24

Thiru Sirupuliyur

திருசிறுபுலியூர்

Thiru Sirupuliyur

Chirupuliyur

ஸ்ரீ திருமாமகள் ஸமேத ஸ்ரீ அருமாகடல் ஸ்வாமிநே நமஹ

This Divya Desam is known for its unique combination of humility and grandeur. Though the place may seem small in comparison to others, the Lord’s compassion is boundless, earning Him the name "Arulmakadal" (Ocean of Mercy).

Located near Kollumangudi on the route from Mayiladuthurai to Peralam, this beautiful temple is nestled amid scenic fields. + Read more
திவ்யதேசத்தின் பெயரில் தான் சிறியது இருக்கிறதே தவிர, எம்பெருமானின் கருணையில் மிகப்பெரிய கடல். ஆம், எம்பெருமானின் திருநாமம், அருள்மாகடல்.

மயிலாடுதுறையில் இருந்து பேரளம் செல்லும் வழியில் கொல்லுமாங்குடி அருகில் இந்த திவ்யதேசம் இருக்கிறது. சுற்றிலும் அருமையான வயல்வெளிகளுக்கு இடையே + Read more
Thayar: Sri Thirumāmagal Nāchiyār
Moolavar: Arulmākadal, Salasayana Perumāl
Utsavar: Kripā Samudra Perumāl
Vimaanam: Nandavarthana
Pushkarani: Mānasa, Anandhasaras
Thirukolam: Sayana (Reclining)
Direction: South
Mandalam: Chozha Nādu
Area: Maayavaram
State: TamilNadu
Aagamam: Pāncharāthram
Sampradayam: Thenkalai
Timings: 7:00 a.m. to 12:00 noon 5:00 p.m. to 8:00 p.m.
Search Keyword: Chirupuliyur
Mangalāsāsanam: Thirumangai Āzhvār
Tamil
Simplified
English
Verse info
Synonyms
Translation

PT 7.9.1

1628 கள்ளம்மனம்விள்ளும்வகை கருதிக்கழல்தொழுவீர் *
வெள்ளம்முதுபரவைத் திரைவிரிய * கரையெங்கும்
தெள்ளும்மணிதிகழும் சிறுபுலியூர்ச்சலசயனத்
துள்ளும் * எனதுள்ளத்துள்ளும் உறைவாரையுள்ளீரே. (2)
1628 ## கள்ளம் மனம் விள்ளும் வகை * கருதிக் கழல் தொழுவீர் *
வெள்ளம் முது பரவைத் * திரை விரிய ** கரை எங்கும்
தெள்ளும் மணி திகழும் * சிறுபுலியூர்ச் சலசயனத்து
உள்ளும் * எனது உள்ளத்துள்ளும் * உறைவாரை உள்ளீரே-1
1628. ##
kaLLam maNnam viLLum vagai * karudhikkazhal thozhuvIr *
veLLam mudhuparavaith * thirai viriya * karai yeNGgum-
theLLum maNithigazhum * chiRu puliyoorch chalachayaNnath-
thuLLum * eNnathu uLLaththuLLum * uRaivārai uLLIrE * . (2) 7.9.1

Ragam

அபரூப

Thalam

ஆதி

Bhavam

Self

Saranagathi

Simple Translation

1628. O devotees! Think of removing evil thoughts from your mind and worship the ankleted feet of the lord who stays in your heart and in the temple Salasayanam in Chirupuliyur where the clear waves of the ocean bring shining jewels and spread them on the beaches. Think of him.

