PT 1.2.5

திருப்பிருதியைத் தேவர்கள் தொழுகின்றனர்

962 கரைசெய்மாக்கடல் கிடந்தவன் *
கனைகழல் அமரர்கள் தொழுதேத்த *
அரைசெய்மேகலை அலர்மகளவளொடும் *
அமர்ந்த நலிமயத்து **
வரைசெய்மாக்களிறு இளவெதிர் வளர்முளை*
அளைமிகுதேன் தோய்த்து *
பிரசவாரிதன்னிளம்பிடிக்கு அருள்செயும்*
பிரிதிசென்றடைநெஞ்சே!
PT.1.2.5
962 karai cĕy māk kaṭal kiṭantavaṉ * kaṉai kazhal amararkal̤ tŏzhutu etta *
arai cĕy mekalai alarmakal̤ aval̤ŏṭum * amarnta nal imayattu **
varaicĕy māk kal̤iṟu il̤a vĕtir val̤ar mul̤ai * al̤ai miku teṉ toyttu *
piraca vāri taṉ il̤am piṭikku arul̤cĕyum * piriti cĕṉṟu aṭai nĕñce! (5)

Ragam

Aṭāṇa/ அடாணா

Thalam

Ādi / ஆதி

Bhavam

Self

Simple Translation

962. Sriman Narayana, whose anklets resound with divine music, Worshipped by the gods who bow at His feet, Once dwelled on the vast ocean, With Mahalakshmi on the lotus, decked in a shining Mekalai, Created a shore, so that all could reach Him with ease. He now dwells with Mahalakshmi in the sacred Himalayas, Where mighty mountain-like tuskers pluck young bamboo shoots, Dip them in wild honey, And feed their tender calves with love. Go, O heart, and reach Thiruppirithi!

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
நெஞ்சே! ஓ மனமே!; கனை ஆபரணங்களால்; கழல் ஒலிசெய்கின்ற திருவடிகளை; அமரர்கள் தேவர்கள்; தொழுது ஏத்த வணங்கி துதிக்கும்படியாக; கரை தானே கரை; செய் செய்துகொண்டு அடங்கிய; மாக் கடல் பெரிய கடலிலே; கிடந்தவன் சயனித்திருக்கும் எம்பெருமான்; அரை செய் இடுப்பில்; மேகலை மேகலை அணிந்தவளான; அலர்மகள் தாமரையில்; அவளொடும் தோன்றிய மஹாலக்ஷ்மியோடு; அமர்ந்த இருக்கும்; நல் இமயத்துள் நல்ல இமயமலையின்; வரைசெய் மாக் மலைபோன்ற பெரிய; களிறு ஆண் யானைகள்; இள வெதிர் இளசான மூங்கில்களின்; வளர் முளை முளைகளை; அளை மிகு பிடுங்கி தேன் கூட்டிலுள்ள; தேன் தோய்த்து தேனிலே தோய்த்து; பிரச வாரி தேன்கூட்டோடு தேன்வெள்ளத்தை; தன் இளம் பிடிக்கு தன் குட்டிகளுக்கு; அருள்செயும் கொடுக்குமிடமான; பிரிதி சென்று அடை திருப்பிரிதி சென்று வணங்குக
kanai resounding (by the ornaments); kazhal divine feet; amarargal̤ brahmā et al; thozhudhu worship; ĕththa to be praised; karai sey not breaching the shore; vast; kadal in thiruppāṛkadal (milk ocean); kidandhavan sarvĕṣvaran who is mercifully reclining; mĕgalai having divine garment; alar magal̤ aval̤ŏdum with periya pirātti who was born in lotus flower; amarndha firmly residing; nal distinguished; imayaththu in himavān; varai sey resembling a mountain; having huge form; kal̤iṛu elephants; il̤am young; vedhir bamboo-s; val̤ar grown very tall; mul̤ai sprouts (pulling them); al̤ai in the caves; migu filled; thĕn honey; thŏyththu dip; pirasam with the beehive; vāri that honey; than il̤am pidikku for their calves; arul̤ seyum giving; piridhi in thiruppiridhi; senṛu go; nenjĕ ŏh mind!; adai try to reach