul by devotees who carry flowers garlands. If devotees learn and recite these pāsurams, they will rule this earth and they will go to the spiritual world of the gods and rule there. This is a promise.

Word by word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion. Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
தொண்டர் தொண்டர்கள்; இண்டை மலர் மாலைகளை; கொண்டு ஸமர்ப்பித்து; ஏத்த வணங்கும்படியாக; எவ்வுள் திருவள்ளூரிலே; கிடந்தானை இருந்தவனைக் குறித்து; வண்டு பாடும் வண்டுகள்பாடும்; பைம் பரந்த; புறவின் சோலைகளையுடைய; மங்கையர் கோன் திருமங்கைத் தலைவன்; கலியன் திருமங்கை ஆழ்வார்; கொண்ட மனதில் தோன்றிய; சீரால் பகவத் விஷயங்களை; தண் தமிழ் செய் ஈரச்சொற்களால் பாடிய; மாலை பாசுரங்களான; ஈரைந்தும் இப்பத்துப் பாசுரங்களையும்; வல்லார் கற்கவல்லவர்கள்; அண்டம் இந்த உலகத்தை; ஆள்வது ஆணை ஆளப் போவது நிச்சயம்; அன்றேல் இல்லாவிட்டால்; ஆள்வர் அமர் உலகே பரமபதத்தை ஆள்வர்
iNdai flower garlands; koNdu offering at the divine feet; thoNdar SrIvaishNavas; Eththa to be praised by; evvuL in thiruvevvuL; kidandhAnai on the one who mercifully rested; vaNdu beetles; pAdum humming; pai vast; puRavil having surrounding areas; mangaiyar kOn the king of the residents of thirumangai region; kaliyan thirumangai AzhwAr; koNda sIr his auspicious qualities which are held in the heart; thaN wet (compassionate); thamizhAl in thamizh language; sey mercifully spoke; mAlai in the form of a garland; Iraindhum these ten pAsurams; vallAr those who can learn; aNdam this oval shaped universe under the control of brahmA; ALvadhu ruling over; ANai is certain;; anREl if that is not desired; amar ulagu paramapadham; ALvar will get to rule.

NMT 36

2417 நாகத்தணைக்குடந்தை வெஃகாதிருவெவ்வுள் *
நாகத்தணையரங்கம் பேரன்பில் * - நாகத்
தணைப்பாற்கடல்கிடக்கும் ஆதிநெடுமால் *
அணைப்பார்கருத்தனாவான்.
2417 ## நாகத்து அணைக் குடந்தை * வெஃகா திரு எவ்வுள் *
நாகத்து அணை அரங்கம் பேர் அன்பில் ** - நாகத்து
அணைப் பாற்கடல் கிடக்கும் * ஆதி நெடுமால் *
அணைப்பார் கருத்தன் ஆவான் (36)
2417. ##
nNāgaththaNaik kudandhai * veqkā thiruvevvuL *
nNāgaththaNai arangam pEranbil *
nāgaththaNaip pāRkadal kidakkum * ādhi nedumāl *
aNaippār karuththan āvān. 36

Ragam

அடாணா

Thalam

அட

Bhavam

Self

Simple Translation

2417. The ancient Nedumāl lovingly rests on the snake bed in Kudandai, in Thiruvekka, in Thiruyevvul, Thirupper (Koiladi) in Srirangam, in Thiruanbil and on the milky ocean. If devotees embrace him, he will enter their hearts too.

Word by word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion. Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
ஆதி மூல காரணனான; நெடுமால் பெருமான்; அணைப்பார் பக்தர்களின் உள்ளத்தில்; கருத்தன் ஆவான் பிரவேசிப்பதற்காக; நாகத்து அனந்தாழ்வானாகிற; அணை படுக்கையின் மேல்; குடந்தை திருக்குடந்தையிலும்; வெஃகா திருவெஃகாவிலும்; திரு எவ்வுள் திருவள்ளூரிலும்; நாகத்து அனந்தாழ்வானாகிற; அணை படுக்கையின் மேல்; அரங்கம் திருவரங்கத்திலும்; பேர் திருப்பேர் நகரிலும்; அன்பில் அன்பில் என்னும் திருப்பதியிலும்; நாகத்து அனந்தாழ்வானாகிற; அணை படுக்கையின் மேல்; பாற்கடல் பாற்கடலிலும்; கிடக்கும் பள்ளி கொண்டிருக்கின்றான்
nAgaththu aNai on top of the mattress of thiruvananthAzhwAn (AdhiSEshan); kudandhai at thirukkudandhai (present day kumbakONam); vehkA at thiruvekka (in kAnchIpuram); thiru evvuL at thiruvevvuLUr (present day thiruvaLLUr); nAgaththaNai on top of the mattress of thiruvananthAzhwAn; arangam at thiruvarangam (SrIrangam); pEr at thiruppEr (dhivyadhEsam kOviladi, near thiruchchi); anbil at thiruvanbil (near thiruchchi); nAgaththu aNai atop AdhiSEshan; pARkadal at thiruppARkadal (milky ocean); Adhi nedumAl sarvESvaran (lord of all) who is the cause for the worlds; kidakkum is reclining; aNaippAr karuththan AvAn in order to enter the hearts of followers