Word by word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion. Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
கள்ளம் இறைவனின் ஆத்மாவை; மனம் தனது என்று நினைக்கும்; விள்ளும் வகை கருதி எண்ணத்தை நீக்கி; கழல் எம்பெருமானின் திருவடிகளைத்; தொழுவீர்! தொழுபவர்களே; வெள்ளம் முது பரவை அலை கடலின் பிரவாகம்; திரை விரிய கரைகளில்; கரை எங்கும் எங்கும் பரவ; தெள்ளும் அவ்வலைகளினால்; மணி திகழும் தள்ளப்படும் மணிகள்; சிறுபுலியூர் சிறுபுலியூரில்; சலசயனத்து உள்ளும் ஜல சயனத்துள்ளும்; எனது உள்ளத்துள்ளும் எனது உள்ளத்துள்ளும்; உறைவாரை இருக்கும் பெருமானை; உள்ளீரே சிந்தனை செய்யுங்கள்

PT 7.9.2

1629 தெருவில்திரிசிறுநோன்பியர் செஞ்சோற்றொடுகஞ்சி
மருவி * பிரிந்தவர்வாய்மொழி மதியாதுவந்தடைவீர் *
திருவிற்பொலிமறையோர் சிறுபுலியூர்ச்சலசயனத்து *
உருவக்குறளடிகள் அடியுணர்மின்உணர்வீரே.
1629 தெருவில் திரி சிறு நோன்பியர் * செஞ் சோற்றொடு கஞ்சி
மருவி * பிரிந்தவர் வாய்மொழி * மதியாது வந்து அடைவீர் **
திருவில் பொலி மறையோர் * சிறுபுலியூர்ச் சலசயனத்து *
உருவக் குறள் அடிகள் அடி * உணர்மின்-உணர்வீரே-2
1629
theruvil thirichiRu nNONnbiyar * chenchORRodu kanchi-
maruvi * pirinNthavar vāymozhi * madhiyādhu vanNdhadaivIr *
thiruviR polimaRaiyOr * chiRupuliyoorch chalachayaNnaththu *
uruvak kuRaLadigaL adi * uNarmiNn uNarvIrE 7.9.2

Ragam

அபரூப

Thalam

ஆதி

Bhavam

Self

Saranagathi

Simple Translation

1629. Do not listen to the preaching of the Jains who vow to wander on the streets and beg for rice and porridge. Come and worship the feet of the god, the dwarf who stays in the temple in Salasayanam in Chirupuliyur where renowned Vediyars recite the Vedās and worship his feet.

Word by word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion. Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
தெருவில் திரி தெருவில் திரிபவர்களும்; சிறு நோன்பியர் அல்ப விரதத்தை உடையவர்களும்; செஞ் சோற்றொடு அழகிய தயிர் சோற்றையும்; கஞ்சி மருவி கஞ்சியையும் உண்ண விரும்பி; பிரிந்தவர் வைதிக கோஷ்டியில் சேராதவர்களின் ஜைனர்; வாய் மொழி மதியாது பேச்சுகளை திரஸ்கரித்து விட்டு; வந்து அடைவீர் எம்பெருமானை வந்து அடைவீர்; திருவில் பொலி செல்வம் நிறைந்த; மறையோர் வைதிகர்கள் வாழும்; சிறுபுலியூர் சிறுபுலியூர்ச்; சலசயனத்து ஜல சயனத்தில்; உருவக் குறள் அழகிய வாமநனாயிருக்கும்; அடிகள் அடி பெருமானின் திருவடிகளை; உணர்மின் வணங்க விரும்பினீர்களாகில்; உணர்வீரே தியானம் செய்யுங்கள்

PT 7.9.3

1630 பறையும்வினைதொழுதுஉய்ம்மினீர் பணியும்சிறுதொண்டீர் *
அறையும்புனல்ஒருபால் வயல்ஒருபால் பொழில்ஒருபால் *
சிறைவண்டினமறையும் சிறுபுலியூர்ச்சலசயனத்து
உறையும் * இறையடியல்லது ஒன்றுஇறையும்அறியேனே.
1630 பறையும் வினை தொழுது உய்ம்மின் நீர் * பணியும் சிறு தொண்டீர் *
அறையும் புனல் ஒருபால் வயல் * ஒருபால் பொழில் ஒருபால் **
சிறை வண்டு இனம் அறையும் * சிறுபுலியூர்ச் சலசயனத்து
உறையும் * இறை அடி அல்லது * ஒன்று இறையும் அறியேனே-3
1630
paRaiyum viNnaithozhudhu uymmiNnIr * paNiyum chiRu thoNdIr! *
aRaiyum puNnal orupāl * vayal orupāl pozhil orupāl *
chiRaivaNdiNna maRaiyum * chiRu puliyoorch chalachayaNnaththu-
uRaiyum * iRaiyadiyallathu * oNnRu iRaiyum aRiyENnE * . 7.9.3

Ragam

அபரூப

Thalam

ஆதி

Bhavam

Self

Saranagathi

Simple Translation

1630. O devotees, worship the lord and he will remove your bad karmā. I think of nothing even for moment except the feet of the god of Salasayanam temple in Chirupuliyur surrounded with water, fields, and groves where winged bees swarm.

Word by word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion. Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
பணியும் சிறு சிற்றின்பங்களில் ஈடுபட்டுள்ள; தொண்டீர்! தொண்டர்களே!; நீர் தொழுது நீங்கள் பெருமானைத் தொழுது; உய்ம்மின் உய்யுங்கள்; வினை பறையும் பாவங்கள் தொலையும்; புனல் ஒரு பால் ஒருபக்கம்; அறையும் ஒலிக்கின்ற நீரும்; வயல் ஒரு பால் ஒருபக்கம் வயல்களும்; பொழில் ஒருபால் ஒருபக்கம் சோலைகளில்; சிறை வண்டு சிறகுகளையுடைய வண்டுகள்; இனம் அறையும் ரீ்ங்காரஞ் செய்யும்; சிறுபுலியூர் சிறுபுலியூர்ச்; சலசயனத்து ஜல சயனத்தில்; உறையும் இறை இருக்கும் பெருமானின்; அடி அல்லது திருவடிகளைத் தவிர நான்; ஒன்று இறையும் வேறொன்றை சிறிதும்; அறியேனே அறியேனே

PT 7.9.4

1631 வானார்மதிபொதியும்சடை மழுவாளியொடுஒருபால் *
தானாகியதலைவனவன் அமரர்க்கதிபதியாம் *
தேனார்பொழில்தழுவும் சிறுபுலியூர்ச்சலசயனத்து
ஆனாயனது * அடியல்லது ஒன்றுஅறியேன்அடியேனே.
1631 வான் ஆர் மதி பொதியும் சடை * மழுவாளியொடு ஒருபால் *
தான் ஆகிய தலைவன்-அவன் * அமரர்க்கு அதிபதி ஆம் **
தேன் ஆர் பொழில் தழுவும் * சிறுபுலியூர்ச் சலசயனத்து
ஆன் ஆயனது * அடி அல்லது * ஒன்று அறியேன் அடியேனே-4
1631
vāNnār madhi podhiyum chadai * mazhuvāLiyodu orupāl *
thāNnāgiya thalaivan avaNn * amararkkadhipadhiyām *
thENnār_pozhil thazhuvum * chiRupuliyoorch chalachayaNnaththu
āNnāyaNnadhu * adiyallathu * oNnRu aRiyEn adiyENnE * . 7.9.4

Ragam

அபரூப

Thalam

ஆதி

Bhavam

Self

Saranagathi

Simple Translation

1631. Thirumāl, the lord of Indra the king of gods, who keeps with him the axe-carrying Shivā with the moon that floats in the sky in his matted hair - stays in the temple Salasayanam in Chirupuliyur surrounded with groves dripping with honey. I do not know anything but the feet of him, the cowherd.