PTM 17.61

2773 மாமலர்மேல் அன்னம்துயிலும் அணிநீர்வயலாலி *
என்னுடையவின்னமுதை எவ்வுள் பெருமலையை *
கன்னிமதிள்சூழ் கணமங்கைக்கற்பகத்தை *
மின்னையிருசுடரை வெள்ளறையுள்கல்லறைமேற்
பொன்னை * மரதகத்தைப் புட்குழியெம்போரேற்றை *
மன்னுமரங்கத்துஎம்மாமணியை * -
2773 மா மலர்மேல் அன்னம் துயிலும் அணி நீர் வயல் ஆலி *
என்னுடைய இன் அமுதை எவ்வுள் பெரு மலையை *
கன்னி மதிள் சூழ் கணமங்கைக் கற்பகத்தை *
மின்னை, இரு சுடரை, வெள்ளறையுள் கல் அறைமேல்
பொன்னை * மரதகத்தை புட்குழி எம் போர் ஏற்றை *
மன்னும் அரங்கத்து எம் மா மணியை * 63
māmalarmEl-annam thuyilum aNin^eer vayalāli, *
ennudaiya innamudhai evvuL perumalaiyai, * (2)
kanni madhiLsoozh kaNamangaik kaRpagatthai, *
minnai irusudarai veLLaRaiyuL kallaRaimEl-
ponnai, * marathagatthaip putkuzhi em pOrERRai, *
mannum arangatthu em māmaNiyai, * (63)(2)

Ragam

நாதநாமக்ரியை

Thalam

ஆதி

Bhavam

Nāyaki (lovelorn lady)

Simple Translation

2773. my sweet nectar and the god of Thiruvayalāli (Thiruvāli) surrounded with beautiful water where swans sleep. Strong as a mountain, he is the god of Thiruyevvul, and generous as the karpagam tree, and the god of Thirukkannamangai surrounded with strong forts. He is lightning, the bright sun and moon and the god of Thiruvellarai. As precious as gold, he is the god of Thirukkallarai. Gold and emerald, a fighting bull, he is the god of Thiruputkuzhi. He, the god of everlasting Srirangam shines like a precious diamond. (63)

Word by word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion. Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
மா மலர் மேல் சிறந்த தாமரைப் பூக்களின் மேல்; அன்னம் துயிலும் அன்னப்பறவைகள் உறங்கும்; அணி நீர் அழகிய நீர் நிறைந்த; வயல் வயல்களை உடைய; ஆலி திருவாலியில் இருக்கும்; என்னுடைய என்னுடைய; இன் அமுதை இனிய அமுதம் போன்றவனும்; எவ்வுள் பெரு திருவெவ்வுளுரில் பெரிய; மலையை மலை போன்றவனும்; கன்னி மதிள் சூழ் மதில்களாலே சூழப்பட்ட; கணமங்கை திருக்கண்ணமங்கையில்; கற்பகத்தை கற்பக விருக்ஷம் போல் இருப்பவனும்; மின்னை மின்னலைஒத்த ஒளியுள்ளவனாயிருப்பவனும்; இரு சூரிய சந்திரன் போன்ற ஒளியுள்ள; சுடரை சக்கரத்தை உடையவனும்; வெள்ளறையுள் திருவெள்ளறையில்; கல் அறைமேல் கருங்கல் மயமான ஸந்நிதியில்; பொன்னை பொன் போன்ற ஒளியுடனும்; மரதகத்தை மரகத பச்சை போன்ற வடிவுடன் இருப்பவனும்; புட்குழி திருப்புட் குழியிலே இருக்கும்; எம் போர் ஏற்றை போர் வேந்தன் போன்றவனும்; அரங்கத்து திருவரங்கத்தில்; மன்னும் இருப்பவனான எம்பெருமான்; எம் மா நீலமணிபோன்று; மணியை விளங்குகிறவனை
mAmalar mEl annam thuyilum swans sleeping on distinguished lotus flowers; aNi nIr vayal Ali thiruvAli, the divine abode, which has (agricultural) fields, full of water; ennudaiya innamudhai the supreme enjoyer, who is giving me dharSan (for me to worship); evvuL perumalaiyai one who is reclining at thiruvevvuL (present day thiruvaLLUr) as if a huge mountain were reclining; kanni madhiL sUzh kaNamangai kaRpagaththai one who is dwelling mercifully like a kalpaka vruksham (wish-fulfilling divine tree) at thirukkaNNamangai which is surrounded by newly built compound wall; minnai one who has periya pirAtti (SrI mahAlakshmi) who is resplendent like lightning; iru sudarai divine disc and divine conch which appear like sUrya (sun) and chandhra (moon); veLLaRaiyuL at thiruveLLaRai; kal aRai mEl inside the sannidhi (sanctum sanctorum) made of stones; ponnai shining like gold; maradhagaththai having a greenish form matching emerald; putkuzhi em pOr ERRai dwelling in [the divine abode of] thirupputkuzhi, as my lord and as a bull ready to wage a war; arangaththu mannum residing permanently at thiruvarangam; em mAmaNiyai one who we can handle, like a blue gem