Word by word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion. Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
ஒருபால் சரீரத்தின் ஒரு பாகத்தில் இருப்பவனாய்; வான் ஆர் மதி ஆகாசத்திலிருக்கும் சந்திரனை; பொதியும் சடை ஜடையில் தரித்தவனாய்; மழுவாளியோடு மழுவேந்திய ருத்ரனோடு; அமரர்க்கு தேவர்கள் தலைவன்; அதிபதியாம் இந்திரனும் தானேயாய்; தான் ஆகிய தானே அவர்களை சரீரமாக உடையவனாய்; தலைவன் அவன் தலைவனான பெருமான்; தேன் ஆர் தேன் நிறைந்த; பொழில் தழுவும் சோலைகள் சூழ்ந்த; சிறுபுலியூர் சிறுபுலியூர்; சலசயனத்து ஜல சயனத்தில் இருக்கும்; ஆன் ஆயனது கண்ணனது; அடி அல்லது திருவடிகளைத் தவிர; ஒன்று வேறு ஒன்றையும்; அறியேன் அடியேனே நான் அறியேன்

PT 7.9.5

1632 நந்தாநெடுநரகத்திடை நணுகாவகை * நாளும்
எந்தாய்! என இமையோர்தொழுதேத்தும்இடம் * எறிநீர்ச்
செந்தாமரைமலரும் சிறுபுலியூர்ச்சலசயனத்து *
அந்தாமரையடியாய்! உன தடியேற்குஅருள்புரியே.
1632 நந்தா நெடு நரகத்திடை * நணுகா வகை * நாளும்
எந்தாய் என * இமையோர் தொழுது ஏத்தும் இடம் ** எறி நீர்ச்
செந்தாமரை மலரும் * சிறுபுலியூர்ச் சலசயனத்து *
அம் தாமரை அடியாய் * உனது அடியேற்கு அருள்புரியே-5
1632
nNanNdhā nNedunNaragaththidai * nNaNukāvagai * nNāLum-
enNdhāy! ena * imaiyOr _thozhuthEththum idam * eRinNIr-
chenNdhāmarai malarum * chiRupuliyoorch chalachayaNnaththu *
anNdhāmarai yadiyāy! * uNnathadiyERku aruL puriyE * . 7.9.5

Ragam

அபரூப

Thalam

ஆதி

Bhavam

Self

Saranagathi

Simple Translation

1632. The place where the gods in the sky come to pray and say, “Our father, give us your grace so we will not reach cruel hell” is the temple of Salasayanam in Chirupuliyur where lovely lotuses bloom in rolling waters. O lord with lovely lotus feet, give me, your slave, your grace.

Word by word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion. Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
இமையோர் நாளும் தேவர்கள் நாள்தோறும்; எந்தாய்! என எம்பெருமானே! என்று சொல்லி; தொழுது அடிபணிந்து; ஏத்தும் இடம் தொழுது துதிக்குமிடம்; எறி நீர் அலைமோதும் நீர் நிலைகளிலே; செந்தாமரை மலரும் செந்தாமரை மலரும்; சிறுபுலியூர் சிறுபுலியூர்; சலசயனத்து ஜல சயனத்தில்; அந் தாமரை அழகிய தாமரை போல; அடியாய்! திருவடிகளை உடைய; நந்தா அழிவில்லாத; நெடு நரகத்திடை பெரிய ஸம்ஸாரமான நரகத்திலே; நணுகாவகை நான் சேராதபடி; உனது அடியேற்கு உன் அடியேனான எனக்கு; அருள் புரியே அருள் புரிய வேண்டும்

PT 7.9.6

1633 முழுநீலமும்மலராம்பலும் அரவிந்தமும்விரவி *
கழுநீரொடுமடவாரவர் கண்வாய்முகம்மலரும் *
செழுநீர்வயல்தழுவும் சிறுபுலியூர்ச்சலசயனம் *
தொழுநீர்மையதுடையார் அடிதொழுவார்துயரிலரே.
1633 முழு நீலமும் மலர் ஆம்பலும் * அரவிந்தமும் விரவி *
கழுநீரொடு மடவார்-அவர் * கண் வாய் முகம் மலரும் **
செழு நீர் வயல் தழுவும் * சிறுபுலியூர்ச் சலசயனம் *
தொழு நீர்மை-அது உடையார் * அடி தொழுவார் துயர் இலரே-6
1633
muzhunNIlamum malarāmbalum * aravinNdhamum viravi *
kazhunNIrodu madavāravar * kaNvāy muga malarum *
chezhunNIrvayal thazhuvum * chiRupuliyoorch chalachayaNnam *
thozhunNIr maiyathudaiyār * adi thozhuvār _thuyarilarE * . 7.9.6

Ragam

அபரூப

Thalam

ஆதி

Bhavam

Self

Saranagathi

Simple Translation

1633. He stays in the temple Salasayanam in Chirupuliyur surrounded with flourishing fields where dark neelam, ambal and lotus flowers bloom with kazhyneer flowers like the beautiful eyes, mouths and faces of lovely women. If devotees worship the god and bow to his divine feet they will not know trouble.

Word by word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion. Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
முழு நீலமும் முழு நீலமாயிருக்கும் பூவும்; மலர் ஆம்பலும் ஆம்பல் மலர்களும்; அரவிந்தமும் தாமரைகளும்; கழுநீரொடு செங்கழுநீர்ப் பூக்களும்; விரவி மடவார் சேர்ந்து அங்குள்ள பெண்களின்; அவர் கண் கண்கள் போல்; வாய் அதரம் போலவும்; முகம் மலரும் முகம் போலவும் மலரும்; செழு நீர் செழித்த நீர்; வயல் தழுவும் நிறைந்த வயல்களினால் சூழ்ந்த; சிறுபுலியூர் சிறுபுலியூர்; சலசயனம் ஜல சயனத்திலிருப்பவனை; தொழும் வணங்குவதை; நீர்மை ஸ்வபாவமாக உடையவர்களுடைய; அது உடையார் திருவடிகளை; அடி தொழுவார் தொழுபவர்கள்; துயர் இலரே துக்கமற்றவர்கள் ஆவர்

PT 7.9.7

1634 சேயோங்குதண் திருமாலிருஞ்சோலைமலைஉறையும்
மாயா! * எனக்குரையாய்இது மறைநான்கினுளாயோ? *
தீயோம்புகைமறையோர் சிறுபுலியூர்ச்சலசயனத்
தாயோ? * உனதடியார்மனத்தாயோ? அறியேனே. (2)
1634 ## சேய் ஓங்கு * தண் திருமாலிருஞ்சோலை மலை உறையும்
மாயா * எனக்கு உரையாய் இது * மறை நான்கின் உளாயோ? **
தீ ஓம்புகை மறையோர் * சிறுபுலியூர்ச் சலசயனத்-
தாயோ? * உனது அடியார் மனத்தாயோ? * அறியேனே-7
1634. ##
chEyONGgu * thaN thirumāliruNYchOlai malai uRaiyum-
māyā * eNnakkuraiyāy idhu * maRai nNāNngiNnuLāyO? *
thIyOm pugai maRaiyOr * chiRupuliyoorch chalachayaNnath-
thāyO? * uNnathadiyār maNnaththāyO? * aRiyENnE * . (2) 7.9.7

Ragam

அபரூப

Thalam

ஆதி

Bhavam

Self

Saranagathi

Simple Translation

1634. O Māyan, you stay in the cool Thirumālirunjolai hills that rise to the sky. Tell me, are you in the four Vedās? Are you in the temple Salasayanam in Chirupuliyur where Vediyars make fire for their sacrifices? Are you in the hearts of your devotees? I do not know.

Word by word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion. Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
சேய் ஓங்கு தண் மிகவும் உயர்ந்த குளிர்ந்த; திருமாலிருஞ் திருமாலிருஞ்; சோலைமலை சோலைமலையில்; உறையும் மாயா இருக்கும் மாயனே நீ; மறை நான்கின் நான்கு வேதங்களினுள்ளே; உளாயோ? இருக்கிறாயோ?; தீ ஓம்புகை ஹோமத்தீயை வளர்க்கும் கையுடைய; மறையோர் வைதிகர்கள் வாழும்; சிறுபுலியூர்ச் சலசயனத்து சிறுபுலியூர் ஜல சயனத்து; தாயோ? கோயிலில் உள்ளாயோ?; உனது அடியார் உனது அன்பர்களின்; மனத்தாயோ? நெஞ்சிலுள்ளாயோ?; அறியேனே இது அறியேன் இதை எனக்கு; உரையாய் தெரியப் படுத்த வேண்டும்

PT 7.9.8

1635 மையார்வரிநீலம் மலர்க்கண்ணார்மனம்விட்டிட்டு *
உய்வானுனகழலே தொழுதுஎழுவேன் * கிளிமடவார்
செவ்வாய்மொழிபயிலும் சிறுபுலியூர்ச்சலசயனத்து *
ஐவாயரவணைமேல் உறையமலா! அருளாயே.
1635 மை ஆர் வரி நீலம் * மலர்க் கண்ணார் மனம் விட்டிட்டு *
உய்வான் உன கழலே * தொழுது எழுவேன் ** கிளி மடவார்
செவ்வாய் மொழி பயிலும் * சிறுபுலியூர்ச் சலசயனத்து *
ஐ வாய் அரவு-அணைமேல் * உறை அமலா அருளாயே-8
1635
maiyār varinNIlam * malarkkaNNār maNnam vittittu *
uyvāNn uNnakazhalE * thozhuthu ezhuvENn * kiLimadavār-
chevvāy mozhi payilum * chiRupuliyoorch chalachayaNnaththu *
aivāy aRāvanaimEl * uRai amalā! aruLāyE * . 7.9.8

Ragam

அபரூப

Thalam

ஆதி

Bhavam

Self

Saranagathi

Simple Translation

1635. O lord, you are pure. You rest on five-headed Adishesha on the ocean and in the temple Salasayanam in Chirupuliyur where parrots repeat the words that beautiful girls teach them. I want to control my mind that dwells on women with lined kohl-darkened eyes that are like lovely neelam blossoms and so I come to worship your ankleted feet to escape my desire.

Word by word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion. Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
கிளி மடவார் கிளிகள் பெண்களின்; செவ்வாய் சிவந்த வாயிலிருந்து வரும்; மொழி பயிலும் சொற்களை பயிலும்; சிறுபுலியூர் சிறுபுலியூர்; சலசயனத்து ஜல சயனத்தில்; ஐ வாய் ஐந்து வாயையுடைய; அரவு அணைமேல் அதிசேஷன் மேல்; உறை அமலா! சயனித்திருக்கும் அமலனே!; மை ஆர் வரி நீல மலர் கரு நெய்தல் பூ அணிந்த; கண்ணார் பெண்களின் மீது; மனம் விட்டிட்டு ஆசையை விட்டு; உய்வான் உய்வதற்காக; உன கழலே உன் திருவடிகளை; தொழுது எழுவேன் வணங்கித் தொழுகிறேன்; அருளாயே அருள் புரிய வேண்டும்

PT 7.9.9

1636 கருமாமுகிலுருவா! கனலுருவா! புனலுருவா! *
பெருமால்வரையுருவா! பிறவுருவா! நினதுருவா! *
திருமாமகள்மருவும் சிறுபுலியூர்ச்சலசயனத்து *
அருமாகடலமுதே! உனதுஅடியேசரணாமே. (2)
1636 ## கரு மா முகில் உருவா * கனல் உருவா புனல் உருவா *
பெரு மால் வரை உருவா * பிற உருவா நினது உருவா **
திரு மா மகள் மருவும் * சிறுபுலியூர்ச் சலசயனத்து *
அரு மா கடல் அமுதே * உனது அடியே சரண் ஆமே-9
1636. ##
karumāmugil uruvā! * kaNnal uruvā! puNnal uruvā *
perumāl varai uruvā! * piRavuruvā! nNiNnathuruvā! *
thirumāmagaL maruvum * chiRupuliyoorch chalachayaNnaththu *
arumā kadalamudhE! * uNnathu adiyE charaNāmE * . (2) 7.9.9

Ragam

அபரூப

Thalam

ஆதி

Bhavam

Self

Saranagathi

Simple Translation

1636. You have the color of a lovely dark cloud, the form of fire, of cool water, of a large mountain and of all other things, and you have your own form that no one else has. You, sweet as the nectar in the milky ocean, stay in the temple Salasayanam in Chirupuliyur embracing Lakshmi, the goddess of wealth. Your feet are my refuge.

Word by word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion. Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
கரு மா கறுத்த பெருத்த; முகில் உருவா! மேகம் போன்றவனே! ஆச்ரிதர்க்கு; கனல் உருவா! நெருப்பைப்போல் அனாச்ரிதர்க்கு; புனல் உருவா! நீர் உருவமுடையவனே!; பெரு மால் வரை பெரிய மலைபோன்ற; உருவா! உருவமுடையவனே!; பிற உருவா! மற்றுமுள்ள பொருள்கள் போன்றவனே!; நினது உருவா உனக்கே உரிய வடிவுடன் இருப்பவனே!; திரு மா மகள் மருவும் மார்பில் திருமகள் வாழும்; சிறுபுலியூர்ச் சலசயனத்து சிறுபுலியூர்ச் ஜல சயனத்தில்; அரு மா பெறுதற்கரிய சிறந்த; கடல் அமுதே! கடலமுதம் போன்றவனே!; உனது அடியே உன் திருவடிகளே; சரண் ஆமே அடியேனுக்கு புகலிடம்

PT 7.9.10

1637 சீரார்நெடுமறுகில் சிறுபுலியூர்ச்சலசயனத்து *
ஏரார்முகில்வண்ணன்தனை இமையோர்பெருமானை *
காரார்வயல்மங்கைக்கிறை கலியனொலிமாலை *
பாரார்இவைபரவித்தொழப் பாவம்பயிலாவே. (2)
1637 ## சீர் ஆர் நெடு மறுகில் * சிறுபுலியூர்ச் சலசயனத்து *
ஏர் ஆர் முகில் வண்ணன்-தனை * இமையோர் பெருமானை **
கார் ஆர் வயல் மங்கைக்கு இறை * கலியன் ஒலி மாலை *
பாரார் இவை பரவித் தொழப் * பாவம் பயிலாவே-10
1637. ##
chIrār nNedumaRugil * chiRupuliyoorch chalachayaNnaththu *
Erārmugil vaNNaNnthaNnai * imaiyOr _perumāNnai *
kārār vayal maNGgaikkiRai * kaliyaNnoli mālai *
pārār ivai paraviththozhap * pāvam payilāvE * . (2) 7.9.10

Ragam

அபரூப

Thalam

ஆதி

Bhavam

Self

Saranagathi

Simple Translation

1637. Kaliyan the chief of Thirumangai surrounded with flourishing fields composed a Tamil garland of pāsurams with music, praising the dark cloud-colored god of the gods of the Salasayanam temple in Chirupuliyur that has long beautiful streets. If devotees recite these pāsurams and worship the lord the results of their karmā will be removed.

Word by word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion. Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
சீர் ஆர் நெடு மறுகில் நீண்ட திருவீதிகளை யுடைய; சிறுபுலியூர் சிறுபுலியூர்; சலசயனத்து ஜல சயனத்திலிருக்கும்; ஏர் ஆர் முகில் அழகிய மேகம் போன்ற; வண்ணன் தனை நிறமுடையவனை; இமையோர் தேவர்களின்; பெருமானை தலைவனைக் குறித்து; கார் ஆர் வயல் கருத்த வயல்களையுடைய; மங்கைக்கு திருமங்கைக்கு; இறை கலியன் தலைவரான திருமங்கை ஆழ்வார்; ஒலி மாலை அருளிச்செய்த பாசுரங்களை; பாரார் இவை பரவி உலகத்தவர்கள் அனுஸந்தித்து; தொழ தொழுமளவில்; பாவம் பயிலாவே பாவம் நில்லாதே